
விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம்….
ஆனால்
விமர்சிப்பவர்களுக்கும், கேள்வி கேட்பவர்களுக்கும் அதற்குரிய தகுதிகள் இருக்கவேண்டும்…
ஒரு சபை ஆரம்பிப்பதில் உள்ள சிரமங்களை , வளர்ப்பதில் உள்ள போராட்டங்களை ஒரு துளியேனும் அனுபவித்தவராக இருக்க வேண்டும்.
• இப்படி இதைக் குறித்த அனுபவமும் ,அடிப்படை அறிவும் உள்ளவர்கள் மட்டுமே சபைகளுக்கு போதிக்க வேண்டும்.!
• இல்லாவிட்டால் கலியாணமே பண்ண தகுதியில்லாதவன், family camp நடத்தற கதையாயிடும்.
எந்த ஒரு சாதாரண உலக வேலைக்கும் பயிற்சி அவசியம்.
ஒரு பேய் ஒட்டினால் போதகராக முடியும் என்பது ஆவிக்குரிய உலகில் மட்டும் தான் சாத்தியம் .
• சபைகளுக்கு பாடம் எடுக்க விரும்புபவர்களாவது குறைந்த பட்ச தகுதி பெற்றிருக்க வேண்டாமா?
• சபை வெறுப்பாளர்கள், விமர்சிப்பாளர்கள் தாங்கள் எந்த சபையில் இருந்து பயிற்சி பெற்றவர்கள், மனஸ்தாபம் இல்லாமல் வெளியேறியவர்களா? அடிப்படை கல்வித்தகுதி யும், இறையியல் பயிற்சியும் உடையவர்கள் என்றால் தாராளமாக விமர்சிக்கட்டும்.இப்படி எந்த தகுதியும் இல்லாமல்
வெளிப்பாடு தகுதி மட்டும் இருக்கிறது என்பவர்கள் பொது ஊடகங்களில் சபைகளை தூற்றாதிருப்பது நல்லது.
பொதுவாக சபைகளே இப்படித்தான், போதகர்களே இப்படித்தான் என்கிறவர்களுக்கு கிறிஸ்தவ ஸ்தாபனங்களைக்குறித்து அறிவு இருக்கிறதா என்ற கேள்வியும் இருக்கிறது.
• அதாவது அழைப்புடன் ஊழியம் செய்பவர்கள் அழைப்பின்றி ஊழியம் செய்பவர்கள் என்ற இரண்டு வகை சபைகள் எல்லா ஸ்தாபனங்களிலும் , சுயாதீன சபைகளிலும் இருக்கின்றன.
• எனவேதான் பொத்தாம் பொதுவாக, பாஸ்டர்ஸ்ஸே இப்படித்தான் என்று பேசுகிறவர்களுக்கு மதிப்பு கொடுக்கத் தேவையில்லை என்கிறேன்.
தசமபாகம் என்ற பெயரிலே கொள்ளை அடிக்கிறீர்கள், அதற்கு புதிய ஏற்பாட்டில் ஆதாரம் இல்லை என குற்றம் சாட்ட உரிமையில்லையா? நிச்சயம் உண்டு.
• இயேசு கிறிஸ்துவே தமது ஊழியத்திற்கு காணிக்கை கொடுக்கும். ஒரு Department வைத்திருந்தார் என்ற அடிப்படை வேத அறிவுள்ளவர்கள் .( லூக் 8:3). பவுலும் தனக்கென்று காணிக்கை பெற்றுக்கொண்டார் ( பிலி 4:16) என்ற அடிப்படை வேத அறிவுள்ள வர்கள் கேள்விகேட்கட்டும்
• வேலை செய்து கொண்டே ஊழியம் செய்வதுதான் பவுலின் முறை , நீங்கள் அழைப்பு என்று சொல்லி ஏமாற்றித் திரியும் சோம்பேறிகள் என விமர்சிப்பது சரியா?
• சரிதான்.வேலை செய்ய மனதில்லாதோர் ஊழியத்திற்கு வரும்போது அவர்களை screening பண்ண உதவிடும்
• ஆனால் படகை விட்டு , வேலை வெட்டியில்லாமல் சுற்றித்திருந்தவர்கள் தானே இயேசுவின் சீஷர்கள். திரும்ப பழைய வேலைக்குப் போக ஆயத்தமானபோது தடுத்து ஆடுகளை மேய்ப்பாக என்று கட்டளையிடவில்லையா? என்ன கிடைக்கும் என்றது சீஷர்கள் தானே? வேலையாள் கூலிக்குப பாத்திரன் என்று புதிய ஏற்பாடு தானே சொன்னது?
• லட்சக்கணக்கில் வருவாய் உள்ளவர்கள் வீடு வாகன வசதி உள்ளவர்கள், சைக்கிளில் பிரயாணம் செய்யும் ஊழியக்காரனுக்கு விசுவாச பாடம் எடுப்பது இக்கால விசித்திரம்.
வாரிசு ஊழியம் புதிய ஏற்பாட்டில் எங்கே சொல்லப்பட்டது என்று கேள்வி கேட்டு போதகர் பிள்ளைகளை நான் ஊழியத்திற்கு வரலாமா கூடாதா? என்று சந்தேகமடைந்த செய்து கலங்கடிக்கிற உரிமை எவருக்கும் இல்லையா?
• உண்டு…ஆனால் புதிய ஏற்பாட்டில் வாரிசு ஊழியம் தவறு என்று சொல்லப்பட்ட வேதவசனம் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து அதில் இருந்து பேசட்டும். அல்லது சாக்லேட் பேபி மீதுள்ள பொறாமையால் கொப்பளித்த வார்த்தையாக போய்விடும்.
மெயின் லைன் சபைகளைப் பாருங்கள் தங்கெளுக்கென்று காணிக்கை கேட்பதும் இல்லை, வாரிசுகளை உற்சாகப்படுத்துவது இல்லை என விமர்சிக்கூடாதா? விமர்சிக்கட்டும்,
• சொந்த இடத்துடனும், ஏற்கனவே இருக்கும் சில குடும்பங்களும், மாத வருவாயுடனும், மனைவிக்கு வேலை செய்யும் அனுமதியுடனும் அவர்கள் ஊழியம் செய்கிறார்கள்
• மேற்கூறப்பட்ட எந்த ஒரு சிலாக்கியமும் இல்லாமல் பகை எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஒரு ஊரில் ஆரம்பிக்கப்படும் பெந்தேகோஸ்தே ஊழியர்களுக்கும் உள்ள வேறுபாடு அறிந்தவர் விமர்சியுங்கள்.
இறுதியாக எங்களுக்கு சபைகளை சீர்திருத்தம் செய்யும் அழைப்பு இருக்கிறது என்போர் கவனத்துக்கு...
• உங்கள் அங்கலாய்ப்பு துடிப்பு புரிகிறது. ஒரு சபையென்றால் அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் உங்களுக்குள் இருக்கிறது.
• நல்லது நீங்கள் உங்கள் மனதில் உள்ளது போன்ற ஒரு சபையை நிறுவுங்கள், எங்களைத் தாழ்த்தி உங்களிடம் கற்றுக் கொள்கிறோம்.