உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். யாக் : 5 : 13

இந்தக் குறிப்பில் யாக்கோபு நிருபத்தில் ஒரு வார்த்தையான
” உங்களில் ஒருவன் “ என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இதை
கவனிக்கலாம். உங்களில் ஒருவன் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் , உங்களில் ஒருவன் என்ன செய்ய வேண்டுமென்பதையும் கவனிக்கலாம்.

வேத பாடம் யாக்கோபு நிருபம்

  1. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாக இருந்தால் தேவனிடத்தில் கேட்க வேண்டும் – யாக் : 1 : 5
  2. உங்களில் ஒருவன் நாவை அடக்காமல் தேவ பக்தியுள்ளவன் என்று எண்ணினால் அவனது தேவபக்தி வீணாயிருக்கும் – யாக் : 1 : 26
  3. உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன் – யாக் : 5 : 13
  4. உங்களில் ஒருவன் மகிழ்ச்சியாய் இருந்தால் சங்கீதம் பாடக்கடவன் – யாக் : 5 : 13
  5. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் எண்ணெய் பூசி ஜெபம்பண்ணகடவன் – யாக் : 5 : 14
  6. உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகினால் மற்றொருவன் திரும்பவேண்டும் – யாக் : 5 : 19
  7. உங்களில் ஒருவன் சமாதானத்தோடு போங்கள் – யாக் : 2 : 16

இந்தக் குறிப்பில் உங்களில் ஒருவன் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி உங்களில் ஒருவன் எப்படியிருக்க வேண்டும் என்றும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur