sathiya vedham tamil christian song

நவீன கிறிஸ்தவ உலகில் தினம் தினம் நூற்றுக்கணக்கான பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இன்றைய ஆயிரம் பாடல்கள் கடந்த கால ஒரு பாடலுக்கு சமானம்.

உயர்தரமான ஒலி ஒளி அமைப்புகள் இல்லை ஆனால் அது காலா காலத்துக்கும் பல எல்லைகளை கடந்து இன்றும் பேசிக்கொண்டிருக்கிறது. காரணம் அதன் உள்ளே இருக்கும் கருத்தும் கருவும் மிக முக்கியமானது.

தேவனுடைய பாதத்தில் அமர்ந்து தேவன் கொடுக்கும் கருத்தை தனது கருவாக்கி வேத வசனங்களால் அதற்கு உயிர் கொடுத்து பாடலை எழுதி வெளியிட்டார்கள். பழைய பாடல்கள் மறக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அழகான பாடல் “சத்திய வேதம் பக்தரின் கீதம்” என்ற பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள் இரண்டு சிறுவர்கள்.

நீங்களும் கேட்டுப்பாருங்களேன். ஆச்சரியப்படுவீர்கள்.