தேவன் பயன்படுத்திய பாத்திரம்

வேதவாக்கியம் அது
இன்பமானது!
வேதவாக்கியம் அது
மதுரமானது!
அனுதினமும் அதை நீயும்
படித்து பாரு !
அடைந்திடுவாய் சந்தோஷம்
வாழ்வில் அன்று!

வாதைகள் அணுகா வண்ணம்
விலக்கிக் காத்திடும்!
பேதைகள் ஞானிகளாய்
உயர்த்திக் காட்டும்!
சோதனைகள் தாங்கிட
பெலன் தந்திடும்!
சாதனைகள் புரிந்திடவே
துணை வந்திடும்!

வாலிபர்கள் இடறிடாமல்
பாதை காட்டிடும் !
கன்னியர்கள் விலகிடாமல்
காவல் காத்திடும்!
சிறுவர்க்குக் கதைகள் வழி
ஞானம் போதிக்கும் !
முதியவருக்கு இளைப்பாற
உதவி புரிந்திடும்!

இருளான வாழ்க்கைதனில்
வெளிச்சம் காட்டிடும்!
இடறிவிழும் காலங்களில்
தூக்கி நிறுத்திடும்!
சாத்தானை வீழ்த்திடும்
கருக்குக்குப் பட்டயம்!
ஜீவனை உயிர்ப்பிக்கும்
நல்ல ஔஷதம்!

வாக்குத்தத்தங்கள் தந்து
சோர்வை நீக்கிடும்!
வாக்குமாறா தேவ அன்பைப்
பறைசாற்றிடும்!
மணவாளன் வருகைக்கு ஆயத்தப்படுத்தும்!
மகிமையின் கிரீடத்தை
நமக்குச் சூட்டிடும்!

ஆயத்தப்படு -நீ
ஆயத்தப்படு!
அனுதினமும்
வேதம் கற்று
ஆயத்தப்படு!

– சுகந்தி பிரபாகரன்