மனிதனை கெடுக்கும் பொல்லாத ஆவிகளின் செயல்கள்
(இவைகளெல்லாம் மனிதனால் தானே உண்டாவதல்ல என அறிந்துக் கொள்ளுங்கள் – ஆனால் மனிதனால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக்கொள்ள செய்ய முடியும்.)
பொல்லாத ஆவிகளின் செயல்கள்:
1) தூண்டிவிடுதல்
(முதல் வேலை இதுதான், இது மனிதனை பயப்படுத்துதல், இதற்க்கு பணிந்தோமென்றால் அடுத்த வேலையை ஆரம்பிப்பான்)
2) அவனின் தூண்டுதலில் விழுந்தவுடன் அதை சொல்லிச் சொல்லி குற்றப்படுத்திக்
கொண்டேயிருப்பது
3) நம்மை பற்றிய தெய்வ சித்தத்தின் மேல் நாம் கவனம செலுத்தாதவாறு நமது மனதை வேறு திசையில் திருப்பி விடுவது அவனின் மகா தந்திரமான செயலாகும்…எனவே நாம் அக்கம் பக்கம் பார்க்காமல் தெய்வ சித்தம் செய்வதிலேயே அமைதியாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்
4) நமது பிரார்த்தனை நேரத்தை திருடுவதில் அவன் மிகவும் திறமைசாலி….
5) தியானத்தை உதாசீனப்படுத்தும் ஓர் மன நிலையை உருவாக்குவான்…
6) பிறரை குற்றப்படுத்தும் பழக்கத்தை அவன் ஊக்குவிப்பான்…..
7) “பெருமையாக” சிந்திக்க வைப்பான் அல்லது “தாழ்வு மனப்பான்மை”கொண்டு வருவான்…..
8. உணர்ச்சிவசப்படுத்தும் சில தவறான ஆவேசப்பேச்சு – பொய்யான கொள்கை குழப்பங்களில் கொண்டு போய் மாட்டிவிட்டு விடுவான்….
9) பண ஆசை / பொருளாசை / சரீர இச்சை போன்றவற்றில் இழுத்து போடப் பார்ப்பான்.
10) தூக்க மயக்கம் – போதை
• நிறைய சாப்பிட தூண்டுதல்
• அதிக பேச்சு
• பொழுது போக்கு ஆர்வம்
• நிறைய நேரம் செலவிட வைப்பான் ஆகியவற்றில் கவிழ்த்துப்போடுவான்…
இவை எல்லாவற்றிலுமிருந்து தப்பிக்க ஆண்டவர் நமக்கு அறிவை தந்திருக்கிறார். தூய்மையான வழியை விட்டு விலகாமலிருப்பது. சின்னக்குழந்தைகளுக்கே காத்து கருப்பு அண்டக்கூடாதென ஜெபம் செய்கிற நாம், தெய்வ பயம் இல்லாது இருப்பது எப்படி?
