கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன?

கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன?

கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன?

பதில்: மிக சுருக்கமாக சொல்கிறேன்…

1) நற்கிரியைகளை செய்ய நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.
“நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” எபே 2:10

2) எப்படி நடக்கவேண்டும் என்று கிறிஸ்து நமக்கு அனைத்து சூழ்நிலையிலும் வாழ்ந்த நமக்கு அடிச்சுவட்டை வைத்துப்போயிருக்கிறார். 1பேது 2:21, எபி 4:15

3) பிதாவாகிய தேவனை நாம் தொழுது கொள்ளும்படி சிருஷ்டிக்கப்பட்டோம்.

ஏசா 43:7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.

சங் 100:2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.

சங் 100:3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்

4) தேவனே நம்மை நடத்துகிறவர் என்றும் கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரம் என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் கட்டளைக்கு மாத்திரம் கீழ்படியவேண்டும். பக்கத்தில் நிற்பவர் நினைப்பதற்கு என் சரீரம் கீழ்படியாதே !! என் சொந்த தலை சொல்வதை மாத்திரத்திற்கு தான் சரீரம் கீழ்படியும். அப்படியிருக்க கிறிஸ்துவின் போதனையல்லாத எந்த கட்டளைக்கும் கீழ்படியக்கூடாது என்பது தேவனுடைய நோக்கமாக இருக்கிறது !! எபே 1:23, எபே 4:15, எபே 5:30

5) உலகத்திலுள்ள தேவனுடைய கிரியைகளை ஆண்டுக்கொள்ளும்படி நமக்கு சுதந்திரம் கொடுத்தார். மிருகங்களுக்கு நாம் தலைவணங்காமல் நாம் அவைகளை ஆண்டு கொள்ள வேண்டும்.

சங் 8:4-8 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

6) எந்த சூழ்நிலையிலும் தேவனிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அன்புக்கூர கடமைப்பட்டிருக்கிறோம்.

உபா 6:5 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புக்கூருவாயாக.

மத் 10:37 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

யோ 5:23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.

பிலிப் 3:7-10 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

7) கர்த்தருடைய வசனத்தை கேட்டோம்.

அதை விசுவாசித்தோம்.

பரலோகத்திற்கு நம்மை கொண்டு போவது இயேசு கிறிஸ்து மாத்திரம் தான் என்று நம்பினோம்.

அவர் கட்டளைக்கு கீழ்படிந்து பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டோம்.

இரட்சிக்கப்பட்டு பரலோக பாதையில் வாழ்க்கையை துவங்கியுள்ளோம்.

அந்த பாதை மாறாமல் முடிவு பரியந்தம் நிலைத்து நிற்க வேண்டும். மாற்கு 13:13

பல வழிகளில் பிசாசானவன் நம்மை வழி மாற்ற முயற்சி செய்வான்.1பேது 5:8

புதிய ஏற்பாட்டில் இல்லாத எந்த கட்டளைக்கும் உடன்படாமல் தேவனை தொழுது கொள்ள வேண்டும். வேதத்தில் இல்லாத மனிதருடைய போதனைகளுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கலா 1:7-8

அவரது நித்திய திட்டத்தை நிறைவேற்ற கடவுள் நம்மை உருவாக்கினார். தனது முடிவிலா ஞானத்தில், நம்மை நித்திய திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார்.

எடி ஜோயல் சில்ஸ்பி