ராபோஜனம் (திருவிருந்து) எடுப்பவர்களுக்கு பவுலின் ஆலோசனை

ஸ்தோத்திரம்பண்ணி புசியுங்கள். 1 கொரிந்தியர் 11:24
ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். 1 கொரிந்தியர் 11:25
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

கர்த்தர் வருமளவும் செய்யுங்கள். 1 கொரிந்தியர் 11:26
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

தன்னைத்தானே சோதித்தறிந்து,புசித்து, பானம்பண்ணக்கடவன். 1 கொரிந்தியர் 11:28
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 1 கொரிந்தியர் 11:33
ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.