
இந்தக் கடைசி நாட்களில்
ஆண்டவராகிய
இயேசுகிறிஸ்துவின்
வருகைக்கு முன்,
தேவன் நம்மிடம் எதை
எதிர்பார்க்கிறார்?
இயேசுவை முதல்வர் என்று
எங்கே எழுந்திருக்கிறது
என்றுதானே கேட்கிறீர்கள்?
அவர் எல்லாவற்றிற்கும்
முந்தினவர்,
எல்லாம் அவருக்குள்
நிலைநிற்கிறது.
அவரே சபையாகிய
சரீரத்துக்குத்
தலையானவர்;
எல்லாவற்றிலும்
முதல்வராயிருக்கும்படி,
அவரே ஆதியும்
மரித்தோரிலிருந்து
எழுந்த முதற்பேறுமானவர்
(கொலோ 1:17,18)
யாக்கோபு 5: 1-6 வரை
வாசித்துப் பாருங்கள்
இயேசுவின் சகோதரர்
யாக்கோபு, எதற்கு
நாம் முன்னுரிமை
கொடுக்க வேண்டும்
என்பதை தெளிவாகக்
கூறியிருப்பதைப்
பார்க்கமுடியும்.
ஐசுவரியவான்களே,
கேளுங்கள்,
உங்கள்மேல் வரும்
நிர்ப்பந்தங்களினிமித்தம்
அலறி அழுங்கள் ( யாக்.5:1)
முன்னுரிமை
ஐசுவரியத்திற்கு அல்ல
ஆஸ்திகளைச்
சேர்ப்பதற்கும் அல்ல
ஆண்டவருக்கே
முதலிடம். கொடுக்க
வேண்டும்
ஐஸ்வரியத்தை மட்டுமே
சேர்க்கவேண்டும்
என்று வாழும்போது
உண்மையான
ஐஸ்வரியத்தை நாம்
இழந்துபோகிறோம்
போதுமென்கிற
மனதுடனே கூடிய
தேவபக்தியே
மிகுந்த ஆதாயம்
Now godliness with
contentment is great gain.
(1 தீமோத்தேயு 6:6 -10 வரை
வாசித்துப் பாருங்கள்)
உலகத்திலே நாம்
ஒன்றும் கொண்டு
வந்ததுமில்லை,
இதிலிருந்து நாம்
ஒன்றும் கொண்டுபோவது
மில்லை என்பது நிச்சயம்.
உண்ணவும் உடுக்கவும்
நமக்கு உண்டாயிருந்தால்
அது போதுமென்றிருக்கக்
கடவோம்.
ஐசுவரியவான்களாக
விரும்புகிறவர்கள்
(CBI) சோதனையிலும்
கண்ணியிலும்,
மனுஷரைக் கேட்டிலும்
அழிவிலும் அமிழ்த்துகிற
மதிகேடும் சேதமுமான
பலவித இச்சைகளிலும்
விழுகிறார்கள்.
பண ஆசை எல்லாத்
தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து,
விசுவாசத்தைவிட்டு வழுவி,
அநேக வேதனைகளாலே
தங்களை உருவக்
குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தங்களைத் தாங்களே
உருவ குத்துவதற்காக
உழைத்துக்
கொண்டிருக்கிறார்கள்
பண ஆசை எல்லா
தீமைகளுக்கும்
வேராய் இருக்கிறது.
பணமோ
எல்லாவற்றிற்கும் உதவும்.
(பிரசங்கி 10:19)
பண ஆசை
படுமோசமான
விளைவுகளை
உண்டாக்கிவிடும்
முதலாவது தேவனுடைய
ராஜ்யத்தையும்
அவருடைய நீதியையும்
தேடுங்கள் என்று ஆண்டவர்
சொல்லியிருக்கிறார்
அப்பொழுது இவைகள்
எல்லாம் உங்களுக்கு
கூட கொடுக்கப்படும்
என்கிறார்.
இவைகள், என்றால்
எவைகள்?
அஞ்ஞானிகள் நாடித்தேடும்
அத்தனையும் தேவனை
தேடும் நமக்கு கூடவே
கொடுக்கப்படும் என்கிறார்.
ஐஸ்வரியத்தை
முதன்மையாக
வைத்து வாழ்வது
அதற்காக மட்டும்
உழைப்பது என்பது
கவலைக்கு நேராகக்
கொண்டுபோகும்
அங்கே ஆராதனை
இருக்காது
கர்த்தரை தொழுதுகொள்ள
நேரம் இருக்காது
இருதயம் ஐசுவரியத்தின்
மேலே இருக்கும்.
நமக்கு தேவை என்பது
இல்லாமல் இல்லை.
நமக்கு இன்னது
தேவை என்பதை பரம பிதா
அறிந்துவைத்திருக்கிறார்.
முதலாவது தேவனுடைய
ராஜ்யத்தையும்
அவருடைய நீதியையும்
தேடுங்கள்; அப்பொழுது
இவைகளெல்லாம்
உங்களுக்குக் கூடக்
கொடுக்கப்படும்
(மத்தேயு 6: 33)
இந்த வசனத்தை
நாம் நம்முடைய வாழ்க்கையின்
அனுதின அனுபவமாக்கும்போது
அவர் நம்முடைய தேவைகளை
ஆச்சரியமாய் சந்திப்பார்
இதை நாங்கள் கடந்த 30
ஆண்டுகளுக்கு மேலாக
அறிந்து ருசித்து அனுபவித்து
வருகிறோம்.
முதல்வருக்கே முன்னுரிமை
படைத்தவருக்கே ஆராதனை
Rev. J.Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director, Literature Dept. TCN
Radio Speaker, Aaruthal FM
Nallaasaan – Award – Malaysia 2021
For Prayer : 91-77080 73718 WhatsApp