ஜீவனுள்ள சாட்சி – ( மே .26.2021 )

என் பெயர் கெனிட் அட்லின் , என் அம்மாவிற்க்கு சில நாட்களாக தலைவலி இருந்த வந்தது மருத்துவமனைக்கு சென்றோம் இரத்த அழுத்தம் ( Blood pressure ) அதிகமாக உள்ளது என்றார்கள் . ஒரு நாள் இரவு 8 மணியளவின் திடிறென்று என் அம்மா மயங்கி விழுந்துவிட்டார்கள் . அப்போழுது எதிர்பாராத விதத்தில் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்துவிட்டார்கள் . உடனே ( மே .26.2021 ) இல் அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றோம் , தலையில் அடி பட்டதினால் இரத்த கசைவு உண்டாகிவிட்டது . அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை . மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது என்று திகைத்து நின்றோம் , லேசர் மூலம் தலையில் துவாரம்யிட்டு சிகிச்சை செய்வதாக மருத்துமனையில் கூறினார்கள் , அப்படி முடியவில்லை என்றால் தலையை பிரிக்கவேண்டிய கூழ்நிலைவரும் என்றார்கள் . நானும் என் குடும்பத்தாரும் மிகவும் கழங்கினோம். ஆனால் இயேசு எங்களை கைவிடவில்லை . லேசர் மூலம் செய்யத சிகிச்சையில் இயேசு என் அம்மாவிற்கு அற்புதம் செய்தார் . எல்லாருடைய ஜெபம் எங்களை தாங்கியது , கர்த்தருடைய பெரிதான கிருபையினால் என் அம்மா இன்று வரை நலமாகயிருக்கிறார்கள் .

இதுமட்டுமில்லாமல் என் அப்பா இருதய நோயினால் பாதிக்கப்பட்டு விட்டார்கள் , அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம் . கொரானா தாக்கம் அதிகமான நேரங்கள் அது . ஆனாலும் என் குடும்பத்தை தேவன் கண்மணிபோல காத்துவந்தார் . கிட்டத்தட்ட 22 நாட்கள் கொரானா நோயாளிகள் மத்தியில் மருத்துவமனையில் இருந்தோம் , ஆனால் என் குடும்பத்திற்கு எந்த சேதமும் , தொற்றும் வராமல் தேவன் கிருபையாய் பாதுகாத்தார் . இயேசுவுக்கு ஸ்தோத்திரம் .

இந்த சமயத்தில் என் அப்பாவும் அன்னனும் மருத்துவமனையில் இருந்தார்கள் நானும் என் தாயாரும் என் உறவினர் வீட்டில் இருந்தோம் . என் உறவினர்கள் என்னை மாதாவிடம் மண்ணிப்பு கேள் என்று சொன்னார்கள் . என் குடும்பம் கத்தோலிக்க பின்னனியத்தை சார்ந்தவர்கள் . ஆனால் நானும் என் குடும்பத்தாரும் இயேசுவை சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டோம் .

நாங்கள் இயேசுவை இரட்சராக ஏற்றுகொண்டதினால் இவ்வளவு பாடுகள் என்று கூறினார்கள் . நான் மிகவும் குலம்பிபோனேன் . அந்த சமயம் இயேசுவை நோக்கி ஜெபம் செய்தேன் , இயேசுவே என்னோடும் பேசும் என்று கேட்டேன் . அப்போழுது தேவன் யோபுவின் மனைவியை எனக்கு நியாபகம் படுத்தினார் . ஜெபம் செய்தபிறகு வேதத்தை எடுத்து யோபு 4 : 3-6 , யோபு 5 : 7-9 , 17-19 ஆகிய வசனங்களை வாசித்தேன் .

“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் , எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிரார்.”

இந்த வசனம் மூலம் இயேசு என்னோடு பேசினார் . தேவன் தாமே இந்த சாட்சியை ஆசீர்வதிப்பாராக ஆமென் .

Thank you

Sister. S. கெனிட் அட்லின்