முதிர்வயதில்,
தேவ பக்தியுள்ள
அந்த மூதாட்டி
எலிசபெத் அம்மையார்


தன் கணவன் சகரியா’வின்
நீண்டகால ஜெபத்தாலும்
தேவத் திட்டத்தாலும்
கர்ப்பவதியானபின் ….

முதல்  ஐந்து மாதங்கள்
வீட்டுக்குள்ளேயே
மறைந்திருந்தாள்

(Luke 1:25)
 
அந்த முதல் ஐந்து மாதங்கள்
அவள் உள்ளூர் மருத்துவரைப்
பார்க்கவில்லை!         

உள்ளூர் உறவினர்களை
உதவிக்காக அணுகவில்லை!

 
ஜெபிக்கும் மக்களிடம்
ஜெபிக்கச் சொல்லவில்லை!
(Luke 1:10)
 
மயக்கம் வருகிறது
பயமாக இருக்கிறது
வாமிட் வருகிறது
பசியெடுக்கிறது
எதுவுமே சாப்பிட பிடிக்கவில்லை
எண்ணமோ பண்ணுது….


என்றெல்லாம் சொல்லி
தன் கணவனை அதாவது
சந்தேகப்பட்டு
சங்கடத்திற்குள் சிக்கி
ஊமையாகிப்போன
ஊழியக்காரன்
சகரியாவை மேலும்
தர்ம
சங்கடத்திற்குள்ளாக்கவில்லை!

என்பதை இந்த கட்டுரையில்
பதிவுசெய்ய விரும்புகிறேன்
நல்லாசான்
இஸ்ரேல் வித்ய பிரகாஷ்

PASTOR | WRITER | RADIO SPEAKER
Director – Literature Dept. tcnmedia