இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில…

மெர்லின், கண்ணனூர்
1. தேவதூதன் மரியாளிடம் கிறிஸ்து உன்னில் பிறப்பார் என்று சொன்னபோது அவளின் வயது சுமார் 14 முதல் 17 வரை இருந்திருக்கலாம்.
2. மரியாள் யூதவம்சத்தில் பிறந்தவர்.
3.இவள் கன்னிகை என்று, மத்தேயு, லூக்கா நற்செய்தி நூல் மாத்திரமல்ல, முஸ்லீம்களின் புனித நூலாகிய திருக்குர்ஆன்-ம் சான்று பகர்கிறது
4. இஸ்லாம் மதத்திலும் மரியாளை உயர்ந்த பெண்மணியாகவே திருக்குர்ஆன் சித்தரிக்கிறது. நற்செய்தி நூல்களைவிட திருக்குர் ஆன்-ல் அதிகமாக மரியாளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது
5. மரியாள் அரமேய மொழியோடு கூட, லத்தீன், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகளையும் அறிந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்றறிஞர்கள்.
6.மரியாள் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவரென்றும், அக்காலப் பெண்களின் பணிச்சூழலின்படி தினமும் 10 மணிநேரம் குடும்பத்திற்காக, சமையல் பணிகளுக்காக, துணிகள் துவைப்பதற்காக, விறகு பொறுக்குவதற்காக, கால்நடைகளுக்காக, தண்ணீர் எடுப்பதற்காக, உழைத்திருப்பார் என்கிறது வரலாற்று ஆய்வு
7. பரிசுத்த ஆவியின் மூலம் அவள் கர்ப்பமாக இருப்பதை அவள் அறிந்திருந்தாலும், பல அயலார்களும் அறிமுகமானவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி அவள் வருங்காலக் கணவருடன் அல்லது வேறு ஒருவருடன் பாவத்தில் விழுந்ததாகக் கொடிய பிறந்த பிறகு கொண்டுபோய் கிடத்தின இடம், வேதத்தில் சொல்லப்பட்ட முன்னணை இயேசு பிறந்த இடம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.)
9.மரியாள் தன்னுடைய 9 மாத கர்ப்ப காலத்தில் நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு யோசேப்போடு நடந்து சென்றாள், இது மலைப்பாதை, மிகக் கடினமானது, சாதாரண மக்கள் ஒருநாளில் 20 மைல் நடப்பார்களாம், மரியாள் அடைந்திருக்க முடியும். எவ்வளவு வேதனை! (குறிப்பு: முற்காலங்களில் கடினமான பணி செய்து பழகாத ஒரு பெண்ணால் இவ்வளவு தூரத்தைக் கர்ப்ப காலத்தில் நடந்து கடக்க முடியாது என்கின்றனர். ஆய்வாளர்கள்.)
கர்ப்பஸ்திரீயாக இருந்தபடியினால் 10 மைல்தான் நாள் ஒன்றிற்குப் பயணித்திருக்க முடியுமாம். சுமார் 10 நாட்கள் நடைப் பயணம் செய்துதான் பெத்லகேமை
10.மரியாள் பயணம் செய்த நாசரேத் to பெத்லகேம் வழியில், சிங்கங்கள் மற்றும் கரடிகள் நிறைந்த வனப்பகுதியும் உண்டு, போகும் வழியில் பல ஆபத்துக்களைச் சந்தித்திருப்பார்கள். அதிலிருந்து தேவனே அவர்களைக் காத்திருப்பார்
11. இயேசுவின் ஊழியக் காலத்தில், மரியாள் கணவரை இழந்த ஒரு பெண்மணியாய் வாழ்ந்தாள், இது ஒரு பேரிழப்பு
12. ஒரு வரலாற்றாசிரியர், மரியாளின் பாடுகளைச் சரித்திரத்தில் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்று வேதனைப்படுகிறார்.
13.பொதுவாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, புனிதர் என அழைப்பது, ஒரு நபரின் சந்நியாசம், தியாகம், குடும்பம் அல்லது உலக உடமைகளைக் கைவிடுதல் அல்லது வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்காய் பணிசெய்ய அர்ப்பணித்தல் போன்றவற்றை உள்ளடக்கியது, ஆனால் மரியாளின் விஷயத்தில் அன்றாட வாழ்க்கையின் விசுவாசத்தை மையப்படுத்தியதாக இது அமைந்துள்ளது, அவள் தூதனிடம்….. இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். இந்த விசுவாசமே அவளது புனிதம்.
14. கத்தோலிக்கத் திருச்சபை மரியாள் பாவமே இல்லாதவர் என்கிறது, சீர்திருத்தத் திருச்சபைகள் இயேசுகிறிஸ்து மாத்திரமே உலகில் பாவமில்லாதவர் என்கிறது
15.மரியாள் தாவீதைப் போன்ற ஒரு பாடலாசிரியர்
16.இயேசுவின் பிறப்பு முதல் அவரால் இறப்புவரை மரியாள் அனுபவித்த பாடுகளின் அளவு அளவிட முடியாதது. உண்மையில் இயேசுவுக்கு தாயாகும் தகுதி மரியாளைவிட உலகில் வேறு யாருக்கும் இல்லை எனலாம்.