
கோதுமை மணியின் தியாகம்

நமது சபை ஊழியத்தையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ ஆரம்பிப்பது எளிதான காரியம் அல்ல. ஒரு கோதுமை மணியின் தியாகத்தில் தான் அது கட்டப்பட்டிருக்க வேண்டும்
நமது ஊழியங்களை இரண்டு காலங்களாகப் பிரித்துப் பார்ப்போம். ஆரம்ப நிலையில், பாடுகள் நிறைந்த தியாகம் நிறைந்த ஒரு இயக்கமாக இருக்குமட்டும் எந்த ஒரு விசுவாசியும் போதகரின் வாரிசு என அவர்கள் மேல் பொறாமை கொள்வதில்லை . வளர்ந்து நிறுவனமாகும் போதுதான், போதகரின் வாரிசை முன்பு இரக்கத்துடன் பார்த்த ஜனங்கள் கூட இன்று பொறாமையுடன் பார்க்கின்றார்கள்
அதாவது ஆரம்ப கால ஊழியங்களில் வாரிசுகளும் துன்பம் அனுபவிக்குமட்டும் பிரச்சனையில்லை. ஊழியம் வளர்ந்து இயக்கத்திலிருந்து ( Movement) நிறுவனமாகவும் போது ( institution ) சுகங்களை அனுபவிக்கும் இரண்டாவது காலங்களில் ,வாரிசுகளுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை , விமர்சிக்கப்படுகிறது. நான் பார்த்து வளர்ந்த சாக்லேட் பேபி எனக்குப் போதகரா? அல்லது அவனைவிட அவளைவிட ஊழியத்திலும் அனுபவித்திலும் மூத்த நான் அவனுக்கு அவளுக்கு சல்யூட் அடிப்பதா?
என்கிறார்கள்
ஆரம்ப கால பாடுகளில் பங்குபெற்று, இன்று அனுபவிக்கும் சுகமான காலங்களில், நிர்வாக அதிகாரத்தை பெற்ற வாரிசுகள், தங்கள் தரப்பு நியாயத்தை மட்டும் பார்க்காமல், குறை சொல்பவர்களின் நிலையிலிருந்து பார்த்தால் இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். குறை சொல்பவர்களும் தங்களை வாரிசுகளின் இடத்தில் வைத்துப் பார்த்தால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன்.
இப்பிரச்சனைகளை பாராமல் கண்களை மூடிக்கொண்டு இருந்துவிட்டால் , அல்லது பகிரங்கமாக விவாதிக்காவிட்டால் பிரச்சனை தானாக தீர்ந்து விடும் என நம்புகிற சபைகளுக்கும் , நிறுவனங்களுக்கும் இது விசயத்தில் தற்போது எழுப்பப்படும் கேள்விகள் எதிர்காலத்தில் பெரும் சவாலாக இருக்கும்.
Kalai Devadasan