மனச்சோர்வுகளை மேற்கொள்ள மிக சிறந்த ஆலோசனைகள்

மனச்சோர்வுகளை மேற்கொள்ள மிக சிறந்த ஆலோசனைகள்

இன்றைய நாளுக்கான வேத தியானம்

மனச்சோர்வுகளை மேற்கொள்

சங்கீதம் 42:5
“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்”.

மனச்சோர்வின் அறிகுறிகள்

▪️மிகுந்த கவலை மற்றும் அமைதியின்மை
▪️நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த செயல்களில் முன்பு இருந்த ஆர்வம் குறைந்திருத்தல்
▪️சிறு பிரச்சினைகள் மீது மிகுந்த கோபம்கொள்ளுதல்…
▪️எதிர்மறையான கடந்த காலத்தை அதிகமாக சிந்தித்தல்
▪️சிந்திக்க அல்லது கவனம் செலுத்தும் திறன் குறைந்துள்ளது
▪️தற்கொலை மரணம் போன்ற மோசமான எண்ணங்கள் உருவாகுதல்
▪️தூக்கமின்மை
▪️அதிக சோர்வு
▪️அதிக எடை அதிகரிப்பு அல்லது இழப்பு
▪️அதிகப்படியான குற்ற உணர்வு, நான் எதற்கும் பயனற்றவன் என்ற எண்ணம்
▪️உடல் ரீதியான காரணங்கள் இல்லாத வலிகள்

How to overcome depression
மனச்சோர்வை மேற்கொள்வது எப்படி

இது நம்மை தனிமைப்படுத்தி, ,நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் வீழ்ச்சியடைவதைப் போல, நம்பிக்கையற்றதாக உணரக்கூடும் நிலையை ஏற்படுத்துகிறது…

ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய உற்சாகத்தையும் சுதந்திரத்தையும் திருட சாத்தான் மனச்சோர்வைப் பயன்படுத்துகிறான் நம் மனதை இருளிலும் சோர்விலும் நிரப்பி நம்மை வீழ்த்தவும் முயல்கிறான்…

இருப்பினும், மனச்சோர்விலிருந்து விடுபட கடவுள் நமக்கு உதவ விரும்புகிறார்.
அவர் தம்முடைய மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நம் வாழ்விற்கான நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறார்.

மனச்சோர்வு என்பது உடல் அல்லது நம் சரீரத்தில் உண்டாகும் ஓர் வேதியியல் ஏற்றத்தாழ்வின் விளைவாக இருக்கலாம் இருப்பினும், ஏராளமான மக்களுக்கு, மனச்சோர்வு என்பது ஒரு ஆன்மீக பிரச்சினை… அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்து பைபிள் நமக்கு சிறந்த வழிமுறைகளை அளிக்கிறது

மனச்சோர்வை ஆரம்பத்திலே எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்..

1 பேதுரு 5:8,9
” தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே”

(depression க்கு நேராக வழிநடத்தும் எந்தவொரு காரியங்களுக்கும் ஆரம்பத்திலே அதை அடையாளம் கண்டுகொண்டு அதை எதிர்க்க வேண்டும்…)

மனச்சோர்வு உணர்வை உடனடியாக எதிர்ப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் அதை நாம் நீண்ட காலம் இருக்க அனுமதிக்கும் பட்சத்தில் அவற்றை எதிர்ப்பது கடினம்!

நாம் அனைவரும் அவ்வப்போது ஏமாற்றம் நிறைந்த சூழ்நிலைகளை (disappointments situations )சந்திக்கின்றோம்- இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி. இருப்பினும், நாம் அதை நம்மை ஆளுகை செய்ய அனுமதித்தால், அவைகள் (discouragement) ஊக்கமின்மைக்கு நேராக வழிவகுக்கும்… மேலும் ஊக்கமின்மை (discouragement)நம்மை மனச்சோர்வுக்கு நேராக(depression) வழிவகுக்கும்.

பிசாசு அவன் செய்யும் செயல்களில் உங்களை ஈர்க்க நீங்கள் அனுமதிக்காவிட்டால், அவன் உங்களை ஒருபோதும் ஒடுக்க முடியாது; அவன் உங்களை ஒடுக்க முடியாவிட்டால், அவன் உங்களை மனச்சோர்வடைய செய்ய முடியாது. நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, பிசாசின் ஆயுதமான மனச்சோர்வை தொடக்கத்திலேயே எதிர்ப்பதாகும்…அதுவே நம்மை வெற்றியுள்ள வாழ்வுக்கு நேராக வழிநடத்தும்…!

கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்

பிலிப்பியர் 4: 4
“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்”.

நம்முடைய வேதனையின் மத்தியில் தேவனை துதிப்பது என்பது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய விஷயம். ஏனென்றால், தேவன்மீது நம் கவனத்தை செலுத்தவும், அவர் செய்த நல்ல காரியங்களில் சந்தோஷப்படவும் நாம் தேர்ந்தெடுக்கும்போது, ​​நம்முடைய பிரச்சினைகளை விட அவரை பெரிதாக ஆக்குகிறோம்.

சங்கீதம் 16:11
“ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு”.

அவருடைய சமூகத்தில் உண்டாகும் பரிபூரண சந்தோஷத்தால் நம்முடைய வாழ்வில் உள்ள எல்லா discouragement & depression களையும் மாற்றிவிடுகிறார்

3.பிரச்சனைகளை பார்க்கிலும் தேவனுடைய வார்த்தையை முக்கியத்துவப்படுத்துங்கள்

மனச்சோர்வைக் கடக்க மனமும் ஒரு முக்கிய திறவுகோலாகும். நீங்கள் நினைப்பது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும் சக்தி கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான் கடவுளின் வார்த்தையில் காணப்படும் வாக்குறுதிகள் மூலம் உங்கள் மனதைப் புதுப்பிப்பது மிகவும் முக்கியமானது.

எபிரேயர் 4:12
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”

அவருடைய வார்த்தையைப் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களுக்குள் வந்து உங்களை உங்களுக்குள்ளே இருந்து மாற்றத் தொடங்குகிறது.

உங்களைப் பார்க்கும் விதத்தையும் உங்கள் எதிர்காலத்தையும் கூட மாற்றும் திறன் கர்த்தருடைய வார்த்தைக்கு உண்டு.

கடவுள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை உங்கள் மனதில் நிரப்பி, அவருடைய வாக்குறுதிகளை உங்கள் சொந்தமாகக் கூறும்போது, ​​அது உங்களுக்கு ஓர் நம்பிக்கையைத் தரும், அது,உங்கள் நம்பிக்கையை வளர்க்கும்.

நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது, வலி ​​அல்லது ஏமாற்றத்தை அனுபவிப்பதில் இருந்து நாம் ஒருபோதும் முற்றிலும் விடுபட மாட்டோம், ஆனால் கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக உண்டாகும் விடுதலை நம்முடைய சோர்வை நீக்கும் தொடர்ந்து முன்னேறிச் செல்ல நம்மை உந்தி தள்ளும்…

4.பல தேவ மனிதர்கள் இந்த சவாலை சமாளித்தார்கள், ஆகவே உங்களால் முடியும் என்று நம்புங்கள்….. எலியா-யேசபேல் வார்த்தைகளினால்….
போதும் கர்த்தாவே என்று சோர்ந்து போய் சூரைச்செடியில் படுத்துக்கொண்டான்

தாவீது-சவுலால் துரத்தப்பட்ட போது ஏன் என்னை‌ தள்ளிவிடுகிறீர்?சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?(சங் 43:2)

இயேசு-கெத்சமெனே தோட்டத்தில் இரத்தத்தின் பெரும் துளிகள் வேர்வை துவாரங்கள் வழியாக வெளிவருகிற அளவுக்கு மன அழுத்தத்திற்க்கு நேராக சென்றார்…

யோபு-நன்பர்கள் மற்றும் மனைவியுடைய வார்த்தைகள்,சரீர பெலவீனங்கள், இழப்புகள் இவை அனைத்தும் அவனை மிகுந்த மனச்சோர்வுக்கு நேராக நடத்தினது…

இவர்கள் எல்லாரும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர முடியும் என்றால்.உங்களாலும் முடியும் என்று நம்புங்கள்….

5.பரிசுத்த ஆவியானவருடைய உதவியை நாடுங்கள்….
(அப் 1:8) “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து… “

சோர்ந்து போய் பின்மாற்றத்திற்க்கு நேராக போன பேதுரு மேல்வீட்டு அறையில் பெற்ற பரிசுத்த ஆவியின் பெலனால் அவற்றை மேற்கொண்டான்

எசேக்கியேல் தீர்க்கதரிசி-உலர்ந்துப்போன எலும்புகள் உயிர் பெற்றது பரிசுத்த ஆவியின் பெலத்தால்…

பாஸ்டர்.டேவிட்,
விசுவாச AG சபை, விஜயமங்கலம்.