ஒரு இடத்தில் எழும்பியுள்ள சின்ன திருச்சபையோ பெரிய திருச்சபையோ அதற்கு பின்னால் ஒரு போதகரின் திரளான கண்ணீர் இருக்கின்றது .. அவர் அடைந்த அவமானங்கள் இருக்கின்றது.. அவரின் பசியுள்ள நாட்கள் இருக்கின்றது.. கைவிடபட்ட சூழ்நிலைகள் இருக்கின்றது..

உடன் இருந்தோரின் துரோகங்கள் இருக்கின்றது.. கால் வலிக்க நடந்த நடைகள் இருக்கின்றது.. பெட்ரோல் இன்றி வண்டியை தள்ளி வந்த பாதைகள் இருக்கின்றது.. மழையில் நனைந்தும் , வெயிலில் அலைந்தும் வந்த வியாதிகள் இருக்கின்றது.. போர்வையின்றி குளிரில் புரண்ட நாட்கள் இருக்கின்றது ..

பிள்ளைக்கு பாலும், மருந்தும் வாங்க இயலாமல் துடித்த காலங்கள் இருக்கின்றது.. வீட்டவரின் கிழிச்சலான உடைகளை மாற்றிட முடியாத உள்ளக்குமுறல் இருக்கின்றது.. பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத, பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் போன காலங்கள் ஏன் அவர்களையே மரிக்க கொடுத்த வலிகள் இருக்கின்றது ..

வளர்ந்த தலைவர்கள் மூலம் வந்த சோதனைகள் இருக்கின்றது.. சபைக்கு அருகிலிருப்பவர்களின் எரிச்சலான சண்டை, எதிர்ப்பாளரின் அடிகள் ,உதைகள் , அசிங்கமான வார்த்தைகள் இருக்கின்றது.. ஆபத்தில் சொந்த உறவுகள் கூட விசாரிக்க வராத சூழ்நிலைகள் இருக்கின்றது..

கிராமம் தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் திறந்து வேண்டும்

சபை கட்டுவதற்காக அலைந்த அலைச்சல்கள், தியாகங்கள் , ஏமாற்றபட்ட சூழ்நிலைகள் , சபையில் நிதி திரட்ட அறிவிப்பு தந்து அதை சிலர் கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி பேசிய வலிகள் இருக்கின்றது.

ஆலயம் கட்ட ஓடியபோது அரசாங்கம், காவல்துறை தந்த சோதனைகள், பயமுறுத்தல்கள் இருக்கின்றது.. கஷ்டபட்டு சம்பாதித்த ஆத்துமாக்களை அடுத்தவர் திருடி சென்ற சம்பவங்கள் இருக்கின்றது.. நம்பி மேடையேற்றிவர்களால் உண்டான குழப்பங்களால் சபை உடைக்கப்பட்ட நாட்கள் இருக்கின்றது ..

What are the reasons for not being able to pray for a long time?

சத்தியத்தை சத்தியமாய் பேசியதால் சத்துருவான காலங்கள் இருக்கிறது. கடிந்து கொண்டதால் நன்மை பெற்ற ஜனங்கள் எல்லாம் குற்றபடுத்தி விலகிய வடுக்கள் இருக்கின்றது ..

மேலும் பல சூறாவளிகளும் சுனாமிகளும் சபைக்கு விரோதமாய் எதிரிட்டு வந்தும் இன்றும் சாய்ந்திடாமலிருக்க காரணமென்ன தெரியுமா? இது தனி நபரின் சபையல்ல. என் சபையென்று இயேசுவே தன் திருவாய்மலந்து கூறியுள்ளார்.

இத்தகைய திருச்சபையை இன்று சிலர் சடுதியாக கொச்சைபடுத்தி பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ஒன்றே ஒன்று தான் சொல்ல நினைக்கின்றேன் ..

பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வதில்லை. சபை என்பது நீங்கள் நினைப்பது போல் கட்டிடமல்ல, சபையென்பது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கட்டப்பட்ட ஆத்துமாக்கள்.

இத்தகைய திருச்சபையின் மீது கரிபூச நினைக்கும் கயவர்களே.. சபை போதகர் எல்லாம் தூக்கிவைத்த கல்லுகள் அல்ல.. உளிகளாலும், சுத்தியல்களாலும் காயங்கள் சுமந்து நிமிர்ந்து நிற்கும் சிற்பங்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

இவைகள் படித்ததில் பிடித்தவை.. பல படிப்பினைகளை கொண்டவை