அரசியலா ஊழியமா?அல்லது இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

அரசியலா ஊழியமா?அல்லது இரண்டு எஜமானுக்கு ஊழியமா???

ஒரு ஊழியக்காரனை தேவன் இதற்காக தான் அழைக்கிறார். அரசியலில் சேர்ந்து நாசமாக போவதற்காக அல்ல. அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார் அப்போஸ்தலர் 26:18

நீங்கள் பிஷப்பாக இருந்தாலும் சரி..கார்டினலாக அல்லது Pastor ஆக இருந்தாலும் சரி.இது தான் தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரனின் உண்மையான அழைப்பு. மறுபடியுமாக அதே வசனத்தை நன்றாக படித்து புரிந்து கொள்ளுங்கள். இந்த காரியத்துக்கு மாறாக நீங்கள் எதை செய்தாலும் அது நம் எஜமானனுடைய சித்தத்துக்கு எதிரானதே. நீங்கள் Election ல் நில்லுங்கள் MLA ஆகுங்கள் அது உங்களது சொந்த விருப்பம்.ஆனால் சந்திப்பின் நாளிலே என் சித்தத்தை செய்தாயா என்ற எஜமானின் அதிகாரமுள்ள கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்.

அன்றைக்கு இருந்த தேசத்தின் ஆளுகை வேறு.இன்றைக்கு இருக்கும் அரசியல் சாக்கடை வேறு.இதற்காக வேதாகம வசனம் மற்றும் சம்பவங்களை கொண்டு உங்கள் கொள்கைக்கும் உலகத்துக்கு ஒத்து பேச வேண்டாம்.இயேசு பிதாவிடம் தன் சீஷர்களை குறித்து பேசும் போது

நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
யோவான் 17:16 என்றார்.

மேலும் பவுல் எழுதும் போது

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
கொலோசெயர் 3:1-3

இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் தரிக்காமல் தேவனுடைய நன்மையும் பரிபூரணமான சித்தத்தை செய்யும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.அதற்கு மாறாக நான் MLA ஆக போகிறேன்…MP ஆக போகிறேன் என்றால் அது நிச்சயமாக உலக வேஷம்,அது இந்த புதிய உடன்படிக்கை காலத்தில்.. வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுடைய அழைப்பு இல்லை.தாவீதையும் சவுலையும் நியாயாதிபதிகளையும் கொண்டு அரசியல் லாபங்களுக்காக தயவு செய்து வேதாகமத்தை புரட்டாதீர்கள்.

இந்த உலகத்தில் எதை செய்தாலும் இயேசுவின் நாமத்தில் செய்து பிதாவை மகிமைபடுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.என்பதை மறக்க வேண்டாம்.
இன்றைக்கு சில ஊழியக்காரர்கள் பணத்துக்காக அரசியல்வாதிகளிடம் விலை போய்விட்டார்கள்.இவர்கள் தங்கள் சபை ஜனங்களை காசு வாங்கி கொண்டு அரசியல் கட்சிகளிடம் விற்று போட்டார்கள்.இந்த ஜனங்களுக்கு தாங்கள் விற்க்கப்பட்டது கூட தெரியாது.BJP கட்சியினர் கிறிஸ்துவின் மகிமையான ஒளியாகிய சுவிசேஷம் பரவாதபடி அநேக சட்ட விரோதமான துணிகரமாக செய்து வருகின்றனர்.இவர்களை ஆதரிக்கிறோம் என்று சொல்கிற கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் யார் என்பதை பகுத்தறியுங்கள்.பண ஆசை எல்லா தீங்குக்கும் வேராயிருக்கிறது.
ஜனங்களை சத்தியத்தில் நடத்தும்படி நியமிக்கப்பட்டவர்கள் சுயலாபத்துக்காக குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடும் படி வற்புறுத்துகிறார்கள்.

இது தேசத்தின் சட்ட திட்டப்படி தவறானது.தேவனுடைய பார்வையில் அருவருப்பானது.இதற்கு இவர்கள் தேவனுக்கு நிச்சயம் நிச்சயம் கணக்கு கொடுக்க வேண்டும்.இவர்கள் சேர்த்த பணமே இவர்களுக்கு சாபத்தை கொண்டு வரும். இவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் இல்லை.பவுல் சொன்னது போல ஊழியக்காரனாகிய நானே ஆகாதவனாய் போகாதபடி என் சரீரத்தை ஒடுக்கி கீழ்படுத்துகிறேன் என்ற வசனத்தின் படி உலக ஆசை இச்சைகளுக்கு விலகி இடது பக்கமும் வலது பக்கமும் சாயாமல் நமக்கு நியமிக்கபட்ட ஓட்டத்தில் பொறுமையாக ஓடக்கடவோம்.
நம்முடைய பார்வை சிந்தை மற்றும் நம்முடைய இலக்கு பரலோகத்தை நோக்கி இருக்கட்டும்.நீங்கள் ஊழியம் செய்தும் பரலோகத்தை இழந்தால் அது பயங்கரமாக இருக்கும்.
ஆமென்.

மருத்துவர் /போதகர். ராதாகிருஷ்ணன், சென்னை