
WhatsApp’ல் படித்த ஆச்சரிய தகவல்…!!!
இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடித்த பிரபஞ்சத்தின் எல்லை 93 பில்லியன் ஒளியாண்டுகள் ( 93 billion light years ). அதாவது 883,500,000,000,000,000,000,000 கிலோ மீட்டர்கள். இந்த அளவுக்கு மேலும் இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்து போய் கொண்டே இருக்கிறது. அதன் எல்லையை கண்டு பிடிக்க முடியவில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது.
இந்த காணக்கூடிய பிரபஞ்சத்தில் (Observable universe ) ஏறக்குறைய 20,000 கோடி நட்சத்திர மண்டலங்கள் ( Galaxies ) உள்ளன. இந்த நட்சத்திர மண்டலங்களில் சுமார் 1 கோடி (10,000,000) நட்சத்திரங்களை கொண்டிருக்கும் குள்ளர் நட்சத்திர மண்டலம் ( Dwarf Galaxies ) முதல் 100 லட்சம் கோடி ( 100,000,000,000,000 ) நட்சத்திரங்களை கொண்டிருக்கும் ராட்சத நட்சத்திர மண்டலம் ( Giants Galaxies ) வரை உள்ளன. நமது நட்சத்திர மண்டலம் ( Milky way) ஒரு குள்ளர் வகையை சார்ந்தது.
நமது நட்சத்திர மண்டலத்தின் விட்டம் ( Diameter ) சுமார் 1 லட்சம் ஒளியாண்டுகள். அதாவது 946,000,000,000,000,000 கிலோ மீட்டர்கள். நமது முதலாம் வானத்தில் சுமார் 10,000 கோடி நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட பட்டுள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் சுமார் 1,000,000,000,000,000,000,000 நட்சத்திரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதாவது பத்தாயிரம் லட்சம் லட்சம் கோடி நட்சத்திரங்கள்.
நமது நட்சத்திர மண்டலத்தில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட நட்சத்திரங்களில் மிகப்பெரியது கேனில் மேஜரிஸ் ( vy canis majoris ) என்று பெயரிடப்பட்ட நட்சத்திரம். இது சூரியனை விட 2100 மடங்கு பெரியது. இது பூமியில் இருந்து சுமார் 43,000,000,000,000,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
மணிக்கு 900 km வேகத்தில் செல்லும் ஒரு விமானத்தில் இந்த நட்சத்திரத்தின் மேற்பரப்பை ஒரு சுற்று சுற்றி முடிக்க 1100 வருடங்கள் ஆகும்.
நமது பூமிக்கு அருகில் உள்ள முதல் நட்சத்திரம் (சூரியனை தவிர்த்து) பிராக்சிமா செண்டாரி (Proxima Centaure ). நன்றாக கவனிக்கவும் முதல் நட்சத்திரம். இது 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. அதாவது 42,000,000,000,000 – நாற்பத்திரெண்டு லட்சம் கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது.
மணிக்கு 2000 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு விமானத்தில் எங்கும் நிற்காமல் பறந்தால் இந்த முதல் நட்சத்திரத்தை அடைய சுமார் 20 லட்சம் வருடங்கள் ஆகும். இன்றைய விண்வெளிக்கு செல்லும் நவீன ராக்கெட்டில் சென்றால் (மணிக்கு 42,000 கி.மீ வேகம்) இந்த முதல் நட்சத்திரத்தை அடைய சுமார் 1 லட்சம் வருடங்கள் ஆகும். அப்படியானால் முதலாம் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எப்போது அடைவது? மனித வாழ் நாட்களுக்கு அல்ல, மனித அறிவுக்கும் அல்ல, மனித கற்பனைக்கு கூட சாத்தியம் கிடையாது.
ஆனால் கிறிஸ்துவின் வருகையின் போது இந்த கோடான கோடி கோடி நட்சத்திரங்களை தாண்டி நாம் தேவன் வாழும் இடத்தை அடைய இருக்கிறோம். வானங்களின் வழியாய் கடந்து சென்ற மகா பிரதான ஆசிரியர் நமக்கு உண்டு.
நான் இப்போது சொன்னது பிரபஞ்சத்தில் .001 சதவீதம் கூட கிடையாது. இதுக்கே இப்படி இருக்கே. அப்படியானால் விஞ்ஞானம் கண்டு பிடித்த 4 சதவீதத்தில் எவ்வளவோ ஆச்சரியங்கள் இருக்கும். விஞ்ஞானம் கண்டு பிடிக்காத 96 % என்னவெல்லாம் இருக்கும்? சிந்தித்து பாருங்கள். நம் தேவன் எவ்வளவு சர்வ வல்லமை உடையவர் என்பதை நாம் வெறும் 4% தான் அறிந்திருக்கிறோம்.
நம்முடைய தேவன்
சர்வ வல்லமையுள்ளவர்