ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்

(மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்)

ஊழியத்தில் வரங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இது பரிசு என்றும், தாலந்து என்றும், திறமை என்றும், கிருபையினால் பெற்ற வரம் என்றும் வேதத்தில் நாம் பார்க்கிறோம்.

இந்த கிருபை வரங்கள் மாறாதவைகள். ஏனெனில் இவைகள் பரத்தில் இருந்து ஒரு மனிதனுக்கு கொடுக்கப் படுகிறது. தேவன் மாறாதவர் எனவே வரங்களும் அவரது சுபாவத்திர்க்கு உட்பட்டே வருகிறது.

இதற்கு ஆவிக்குரிய வரங்கள் என்றும், கிறிஸ்துவின் மேலான வரங்கள் என்றும், உன்னத பரம ஈவு என்றும், கிருபை வரங்கள் என்றும் நாம் அறிந்து கொள்கிறோம்.

Part I

ஏன் வரங்கள் கொடுக்கப் படுகிறது?

A. எல்லாரும் கிறிஸ்துவை விசுவாசித்து, நம்பி அவரை மகிமைப்ப படுத்த

ஏனெனில் அவர் சர்வ வல்லமை உள்ளவர் என்று சொன்னாலும் அது நீருபிக்கப் பட்டால் தான் ஜனங்கள் நம்புவார்கள். மோசே சொல்வது போல கை வல்லமை கணடால் ஒழிய பார்வோன் ஆக இருந்தாலும், இஸ்ரேவேல் ஜனங்களாக இருந்தாலும் விசுவாசிக்க மாட்டார்கள். எகிப்தில் கர்த்தர் தமது நாமம் மகிமையடைய மோசேயின் கரத்தால் அற்புதங்கள் செய்தார். இயேசு கிறிஸ்து செய்த அற்புதஙகளால் ஜனம் அவரை விசுவாசித்து தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

B. சுவிசேச பிரபலியத்திர்க்காக:

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் வல்லமை விளங்க, சுவிசேசம் பரம்ப, எல்லாரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் வரங்கள் அவசியமாகிறது.

C. சபை பக்திவிருத்தி அடைய

சபை கரை திறை இல்லாத பரிசுத்த சபையாக மாறவும் ஒரே சரீரமாக இயங்கவும், ஜீவனுள்ள கல்லின் ( கிறிஸ்து) மேல் கல்லாக கட்டப்பட்டு ஒரே ஆவியினால் இசைய விட்டு கொடுக்கவும், அவரது வருகைக்கு ஆயத்தம் ஆகவும் வரங்கள் கொடுக்கப் பட்டு இருக்கிறது.

D. வசனம் விருத்தி அடைய, உறுதிப்பட

பேசுகின்ற வசனங்கள் சத்தியம் என்றும் அவைகளுக்கு ஜீவன் உண்டு என்றும், அவைகள் மாறாதவைகள் என்பதை அறிய உறுதிப் படுத்த வரங்கள் கொடுக்கப் படுகின்றது.

E. ஊழியம் செய்ய

அப்போஸ்தல ஊழியம், தீர்க்கதரிசன ஊழியம், போதக ஊழியம், மேய்ப்பனின் ஊழியம், சுவிசேஷ ஊழியம் போன்ற ஊழியங்கள் செய்து, சபையை நிர்வகிக்க, சுவிசேஷ ஊழியங்களை நிர்ணயம் செய்யவும், மிஷனரி ஊழியம் செய்யவும், சபைகள் ஸ்தாபிக்கவும் இந்த வரங்கள் அற்புத அடையாள வரங்கள் என்றும், ஞான வரங்கள் என்றும், வெளிப்பாட்டின் வரங்கள் என்றும் போதனை வரங்கள் (உருவாக்கும் வரங்கள்) என்றும் கொடுக்கப் பட்டு இருக்கிறது.

F. தனிப்பட்ட/ பிறரது பிரயோஜனத்திற்க்காக:

நாம் ஆசீர்வதிக்கப்பட, நாம் போதிக்கப் பட, நாம் நித்திய ஜீவனை பெற, நாம் பரிசுத்தம் அடைய, ஆவிக்குரிய, சரீர, பொருளாதார எல்லா நன்மைகளும் விடுதலைக்கும் கர்த்தர் வரங்களை தந்திருக்கிறார்.

G. பரலோக ரகிசியங்களை அறிய

தேவ ரகசியங்கள் அறியவும், தேவனோடு நெருங்கிய உறவு கொள்ளவும், இருதய நினைவுகளை வரையறுக்கவும், சரியான தீர்மானங்கள் எடுக்கவும் வரங்கள் கொடுக்கப் பட்டு இருக்கிறது.

Part II

வரங்களை குறித்த அடிப்படை சத்தியம்

1 வரங்கள் மாறாதவைகள் ஏனெனில் கர்த்தர் மாறாதவர்

அதினால் தான் கனி இல்லாத இடத்திலும் வரங்கள் கிரியை செய்கின்றது.

2. வரங்கள் பரத்தில் இருந்து பிதாவின் சித்தப்படி அவரின் விருப்பத்தின் அடிப்படையில் அவரவருக்கு ஏற்ற அளவு கிருபையின் படி கொடுக்கப் படுகிறது.

எனவே அவரவரின் கிருபையின் அளவின் படி நடந்து கொள்ள வேண்டும்.

3. வரங்கள் கிறிஸ்து இரத்தம் சிந்தி, விலைக்கிரயம் செலுத்தி, பாதாளத்தில் இறங்கி நமக்கு பெற்று தந்தார்.

எனவே இது விருதாவாக பயன்படுத்த அல்லது போக்கடிக்கப்பட வேண்டியது அல்ல.

4. வரங்களில் வித்தியாசம் இருந்தாலும் அதை இயக்குகிற ஆவியானவர் ஒருவரே

எனவே எந்த வரமும் ஒன்றில் ஒன்று பெரிதல்ல, ஆவியானவர் தான் பெரியவர். எல்லா வரமும் ஒன்றை ஒன்று முக்கியமானது. வரங்களினால் யாரும் பெரியவர் சிறியவர் என்று மதிப்பு இட முடியாது. வரங்களின் எண்ணிக்கையை விட பரிசுத்த ஆவியானவர் தான் முக்கிய மானவர்.

Part III

வரங்களை முறைப் படுத்தி பெற்றுக் கொள்ளுதல்

கிட்டத்தட்ட 12 க்கும் மேற்பட்ட வரங்கள் வசனத்தில் சொல்லப் பட்டு இருக்கிறது. விசுவாச வரம், அற்புத அடையாள வரம், வியாக்கியானம் வரம், அறிவை ஞானத்தை போதிக்கும் வரம், பக்திவிருத்தியின் வரம், குணமாக்கும் வரம், வெளிப்பாட்டின் வரம் என்றே அவைகளை இவைகளின் கீழ் வசனத்தின் அடிப்படையில் பார்த்தாலும் அவற்றை நாம் எப்படி அறிந்து பெற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து படிப்போம்

A. வரங்கள் கர்த்தரிடம் இருக்கிறது என்பதை அறிந்து விசுவாசிக்க வேண்டும்.

God is the source of all gifts. கர்த்தரே வரங்களின் உறைவிடம்.

அவரை விசுவாசித்து காத்து இருக்க வேண்டும்.

B. வரங்கள் பெற பாத்திரவான்களாக வேண்டும்

பிறரது வரங்களை ஒப்பிட்டு, பொறாமை பட்டு, தாழ்வு மனப்பான்மை அடைந்து கூனி குறுகாமல் அவருக்கு காத்து இருக்க வேண்டும்.

வரங்கள் பெற ஏதாவது குறைகள் இருந்தால் சரி செய்ய வேண்டும் ஏனெனில் வரங்களில் தெய்வீக சுவாபவங்கள் இருப்பதால் அந்த சுபாவம் வருகிறது வரை அவர் உடைப்பார் உருவாக்குவார். விட்டுக் கொடுக்க வேண்டும். உதாரணம் மோசே/ எலிசா

C. வரங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

நமக்குள் இருக்கும் ஆரவம், எதை செய்யும் பொழுது மன நிறைவு கிடைக்கிறது, எதை செய்யும் போது நேர்த்தியாக திறமையாக செய்கின்றோம், எதை செய்யும் பொழுது ஒரு சந்தோசம், சமாதானம் கிடைக்கிறது என்பதை சூழ்நிலைகளில் கடந்து சென்று கண்டுப் பிடிக்க வேண்டும்.

நமக்குள் ஒரு சுவராசிய தேடுதல் இருக்க வேண்டும். ஆர்வம், தாகம், வாஞ்சை இருக்க வேண்டும். தேடுங்கள் கண்டைவீர்கள்.

D. அனல் மூட்டி எழுப்ப வேண்டும். அதிகாரம் பெற வேண்டும்

ஒவ்வொரு வரத்திற்கு ஏற்ற கிருபை இருக்கிறது, அளவு இருக்கிறது அதை பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். திரானிக்கு மிஞ்சி செயல்படுதல் கூடாது.

ஒவ்வொரு வரத்திற்கு ஏற்ற அபிசேகம் இருக்கிறது. அந்த அபிசேசகத்தை உறுதிப் படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு உரிய உறுதி வேண்டும். சிம்சோனை நினைத்து கொள்ள வேண்டும். பிரதிஷ்டை, பரிசுத்தம், ஆவியின் அபிசேகம் இல்லையெனில் வரங்கள் நம்மை விழ தள்ளி விடும். Never use your gifts until and unless you are empowered.

Part IV
வரங்களை சரியாக கையாள்தல்

வரங்கள் சரியான முறையில் பயன் படுத்த வேண்டும்.

A. வரங்களை புதைத்து/ மறைத்து வைக்க கூடாது.

சோம்பேறித்தனம் கூடாது. அசதியாக இருக்க கூடாது. பெற்ற வரத்தை கண்ணும் கருத்துமாக பயன்படுத்த வேண்டும்.

பெற்ற வரத்தை அற்பமாக எண்ண கூடாது. பிறரோடு ஒப்பிட்டு பார்த்து எஜமானரை முருமுறுக்க கூடாது. சாக்குப் போக்கு சொல்லி குற்றப்படுத்த கூடாது.

தாழ்வு மனப்பான்மை போட்டி, பொறாமை இருத்தல் கூடாது. ஏனெனில் ஒருவர்க்கு இருக்கும் 5 வரத்தை விட உங்களுக்கு இருக்கும் ஒரு வரத்தை கொண்டு கர்த்தர் செய்வது பெரிதாக இருக்கலாம்.

B. கிருபையை போக்கடித்து வரங்களை வீணாக பயன்படுத்த கூடாது

வரத்தை misuse செய்யகூடாது. அதை ஒரு பொருட்டாக எண்ணி பிறரை மிரட்ட, தவறாக பயன்படுத்த கூடாது.

வரத்தை சொந்த அலுவல்கள் மற்றும் சுய திட்டங்களை நிறைவேற்ற பயன்படுத்த கூடாது. இதன் பெயர் ஆவிக்குரிய வரம் என்பதாகும்.

C. தேவ சித்தத்தில் தேவன் குறித்த இடத்தில், குறித்த நேரத்தில் கையாள வேண்டும்

சபை பக்திவிருத்தி என்பது வரங்களின் பிரதான நோக்கம். எனவே சபை சார்ந்து, கர்த்தர் தந்த போதகரின் தலமையத்துவம் சார்ந்து பயன்படுத்த வேண்டும். அதினால் தான் வரங்களை பவுல் நமது சரீரத்திற்கு ஒப்பிட்டு சொல்கிறார். கை கையாக இருக்கட்டும், தலை தலையாக இருக்கட்டும். அவரவர் பொறுப்பு அறிந்து செயல்பட வேண்டும். அது தான் தேவ சித்தம்.

வரம் பெற்றவன் என்று கை கால் புரியாமல் ஏதாவது ஏடா கூடமாக செய்து கானானை இழந்து போக கூடாது. அவரது பலத்த கைக்குள் அடங்கி இருந்து பயன்பட வேண்டும். கனிகள் இல்லாத வரம் நம்மை கர்த்தரின் அங்கீகாரத்தை விட்டு அகற்றி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

D. வரங்களை தடைப் பண்னாதிருங்கள்.

வரங்களை நாடுங்கள். ஞான வரங்களை அதிகமாக நாடுங்கள். அவற்றைத் தடை போடாதிருங்கள் ஆனால் சோதித்து பார்த்து நலமானவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

சகலமும் கருத்தாகவும், நிதானமாகவும், ஒழுக்கமாகவும் செய்யப் பட வேண்டும். ஏனெனில் வரத்தை தந்தவர் அதை நிச்சயம் கணக்கு கேட்பார்.

கொஞ்சத்தில் உண்மை அதிக கனத்தை கொண்டு வரும். வரத்தை நாடுங்கள், அசதியாக இராதேயுங்கள், அனல் ஊட்டி பயன்படுத்துங்கள். ஏனெனில் அவனவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பிரதி பலனோடு இதோ சீக்கிரமாக வருகின்றார். கர்த்தர் கிருபை கூட இருப்பதாக!

செலின்
(வரங்களை கண்டுபிடிப்பது எப்படி என்ற புஸ்தகத்தை பெற தொடர்பு கொள்ளுங்கள். 9444468771)