சிம்சோன் புலம்பினான்! சிமியோன் புலவனானான்! வித்யா’வின் விண் பார்வை!

சிம்சோன் புலம்பினான்! சிமியோன் புலவனானான்! வித்யா’வின் விண் பார்வை!

சிம்சோன்
SIN ZONE ல்

சிக்கியதால்
புலம்பினான்!

சிமியோனோ 
TEMPLE ZONE
– ல்
வயதைப்
பார்க்காமல்
வலம் வந்ததால்
புலவனானான்

சிமியோனின்
கீதம் என்ன?

‘’கண்டேன் என்
கண் குளிர
கர்த்தனை இன்று
கண்டேன் என்
கண்குளிர’’


சிமியோனின் இந்த
சந்தோஷ வார்த்தைகளை
சங்கீத வார்த்தைகளாக்கி
பாட்டெழுதி பாடிப்
பரவசமடைந்தவர்
டாக்டர் D.G.S. தினகரன்
அவர்கள் 

1981 – ம் ஆண்டில்
நான் பட்டப் படிப்பில்
சேர்ந்தபோது

சோர்ந்து போகாதே
மனமே நீ
சோர்ந்து போகாதே

என்று இவர் பாடிய பாடல்
என் கண்களைக்
குளமாக்கியது
அன்று முதல் அது
என் கல்விக் கண்களை
வளமாக்கியது

அதனால் அமெரிக்கன்
கல்லூரியில்
எனது
வணிகவியல்
பட்டப்படிப்பை
தடையின்றி
முடிக்க முடிந்தது.

சிமியோன் ஓர்
சிறந்த மனிதர்
மதிப்புக்குரியவர்
நேர்மையானவர்


எருசலேம்
தேவாலயத்துக்குப்
பக்கத்தில்
பதிவிருந்தவர் 


அவருடைய இருதயம்
எருசலேம் தேவாலயத்தின்
நடுவே பதியம்
போடப்பட்டிருந்தது


மணி (Time) யையோ
Money – யையோ
பார்த்து அல்ல,

பரிசுத்தாவியின்
ஏவுதலினால்
ஆலயம் செல்லும்
பழக்கமுடையவர்


இன்றைக்கெல்லாம்
இப்படி ஒரு பேச்சு
அடிபடுகிறது

நானே ஆலயம்
எனக்கெதற்கு ஆலயம்?


இப்படியெல்லாம் பேசி
கிருபையை
போக்கடித்துவிடக்கூடாது

நீங்கள் தேவனுடைய
ஆலயமாய் இருக்கிறீர்கள்
என்று பவுல் அப்போஸ்தலன்
எழுதி வைத்ததை
தவறாக புரிந்துகொண்டதால்
உண்டான துணிச்சல்


சபை கூடிவருதலை சிலர்
விட்டுவிடுகிறதுபோல
நீங்களும் விட்டுவிடாதீர்கள்

என்று எபிரெயர் 10:25 -ல்
எழுதியிருக்கிறது

வயதில் மூத்தவர்
வாழ்நாள் முழுவதும்
வாழ்ந்துகாட்டியவர்  

எதற்காகவும்
விசுவாசத்தை
விற்றுவிடாதவர்

இறுதி மூச்சு வரை
இயேசுவின் முதலாம்
வருகை வரை
விசுவாசத்தைக்
காத்துக்கொண்ட கவிஞர்

கர்த்தருடைய கிறிஸ்துவை
நீ காணுமுன்னே
மரணமடையமாட்டாய்

என்று பரிசுத்த
ஆவியினாலே ஒரு
அறிவிப்பைப்
பெற்றிருந்தவர்
(லூக்கா 2:26)

தனக்கு சொல்லப்பட்டபடியே
கர்த்தருடைய கிறிஸ்துவை
எருசலேம் தேவாலய
நுழைவு வாசலில்
தமது கரத்தில் ஏந்தி
தேவனை ஸ்தோத்தரித்து;

ஆண்டவரே, உமது
வார்த்தையின்படி உமது
அடியேனை இப்பொழுது
சமாதானத்தோடே
போகவிடுகிறீர்

என்று சந்தோஷமாகச்
சொன்னவர்

இக்காலத்து
சிமியோனாக
இருந்தால்?


(இது எனது கற்பனை)
 
ஆண்டவரே, உமது
வார்த்தையை
கொஞ்சம் மாற்றி
எசேக்கியா ராஜாவுக்கு
பதினைந்து வருஷம்
கூட்டிக் கொடுத்ததுபோல
கூட்டிக்கொடுத்தால்
நலமாயிருக்கும்

நானும் உமக்கு
நன்றியுள்ளவனாய்
இருப்பேன் என்று
கண்ணீரோடு
ஜெபித்திருப்பார்!

சிமியோன்
சமாதானத்தோடே
போகவிடுகிறீர்
அது போதும் என்று
சொன்னது
ஆச்சரியமாயில்லையா?


தேவன் நியமித்த
எல்லையைத் தாண்டி
தொல்லையில் சிக்கி
குழியில் விழுந்து
சமாதானமில்லாமல்
சாவதை அவர்
விரும்பவில்லை


புறஜாதிகளுக்குப்
பிரகாசிக்கிற
ஒளியாகவும் உம்முடைய
ஜனமாகிய இஸ்ரவேலுக்கு
மகிமையாகவும்,
தேவரீர் சகல
ஜனங்களுக்கும்
முன்பாக
ஆயத்தம்பண்ணின
உம்முடைய
இரட்சண்யத்தை
என் கண்கள் கண்டது

என்று சொல்லி
யோசேப்பையும்
மரியாளையும்
ஆசீர்வதித்தார். 

பின்னும் சிமியோன்
அவருடைய தாயாகிய
மரியாளை நோக்கி
இதோ,  அநேகருடைய
இருதய சிந்தனைகள்
வெளிப்படத்தக்கதாக
இஸ்ரவேலிலே அநேகர்
விழுகிறதற்கும்
எழுந்திருக்கிறதற்கும்,
விரோதமாகப் பேசப்படும்
அடையாளமாவதற்கும்,
இவர்
நியமிக்கப்பட்டிருக்கிறார்


உன் ஆத்துமாவையும்
ஒரு பட்டயம்
உருவிப்போகும் என்றான்

ஆவியின் ஏவுதலினால்
ஆலயத்திற்கு வந்தால்
இப்படியெல்லாம்
ஆவியானவர்
பேசவைப்பார்


ஆண்டவரின் தாயார்
மரியாளைப் பற்றி
கடைசியில் ஒரு
தீர்க்கதரிசன
வார்த்தையை,
மனதைக்
கல்லாக்கிவிட்டு
சொல்லிமுடித்தார். 

இயேசு சிலுவையில்
தொங்கிக்கொண்டிருக்கும்
போது அது அப்படியே
நிறைவேறிற்று

தேவ சித்தம் நிறைவேற
அர்ப்பணித்த இந்தப்
பெரியவரை

(முன்) மாதிரி மனிதனாக
உங்கள்முன்
நிறுத்திக்கொள்ளுங்கள்.  
Rev. J. ISRAEL VIDYA PRAKASH B.COM., M.DIV.,
DIRECTOR –LITERATURE DEPARTMENT
TAMIL CHRISTIAN NETWORK  
RADIO SPEAKER – AARUTHAL FM. DAILY
AWARD – NALLAASAAN – MALAYSIA – 2021