
கர்த்தரின் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமானஏழு காரியங்கள்

கர்த்தரின் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான
ஏழு காரியங்கள்.
1.அழைப்பு
எந்த ஊழியமும் அழைப்பு இல்லாமல் சுய பலத்தை திறமையை தாலந்தை பணத்தை வைத்து பெருமைக்காக செய்வது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். காரணம் ஊழியம் விளையாட்டும் அல்ல பணித்தளங்கள் விளையாட்டு மைதானங்களும் அல்ல எச்சரிக்கை.
2.தெரிந்து கொள்ளுதல்
அழைப்பை பெற்ற ஊழியர்களுக்கு தேவன் எந்த இடத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக காண்பிப்பார். அந்த இடத்திற்கு கீழ்படிந்து சென்றால் மாத்திரமே ஊழியங்கள் ஆசிர்வதிக்கப்படும் மற்றும் பெருகும். உங்கள் வசதி வாய்ப்புகளுக்காக இடத்தை மாற்றிக் கொண்டால் ஊழியங்கள் வளராது. தேவைகள் சந்திக்கப்படாது. ஒரு வெறுமை மற்றும் ஆத்தும தரித்திரம் மற்றும் வெறுப்பு நிறைந்த ஊழியம் தான் செய்வீர்களே தவிர மகிழ்ச்சி இருக்காது. மகிழ்ச்சியுடன் இருப்பதை போல நடிக்கலாம்…..
- நியமிக்கப்படுதல்
அழைப்பை ஏற்று தேவன் போகச்சொன்ன இடத்திற்கு சென்று ஊழியத்தை ஆரம்பிக்கிற உங்களுக்கு கர்த்தர் தூதர்களை நியமிக்கிறார். ஆகவே நீங்கள் தனியாக தானே இருக்கிறோம் என்ன செய்வது என்று கவலை வேண்டாம். தேவைகளை சந்திக்க ஆட்களை தேவனே நியமிக்கிறார். அந்தந்த நேரத்தில் அந்தந்த தேவைகள் நேர்த்தியாக சந்திக்கப்படும். - சாத்தானின் சதித்திட்டம்
எப்படி கர்த்தர் உங்களை பாதுகாக்க உற்சாகப்படுத்த தூதர்களை நியமிக்கிறாரோ அதைப் போலவே நம் எதிராளியான சாத்தானும் தனது தூதர்களான அசுத்த ஆவிகளை உங்களுக்கு எதிராக உங்களை சோர்வு உண்டாக்க உங்களை எதாவது ஒரு வழியில் பாவத்தில் விழத்தள்ள நியமனம் செய்கிறான். இந்த அசுத்த ஆவிகள் ஓய்வு இல்லாமல் தேவ ஊழியக்காரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் விரோதமாக செயல்படுகின்றன.. இதை குறித்த விழிப்புணர்வு உள்ள ஊழியர்கள் தங்கள் கிரியைகள் மற்றும் எல்லா செயல்களிலும் கவனமாக இருப்பார்கள். கவனமாக இருக்க வேண்டும். - பாதிப்புகள்
ஆவிக்குரிய ஊழியம் செய்யும் ஊழியக்காரர்கள் பஞ்சனை மெத்தையில் பளிங்கு தரையில் அமரவில்லை மாறாக யுத்த களத்தில் நிற்கிறார்கள். நான் ஊழியம் செய்கிறேன் எனக்கோ என் குடும்பத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று சொன்னால் ஒன்று அவர்கள் ஊழியம் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை என்று சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். யுத்த களத்தில் நின்று ஊழியம் செய்யும் போது நிச்சயமாக எதாவது ஒரு வழியில் பாதிப்பு ஏற்படும். அது சரீர பாதிப்பாக இருக்கலாம் அல்லது பொருளாதார பாதிப்பாக இருக்கலாம் அல்லது குடும்ப வாழ்வில் எதாவது ஒரு பிரச்சினையாக கூட இருக்கலாம். உதாரணமாக தாவீது ஒரு யுத்த வீரர் தான் ஆனாலும் அவர் விடாய்த்துப்போனார். ஆகவே எப்படியாவது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். - ஜெயமுள்ள ஊழியம்
அழைப்பை ஏற்று தேவன் குறித்த இடத்தில் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு யுத்த களத்தில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் போராட்டங்கள் வந்தாலும் உபவாசம் ஜெபம் தேவனுடைய வார்த்தை மற்றும் அசைக்க முடியாத விசுவாசம் இருந்தால் நூறு சதவீதம் வெற்றி நிச்சயம்… ஊழியங்கள் வளர்ந்து கனிகொடுக்கும். ஆத்துமாக்கள் திரளாக இரட்சிக்கப்பட்டு திருச்சபையில் ஞானஸ்நானம் பெறுவார்கள். தேவைகள் மகிமையாய் சந்திக்கப்படும். குடும்பம் ஆசிர்வதிக்கப்படும்.
கிளை ஊழியங்கள் எழும்பும்
ஊழியர்களை கர்த்தர் அக்கினி ஜூவாலையாகப் பயன்படுத்துவார்.
மகிமையை கர்த்தருக்கு கொடுக்க வேண்டும்
ஊழியங்கள் வளர வளர மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது ஊழியங்கள் தேவனை மகிமைப்படுத்துகிறதா அல்லது நமது பெயரை பெருமைப்படுத்துகிறதா… தேவனை மகிமைப்படுத்தினால் நல்லது. நமது பெயரை பெருமைப்படுத்தினாலோ அல்லது நமது சபையின் பெயரை பெருமைப்படுத்தினாலோ எச்சரிக்கை காரணம் தேவ மகிமை நம் ஊழியத்தை விட்டு போய்விடும். உதாரணம் ஏலியின் குடும்பம்.
David Livingston