
1. பரலோகம் இந்த வானுலகுற்குள் (அண்டம் – பிரபஞ்சத்தில்) இல்லை.
இயேசு கிறிஸ்து தேவனால் வானிற்கு உயர்த்தப்படுகிறார்.அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, அப்போஸ்தலர் 2:33
இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். (எபேசியர் 4:10) வானங்களுக்கு மேலாக என சொல்லப்பட்டுள்ளது. ஆக நாம் காணும் வானங்களுக்குள் அல்ல. எபிரேய அர்த்தத்தில் வானங்களில் அல்ல என்கிறது. உன்னதமான ஓர் இடம். கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர், அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. (சங்கீதம் 113:4) அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. பூமியை நாம் வாழ்வதற்காக படைத்தார். வானங்கள் என்னுடையது என்கிிறார். பூமியோ நமக்கு நிரந்தரமல்ல. பரலோகமே நமக்கு நிரந்தரம். உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
(சங்கீதம் 113:5)
கர்த்தருக்குச் சமானமானவர் பூமியில் யாருமில்லை. வானமே அவர் வாசல். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்கிறோம்.. (எபிரேயர் 11:3)
2. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்வரை தற்காலிகமாக அங்கே செல்லுங்கள்.
நம் உடல் இந்த பூமிக்கு சொந்தமாகிறது. நாம் மரித்தவுடன் நம் ஆத்மா ஆவி வானத்திற்கு செல்லுகிறது. ஆத்மாவிற்க்கு அதே உருவம் உண்டு. நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். (2 கொரிந்தியர் 5:8)
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசொய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 6:8
பரலோகத்தில் இரத்தசாட்சிகள் ஆத்மா இருப்பதை காணலாம். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். (வெளிப்படுத்தின விசேஷம் 6:9)
ஆண்டவர் இயேசு வரும்போது எல்லோர் கண்களும் காணும்.. உலகின் நாலுதிசையிலுமிருப்பவர்கள் காண்பார்கள். நாலு திசையிலுமுள்ள செயற்கைகோள்கள்மூலமாக ஒளிபரப்பில் காண்பார்கள்.
இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். (வெளிப்படுத்தின விசேஷம் 1:7)
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலிப்பியர் 3:21)
3. கர்த்தர் பூமியை ஆளுவார் அப்படியே நாமும்.
கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
(1 தெசலோனிக்கேயர் 4:15) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:16)
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (1 தெசலோனிக்கேயர் 4:17) எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன். நகரம் பிடிக்கப்படும். வீடுகள் கொள்ளையாகும். ஸ்திரீகள் அவமானப்படுவார்கள். நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள். மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை.
(சகரியா 14:2)
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்.அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும் படி ஒலிவமலை தன்நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். (சகரியா 14:4) அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள். மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால் மட்டும் போகும். நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள். என் தேவனாகிய கர்த்தர் வருவார். தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். (சகரியா 14:5)
அந்நாளிலே வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.
(சகரியா 14:6) ஒருநாள் உண்டு. அது கர்த்தருக்குத் தெரிந்தது. அது பகலுமல்ல இரவுமல்ல. ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். (சகரியா 14:7) முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான், இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை, இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 20)
சீயோன் மலை: – கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாசம் செய்கிறார்
சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். (சங்கீதம் 9:11)
ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேம் பிதாவாகிய தேவன் வாசம் செய்கிறார். இது பனிபடர்ந்த மலைகள் சூழ்ந்த இடமாக மெய்யான வெண் பனி சூழ்நத இடம். பிதாவை யாரும் கண்டதில்லை. சத்தத்தை கேட்டிருக்கிறார்கள்.
பரம எருசலேம் நகரம்:
வானத்திலிருந்து இறங்கிவந்து பழைய எருசலேமை மறைத்துவிடும். ஆயிரம் வருட அரசாட்சியில் மகாராஜாவின் நகரத்தில் அமர்ந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முடியாட்சி புரிவார்.
4. புதிய பூமி – நித்திய வாழ்வு
புதிய வானத்திற்க்கு அருகிலேயே இருக்கலாம்.
அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
(வெளிப்படுத்தின விசேஷம் 20:7) பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன், அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின, அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. (வெளிப்படுத்தின விசேஷம் 20:11)
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 20:12) சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
(வெளிப்படுத்தின விசேஷம் 20:13)
வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு இரண்டாவது தீர்ப்பு அல்ல. மனிதனுக்கு ஒரே ஒரு தீர்ப்புதான். ஆயிரவருட அரசாட்சி முடிந்தவுடன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து நித்ய ஆட்சிக்கு அழைத்துச்செல்வார். அங்கு பல நிலைகள் (Levels) இருக்கும். ஒவ்வொரு நிலையும் யார்யாருக்கென தீர்ப்பு அளிக்கப்படும். வெள்ளை சிங்காசன தீர்ப்பளிக்க அதிகாரம் படைத்தவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து!