
தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்

தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயத்தை தான் இப்பொழுது நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். தமிழ்நாட்டின் முதல் ஆலயம் என்ற பெருமை மட்டுமல்ல உலக அளவில் பல நூற்றாண்டுகள் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே ஆலயம் இது தான். ஆச்சரியமாயிருக்கின்றதா? வாருங்கள் இதன் வரலாற்றை விவரிக்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையாரால் கி.பி. 63 ம் ஆண்டில் இது கட்டப்பட்டதாகும்.
இவ் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு என்ற ஊரில் மணிக்கிராமம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டார் தூரத்தில் இவ்விடம் அமையப்பெற்றுள்ளது.
புனித தோமா இன்றைய கேரளத்தின் கொடுங்கல்லூரில் கடல் மார்கமாக கி.பி 52 இல் வந்திறங்கினார். புனித தோமையார் இந்தியாவில் சுமார் பதினேழு வருடங்கள் ஊழியம் செய்துள்ளார். இதில் நான்கு வருடங்கள் சிந்துவிலும், ஆறு வருடங்கள் மலபாரிலும், ஏழு வருடங்கள் மைலாபூரிலும் கிறிஸ்துவைப்பற்றி போதித்தார். கேரளாவில் 7 இடங்களில் சபைகளை ஸ்தாபித்து ஆயிரக்கணக்காணோரை இயேசுவண்டை நடத்தினார்.
பின்னர் கடல் மார்க்கமாக சின்ன குட்டம் வழியாக கிபி 63 திருவிதாங்கோட்டிற்கு வந்தடைந்தார். இங்கு வாழ்ந்த ஒரு குறுநில மன்னன் வேட்டைக்கு சென்ற போது கரடி தாக்கி மரித்துப்போனார். பின்னர் தோமா அவரை இயேசுவின் நாமத்தில் உயிரோடெழுப்பினார். உடனே அவன் கிறிஸ்தவனாகி ஞானஸ்நானம் எடுத்தான். அவனுக்கு “சான்றமன் யாக்கோபு” என்ற பெயர் வழங்கப்பட்டது. இவர் தான் தமிழகத்தில் முதலாவது ஞானஸ்நானம் எடுத்த நபர் என்பது குறிப்பிடதக்கது.
குறுநில மன்னனின் இரட்சிப்பிற்கு பின்னர் அனேகர் இயேசுவை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். பின்னர் அங்கு ஒரு ஆலயம் கட்ட தீர்மானித்தார். 45 அடி நீளமும், 15 அடி வீதியும், 10 அடி உயரமும் கொண்டு, முற்றிலும் கருங்கல்லால் கட்டினார்.
இந்த ஆலய வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இடையில்பல எதிர்ப்புகளும் தடைகளும் வந்தது. ஆலயத்தின் கதவுகளை மூடி போட்டு ஆராதனை நடத்த கூடாது என மிரட்டினர். ஆனால் மிரட்டியவர்கள் இன்று உலகில் இல்லை ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவ்வாலயம் இன்றும் ஜீவனோடு இருக்கிறது. இக்கோவில் தற்போது மலங்கரா பாரம்பரிய சிரியன் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
பிரியமானவர்களே.. இந்தியாவில் கிறிஸ்தவம் வெள்ளைகாரர்கள் காலத்தில் வரவில்லை. வெள்ளைக்காரர்கள் இயேசுவை கேள்விபடும் முன்பாகவே இந்திாவில் கிறிஸ்தவ ஆலயம் வந்துவிட்டது என நமது இந்திய சரித்திரம் கூறுகிறது.
நாம் இந்தியாவில் பிறந்ததற்காக பெருமிதம் கொள்ள வேண்டும். பெரிய நாடான அமெரிக்காவின் பெயர் கூட வேதத்தில் இல்லை. நமது தேசத்தின் பெயர் வேதத்தில் இருக்கிறது. உண்மையில் நாம் பாக்கியவான்கள் தான்.