சபை திறக்கப்பட்டு இருக்கிறது… போதகர்களாகிய நாம் செய்ய வேண்டியவைகள்.

A. இது கர்த்தரால் தீர்மானிக்கப் பட்டு அவரால் சபை திறக்கப் பட்டு இருக்கிறது. எனவே கரத்தருக்கு மகிமை செலுத்துங்கள்.

It is truly God’s doing therefore let His name be glorified.

B. கர்த்தர் தான் இந்த சூழ்நிலைகளிலும் சபையாக நம்மை பாது காத்து இருக்கிறார். எனவே அவருக்கு நன்றி செலுத்த உற்சாகம் செய்யுங்கள்.

It is God has protected us from this situation therefore encourage the congregation to thank Him always.

C. சிலரை நாம் இழந்து கூட இருக்கலாம் ஆனாலும் நமக்கு உரிய பரலோக நம்பிக்கையை நினைவு படுத்துங்கள். நாமும் அதே பாதையில் போகிறோம் என்பதை உணர்வடைய செய்யுங்கள். உணர்ச்சி வசபடாதிருங்கள்.

Let us not be too emotional due to the lost of our beloved rather make them understand that we have the blessed hope of future in the Lord

D. போதகர்கள் விசுவாசிகளிடம் பரிவுடன் நடந்து நாம் அவர்களுடன் எப்போதும் இருக்கிறோம் என்பதை வார்த்தையிலும் நடக்கையிலும் உறுதிப் படுத்திக் கொண்டு ஏதாவது விசனங்கள் அதாவது சில விசுவாசிகள் நம்மை கண்டுகொள்ளாமல் இருந்து இருக்கலாம் அதை வெளிக்காட்டாமல் சூழ்நிலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நாம் அவர்களுக்கு லாக் down நேரத்தில் உண்மையாக இருந்து இருப்போம் என்றால் கவலை பட வேண்டிய அவசியமில்லை.

Let us make sure that we are always with the believers and let us not show any crunches against the believers even if anything wring rather let us understand the situation and behave well.

E. சபை திறந்த மகிழ்ச்சியில் அதிக கூடுகைகளை ஆர்வகோளாறில் ஏற்படுத்தி நெருக்கடி தர வேண்டாம். மக்களது பொருளாதார நிலை அறிந்து செயல்படவும். தொடர்ந்து ஆன்லைன் ஊழியத்தின் வழியாகவும் விசுவாசிகளை தொடர்பில் வைத்து கொள்வோம். இவ்விதமான மற்ற தொழில் நுட்பங்களையும் கவனத்தில் கொள்வோம்.

Since church has opened let us not plan too much meetings rather plan aacording to the economic situation of belivers. We can make use of the other available technology as well.

F. அதிக உணர்ச்சி வசப்பட்டு கட்டிப்பிடுத்தல், கர்த்தருடைய பந்தியில நாம் கடைபிடிக்கும் பரிசுத்த முத்தம், ஒருவரை ஒருவரை ஒருவர் அணைத்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் அன்பை கொஞ்சம் நிறுத்தி வைத்து திருவிருந்து முறைகளிலும் ஒவ்வொருவருக்கும் ஒரே பாத்திரத்தில் இருந்து தனி தனி பாத்திரத்தில் பகிர்ந்து கொடுத்து தேவ அன்பை வெளிப்படுத்துவோம்.

Let us not express our love in the communion service by hugging with the holy kiss. Let us also serve communion in the individual cups from the single main cup by using our common sense.

G. அரசாங்கம் அறிவித்த நபர்களின் அடிப்படையில் அதற்குரிய எல்லா ஒழுங்குகளையும் கடை பிடித்து அதிகாரத்திற்கு கீழ்ப்படிவோம். Social distancing, sanitizer, மற்றும் இதர ஆரோக்கியமான விதிகளை கடைப்பிடிப்போம்.

Let us follow the rules and regulations of the government that has given us like sanitizer, social distancing etc

H. போதகர்கள் தங்களுக்கு என்று தனி உபகரணங்களை கொண்டு ஆராதனை நடத்தி தேவையெனில் கைகளை வைத்து ஜெபிக்கவும். தவிர்க்க இயலாத நிலைகளில் கவனத்துடன் செயல் படவும். இது உங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியது. அதீத நம்பிக்கை யின்றி, நிதாணத்தொடு, தேவ நடத்துதலின் படி விசுவாசத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

Let all the pastors use the separate electronic instruments for their services. With much wisdom pray laying the hands on the people, however this is after the matter of faith. Faith in the Lord can overcome the World therefore act according to the leading of God in faith.

I. நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசி, பரலோக ராஜிய தரிசனத்தை கொண்டு, சாவல்களை சந்திக்கும் மணபக்குவம் போன்ற சீசத்துவ போதனைகளை கொடுத்து அறிவை உணர்த்தும் கிறிஸ்துவின் ராஜ்யத்தின் நல்ல போதனைகளை கொடுத்து விசுவாசிகளை நம்பிக்கையில் உறுதி படுத்துங்கள்.

We must preach about being strong in suffering, about kingdom of God, about Discipleship and about the kingdom of Jesus Christ yet to come that our belivers may get strengthened in their faith

J. விசுவாசிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கி அல்லது வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு சபையோடு சேர்ந்து அவர்கள் வாழ்வாதாரத்தையும் கணக்கில் கொண்டு செயல் படுவோம்.

Help the economically poor belivers to gain in their daily life to be survived.

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. God is good all the time and His grace endures forever

செலின்.