97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை
Articles
  
Poetry
  

97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை

தள்ளாடும் வயதானாலும் தளராத மூதாட்டி

The Godly Role of a Grandmother

இன்று வேதம் வாசித்தீர்களா? என்கிற கேள்விக்கு நம்மில் பலரும் பல சாக்குப் போக்குகளை நாம் சொல்லுவோம். ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த மூதாட்டிக்கு வயது 97 இன்றும் வேதத்தை நேசித்து, வாசித்துக் கொண்டே இருக்கிறார். இந்த மூதாட்டியை பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் இந்த மூதாட்டியின் இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டே இருக்கிறது.

சங்கீதம் 148 :12- ல் இப்படியாக வாசிக்கிறோம். “வாலிபரே கன்னிகைகளே முதிர் வயதுள்ளவர்களே பிள்ளைகளே கர்த்தரை துதியுங்கள்”

கர்த்தரை துதிக்கவும் வேத வசனத்தை வாசித்து தியானிக்கவும் வயதோ.. முதுமையோ.. ஒரு தடையில்லை என்பதற்கு இது ஓர் அற்புத சாட்சி. இனி உங்களில் யாரேனும் எனக்கு வயதாயிடுச்சு பா.. அதான் பைபிள் படிக்க முடியலனு சொல்லக்கூடாது. ஆடியோ பைபிளாவது கேட்டு வாங்கி வசனத்தை படிங்க.. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

மூதாட்டி வேதம் வாசிப்பதை நீங்களும் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்..