2021ம் ஆண்டு வெளிப்படையாக பரவி வரும் நூதன உபதேசத்தை சமூக வளைதளங்களில் நீங்கள் கண்டிருக்கலாம். இந்த பதிவு தனி மனித விமர்சனத்திற்கு அல்ல. உபதேச ரீதியாக எழும் குழப்பத்தினை சரி செய்து கொள்ளவே இந்த பதிவு.

விசில் அடிச்சா சபைக்கு மக்கள் கூட்டம் பெருகிட்டே இருக்குமாம். சபை டான்ஸ் ஆடலன்னா தரித்திரம் வந்திருமாம். என்ன ஒரு புது வெளிப்பாடு. பிதாவாகிய தேவனே விசில் அடித்ததாக கூறி சம்பந்தமில்லாத வசனங்களை அள்ளிவிடுகிறார். ஒரு வசனத்தை விளக்க வேண்டுமானால் அந்த வசனத்தின் பிண்ணனியம், கலாச்சாரம், நோக்கம் இவைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட வெளிப்பாடுடையவர்களுக்கு வசனத்தை படிக்க நேரமாயிருக்க போகிறது. அப்படியானால்  இயேசு இதற்குதான் சபையை இரத்தம் சிந்திமீட்டாரா ? சபை செய்ய வேண்டிய பணிகளை மறந்து, போதிக்க வேண்டியவைகளை வெறுத்து, கண்பிக்க வேண்டியவரை (இயேசு) பின்நோக்கி தள்ளி  தங்கள் தவறான உபதேசங்களை சபையில்  புகுத்தும் போதகரர்களுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

பிதாவாகிய தேவன் விசிலடிக்கிறாரா?

பயில் – (Signal) என்றால், சமிக்ஞை செய்து கூப்பிடுதல். கையை அசைத்து அழைப்பது என்றெல்லாம் பொருள் ஆகும்! பயில்காட்டி என்ற தமிழ் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. “பயில்” என்பதற்கான எபிரெய வார்த்தை sharaq என்பதாகும்.

1. Practice, Exercise – பழக்கம்.
2. Secret language – ரகசிய மொழி
3. Beckoning – விரல் அல்லது கை அசைத்து கூப்பிடுதல்.
4. Sign – சைகை
5. Whistling – உதட்டிலிருந்து ஒலி எழுப்புதல்.

இப்படி பல அர்த்தங்கள் உண்டு. Whistling (விசில்) என்ற வார்த்தை வருவதால் நாம் புரிந்து கொள்வது போல அல்ல. உதட்டிலிருந்து ஓர் ஓசையை அல்லது விரல் அல்லது கைகள் மூலம் ஒலி எழுப்புவதை குறிக்கும் சொல் தான் இது. சீட்டியடிப்பது, விசிலடிப்பது எல்லாம் இதன் நேரடிப் பொருள் அல்ல! (Hissing என்ற ஆங்கில வார்த்தைக்கு, சிறு ஒலியெழுப்பல், அதாவது, ஒரு பாம்பு சத்தமிடுவதுபோல , ஸ்…. என சத்தமிடுவது, சீறுவது, பாவனை செய்வது என்றெல்லாம் பொருள்!)

கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து ஜாதிகளை பயில் காட்டி அழைப்பார் அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள் (ஏசா 5:26) இது ஒருவிதத்தில், தன்னுடன் வர அடம்பிடிக்கும் ஆடுகளிடம், புல் கட்டை அப்படி இப்படி ஆட்டி, ஆட்டிக் காண்பித்து, தன்னுடைய வழிக்கு வரவழைக்கும் ஒரு மேய்ப்பனின் செயல்போன்றது!

கர்த்தர் தம்முடைய நாளில் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருந்து தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும் (ஏசா 7:18,19).

நூதன ஊழியர்கள், ஆண்டவரே விசிலடித்து ஆத்துமாக்களைச் சேர்க்கிறார்- என பிரசங்கம் (பித்தலாட்டம்) செய்வது, தேவனுடைய செயலையே கேவலமாக்குவதுபோல உள்ளது!

தேவன் நம்மிடத்தில் விசிலடிப்பதையா, விசுவாசத்தையா எதை எதிர்பார்க்கிறார்? விசிலடிப்பதே சரி என்றால், கிறிஸ்து இயேசுவும், அப்போஸ்தலர்களும் விசிலடித்திருப்பார்களே!

சபைக்குத் தேவை விசில் சத்தம் அல்ல! விசுவாச யுத்தம்!  சிந்திப்போம்!!!

நம் பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவுலகங்களில் யாராவது விசில் அடித்தால் அதை யாராவது அங்கீகரிப்பார்களா? அவர்களெல்லாரும் தெளிவாக தான் இருக்கிறார்கள். ஆனால் நம்மில் பலர் ?

இந்த செய்தி பற்றிய முழுமையான விளக்கத்தை கீழேயுள்ள வீடியோவில் காணலாம். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.