இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்

இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்

யோவான் 19:6 “பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.”

1) பிலாத்து மூன்றாவது முறையாக, இவரிடம் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்று சொல்கிறார். ஆனால், இயேசு கிறிஸ்துவை விடுதலை செய்ய முடியவில்லை. இதை பேதுரு நினைவு கூறுகிறார்-அப்போஸ்தலர் 3 :13,

2) எப்படியாவது இயேசுவை விடுதலை செய்ய வேண்டும் என்று பிலாத்து பார்க்கிறார். ஆனால் பிரதான ஆசாரியரும் மற்றவர்களும் சேர்ந்து ஜனங்களை தூண்டி விட்டு அவரை சிலுவையில் அறையும் அறையும் என்று சொன்னதினால் கலகம் அதிகமாகிறது என்று கண்டு, நீங்களே இவனை சிலுவையில் அறைந்து விடுங்கள் என்று கையை கழுவுகிறார்-மத்தேயு 27 :24 .

3) இவர் குற்றமற்றவர், நான் இதில் பங்கு கொள்வதில்லை என்று சொல்லுகிறார். பிலாத்து எல்லோர் முன்பாகவும் மூன்று முறை சாட்சியாக, இவரிடம் குற்றம் இல்லை என்று சொல்லுகிறார். ஆனாலும் அவரால் இயேசுகிறிஸ்துவை விடுதலை செய்ய முடியாததற்கு காரணம், பிலாத்துவுக்கு தன்னுடைய பதவியின் மேல் உள்ள பிரியம். பிரதான ஆசாரியர்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கும் பதவி வெறி.

4) தங்களுடைய பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் ஏசு கிறிஸ்து தங்களை விட பெரிய ஆளாய் போய் விடக் கூடாது என்பதாலும், இயேசு கிறிஸ்துவை கல்வாரி சிலுவைக்கு அனுப்புவதற்கு ஒப்புக் கொடுத்தனர். அதைத் தான் பேதுரு சொல்லும் போது, அவரை நீங்கள் மறுதலித்து, நிராகரித்தீர்கள் என்று குறிப்பிடுகிறார்.

நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :

1) அதாவது நீங்கள் யாருக்கு அதிகமாக உதவியை செய்கிறீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எதிராக காரியங்கள் செய்வார்கள். இயேசு கிறிஸ்துவின் காரியத்தில் இருந்து பார்க்கும் பொழுது அவர் ஒருவரையும் குற்றம் சொல்லவில்லை. யாரெல்லாம் அவரிடம் தேவையோடு வந்தார்களோ, அவர்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்ற கூடியவராக இயேசு கிறிஸ்து இருந்தார்.

2) ஆனால், அவரை மறுதலித்தார்கள். அதே போல நீங்கள் யாருக்கு அதிக பிரயோஜனம் உள்ளவர்களாய் இருக்கிறீர்களோ, அவர்கள் தான் உங்களை மறுதலிப்பார்கள். உங்களிடமிருந்து பிரிந்து போகிறவர்கள் அல்லது உங்களை விட்டுப் போகிறவர்கள் உங்களிடமிருந்து அனேகமாக மாம்ச பிரகாரமான உதவியை பெற்றவர்களாக இருப்பார்கள்.

3) மாம்ச பிரகாரமாக உதவி பெறாதவர்கள் உங்களைக் குறித்து நன்றாக சொல்லுவார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்து சோர்ந்து போய் உதவி செய்வதை நாம் நிறுத்தி விடக் கூடாது.

4) நாம் நாமாகத் தான் இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், மறுதலிக்கும், உங்களை விட்டுப் போகட்டும்.
நீங்கள் எப்பொழுதும் கிறிஸ்தவர்களாய், உங்களுக்கு நன்மை செய்ய திராணி இருக்கும் பொழுது தைரியமாக, அதைத் தொடர்ந்து செய்யக் கூடிய மக்களாக இருக்க, ஆண்டவர் நமக்கு கிருபை பாராட்டுவாராக.

ஜெபம்

நல்ல ஆண்டவரே!’ நாங்கள் யாருக்கெல்லாம் உதவி செய்கிறோமோ, அவர்களெல்லாரும் எங்களை மறுதலித்தாலும், நாங்கள் எங்களை எதிர்ப்பவர்களை, எங்கள் மீது குற்றம் சாட்டுகிறவர்கள், எங்களை கொலை செய்கிறவர்களை, நாங்கள் எப்பொழுதும் அவர்களை ஆசீர்வதிக்க, அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்யக்கூடிய மக்களாய் வாழ வளர எங்கள் தேவன் எங்களுக்கு அனுக்கிரகம் பாராட்ட வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ளவல்ல பிதாவே ! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.

John 19:6 “Therefore, when the chief priests and officers saw Him, they cried out, saying, “Crucify Him, crucify Him!””

1) Pilate said the third time, I find no fault in Him. But Pilate could not set Jesus Christ free. Peter reminded this— Acts 3:13.

2) When Pilate saw that he could not prevail at all, but rather that a tumult was rising, he took water and washed his hands before the multitude, saying, “I am innocent of the blood of this just Person. You see to it- Matthew 27:24.

3) Pilate said as I will not take part in it. Pilate testified three times in front of everyone that Jesus was not guilty. Yet the reason he could not free Jesus Christ was because Pilate loved his position above all else. Post hysteria for high priests and religious leaders.

4) They agreed to send Jesus Christ to the cross of Calvary because they wanted to retain their position and not let Jesus Christ become greater than they were.

How to apply this verse in our daily life :

1) The ones you help the most will do things against you. From the point of view of Jesus Christ he did not blame anyone. Jesus Christ was able to meet all the needs of those who came to Him in need.

2) But, They rejected Jesus. In the same way, those for whom you are most useful will reject you. Those who are leaving you will probably be the ones who receive fleshly help from you.

3) Those who do not receive help according to the flesh will speak well of you. But we must not stop getting tired of seeing all this and stop helping.

4) We have to be who we are. Let others say whatever they want, refuse, and leave you alone. May the Lord bless us to always be Christians, to be courageous when there is a tyrant to do good, and to be a people who can continue to do so.

Prayer

Good Lord! Though they received help from us and still those who accuse us, those who against us, those who are trying to kill us, Help us to bless them always and to continue to help them, We pray in the name of Jesus Christ. Father!, Amen. May the Lord bless you!.

WCF DD (World Christian Fellowship Daily Devotions)