ஓர் அடிமைக்கு
அவன் அடிமை என்பதை
முதலில் உணர்த்து,
பிறகு, அவன் தானாகவே
கிளர்ந்து எழுவான்

என்று
அண்ணல் அம்பேத்கர்
சொன்னார்

இன்று அவருக்கு
132 -வது பிறந்த நாள்
.

ஒரு விசுவாசிக்கு
அவன் விசுவாசி என்பதை
முதலில் உணர்த்திவிடு


விசுவாசத்தைத்
துவக்கியவர் இயேசு
என்பதை பிறகு
சொல்லிவிடு

அவரே
அதை முடிப்பவர்
என்பதையும் கூறிவிடு
(எபிரெயர் 12:1)

பின்னர் அவன்
தானாகவே
விசுவாசத்தில்
ஊன்றி எழுந்து
நிற்பான்,
நின்று பெருகுவான்

(கொலோசெயர் 2:6.7)

நீ அடிமை இல்லை.
ஆபிரகாமின் சந்ததி
என்பதைக் காட்டிவிடு

அப்பொழுது
அவன் தனக்கு
நியமிக்கப்பட்டிருக்கிற
ஓட்டத்தில் பொறுமையோடு ஓடி
விசுவாசத்தைக் காத்துக்கொள்வான்.


மனுஷ குமாரன் வரும்போது
பூமியிலே
விசுவாசத்தைக் காண்பாரோ?”

(லூக்கா 18:8)
கர்த்தரின் எழுத்தாணி
நல்லாசான்

பாஸ்டர்
இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
எழுத்தாளர் / போதகர்
14.04.2023