தமிழகத்தின் தலைசிறந்த போதகர்களில் ஒருவரும், பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் பொருளாளராக செயல்பட்டு வந்த Rev. J.J.Y. அருள் அவர்கள் தான் அதிகமாக நேசித்த தேவனிடத்தில் நேற்று (7.7.2020) இளைப்பாறும்படி மகிமைக்குள் பிரவேசித்துள்ளார்.

பாஸ்டர் அவர்கள் தேவனுடைய ஊழியத்தை நேரம் காலம் பார்க்காமல் உண்மையுடனும் உற்சாகத்துடனும் செய்து ஆயிரக்கணக்கான மக்களை இரட்சிப்புக்குள் நடத்தி, நூற்றுக்கணக்கான சபைகளை ஸ்தாபித்து, நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து, ஏராளமான சமூக சேவைகளை செய்து, தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஏறக்குறைய ஐம்பது வெளிநாடுகளிலும் சென்று சபைகளையும் போதகர்களையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி உதவிகளை செய்தவர்.

சென்னையில் மட்டுமே பெரிய பெரிய கிறிஸ்தவ நற்செய்தி கூட்டங்கள் நடைபெறும், ஆனால் உலகளாவிய நற்செய்தியாளர்களை கொண்டு மதுரையில் கூட்டங்க் நடத்தி சரித்திரம் படைத்தவர். தன்னால் இயன்றவரை தேவனுக்காக ஓடி தன் ஓட்டத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

போதகரின் மீடியா துறையில் பணியாற்றிய கலைஞர். ஜூடா அருண் (மதுரை) அவர்கள் அவரோடுள்ள தனது அனுபவத்தை மெய்சிலிக்கும் வண்ணம் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவரது ஞாபகார்த்தமாக ஒரு வர்ணணை படம் வரைந்தும் வெளியிட்டுள்ளார்.

என்னுடைய ஆரம்ப காலங்களில் போதகர் அருள் அவர்களுடைய ஆபிசில் டிசைனராக பணியாற்றிய பொழுது நடந்த ஒரு சம்பவம்.

அது மாதத்தின் தொடக்கம் சம்பளத்திற்காக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த வேளை . . . ஒரு ஊழியர் பாஸ்டரை சந்திக்க வந்திருப்பதாக சொன்னார்கள். நான் அவர் அருகில் தான் இருந்தேன். வர சொல்லுங்கள் என்றார். அவர் தன்னுடைய சபை கட்டுமான பணி பாதியில் நின்று விட்டதாகவும், குறிப்பிட்ட அளவு மூடை இருந்தால் கட்டி முடித்து ஞாயிறு ஆராதனை நடத்தி விடலாம் என்றார். உடனே பாஸ்டர் அருள் கணக்கரை அழைத்து கேட்டார் பணம் நம்மிடம் உள்ளதா என்று ? அதற்கு கணக்கர் சம்பளம் போட வேண்டிய பணம் மட்டுமே உள்ளது என்றவுடன், பாஸ்டர் அருள் எடுத்து உடனே குடுங்க ஞாயிறு ஆராதனை நடத்தட்டும் முதல்ல ன்னார். எனக்கு அதிர்ச்சியுடன், மகிழ்ச்சியே! சம்பளம் எனக்கு அன்று கிடைக்க வில்லை. ரெண்டொரு நாளில் அனைவருக்கும் தேவ கிருபையால் சந்திக்கப்பட்டு போடப்பட்டது. இது ஒரு முறை ரெண்டு முறை அல்ல!
எனக்கு இது பழக்கமான நிகழ்வாக போய்விட்டது அங்கு இருந்த வரை.

அநேக ஊழிய குடும்பங்களுக்கும், சபைகளுக்கும் ஆசீர்வாதமாக இருந்தார். படை முயற்சி கூட்டங்களை அசராது நடத்தியவர், எதையும் எதிர் கொண்டு தேவனுக்க்காய் சாதிப்பதில் வல்லவர், அநேக திட்டங்களை செயல் படுத்தி வெற்றி கண்டவர். கைவிட்டவர் எவர் வந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்தவர். இவருடைய இழப்பு கிறிஸ்தவ உலகத்திற்கு மாபெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை . . . – Judah Arun

பாடல் உலகில் பிரகாசிக்கும் ஜோசப் ஆல்ட்ரின் அவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிந்துகொண்ட விதமாவது..

This is what costed his life! He valued the hunger & lives of the hopeless and the needy more than anything and fought this good fight of faith till his last ! A true hero indeed! We really miss him but our prayer is that His family and his wife sis Malliga Arul be strengthened at this hour of grief being away from him in the US due to the lockdown.

I request all our friends to carry beloved pastor’s family in your prayers that the true comforter, the Holy Spirit , the Lord of all comfort help them stand this situation and overcome all the brokenness….

ஐயா அவர்கள் விட்டுச்சென்றிருக்கிற குடும்பத்தையும் சபையாரையும் தேவன் ஆறுதல்படுத்தவும், ஊழியத்தையும் ஸ்தாபனத்தையும் தேவன் தொடர்ந்து நேர்த்தியாக நடத்தவும் நாம் ஊக்கமாக ஜெபிப்போம்.

அன்பானவர்களே, உங்களது கட்டுரைகள், பிரசங்க குறிப்புகள், காணொளி பதிவுகளை இங்கே பதிவிடலாம். பக்திவிருத்திக்கேதுவானவைகள் விரைவில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும். சாதாரண சாமானியரின் திறமைகளும் உலக அரங்கில் பாரபட்சம்பாராது முன்னிருத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்பணியை நாங்கள் செய்து வருகிறோம். நன்றி