உயர்வைத் தரும் வியர்வை!வித்யா’வின் விண் பார்வை

உயர்வைத் தரும் வியர்வை!வித்யா’வின் விண் பார்வை

பெயர்செபாவிலிருந்து
கேராரூருக்குப் போன ஈசாக்கு,
வயலில் வியர்வை சிந்தினார்

 
அது ஓர் பஞ்ச காலம் – ஆனால்
பதுங்கி இருக்கும் காலமல்ல
ஒதுங்கி இருக்கும் நேரமுமல்ல
விசுவாசத்தோடு விதைக்கும் காலம்


நகைப்பு என்று
அர்த்தம்கொண்ட ஈசாக்கு
விதைப்பு என்ற விஷயத்தில்
அதிக ஜாக்கிரதையாய் இருந்தார்

நிலத்தைப் பண்படுத்தி
விளையச்செய்கிற தேவன்மேல்
விசுவாசம் வைத்து
விதையை தூவினார்


கர்த்தர் அவரை ஆசீர்வதித்ததினால்
அந்த வருஷத்தில் நூறு மடங்கு
பலனைப்  பெற்றார்

வியர்வை நூறு மடங்கு
உயர்வைத் தந்தது


சாக்கு சாக்காக
கோதுமை மணிகளை
ஈசாக்கு  சேமித்து வைத்தார்

சோம்பேறிகளுக்கு முன்
சுறுசுறுப்பான
ஈசாக்கை நிறுத்தினால்
எளிதில் வித்தியாசத்தைக்
காணலாம்


ஈசாக்குக்கு,
அதாவது
உழைக்கும் வர்க்கத்திற்கு
வியர்க்கும்


குலைக்கும் வர்க்கத்திற்கு  
அதாவது
உழைக்காமல் பொறாமைப்படுகிற
ஜிம்மிக்கு வியர்க்காது


நாய்களை பற்றிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டிருக்கிற  விலங்கியல்  துறையைச்  
சார்ந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள்


எவ்வளவு வெயிலடித்தாலும்
ஜிம்மிக்கு மட்டும் வியர்க்காது!

நல்லாசான் (Recipient of International Award)
சங்கை இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,
Director – Dept. of Literature – tcnmedia.in
Radio Speaker – Aaruthal FM @ 06:00 a.m.