
இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம் ! 60 விநாடிகள் ஒதுக்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்

இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம்: நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலை எதுவானாலும், அடுத்த 60 விநாடிகளுக்கு அதை ஒதுக்கி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். இதைச் செய்யாதபடி உங்களை நிறுத்த சாத்தானால் முடியுமா என்று பார்ப்போம்.
33 வயதில், இயேசு மரண தண்டனை விதிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் சிலுவையில் அறையப்படுதல் “மோசமான” மரணமாகும். மிக மோசமான குற்றவாளிகள் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று தீர்ப்புச் செய்யப்பட்டனர். அது சிலுவை மரணத்தைத் தண்டனையாகப்பெற்று, மற்ற குற்றவாளிகளைப் பார்க்கிலும், இயேசுவுக்கு இன்னும் மிகவும் பயங்கரமாக்கப்பட்டது. இயேசுவைச் சிலுவையில் ஆணிகளால் அறைந்து
அந்த தண்டனையை நிறைவேற்றினர்.
ஒவ்வொரு ஆணியும் 6 முதல் 8 அங்குலம் வரை இருந்தது. ஆணிகள் பொதுவாகச் சித்தரிப்பது போன்று, அவரது உள்ளங்கைகளில் அல்ல, ஆனால் அவரது மணிக்கட்டுகளில் ஆணியடிக்கப்பட்டது.
மணிக்கட்டில் இருந்து தோள்பட்டை வரை ஒரு இரத்தநாளம் இருக்கும். அந்த இரத்த நாளத்தைக் கிழிக்க ஆணியை எவ்விடத்தில் அடித்து அறைய வேண்டும் என்பதை ரோம போர்ச்சேவகர்கள் அறிந்திருந்தனர். மிகச்சரியான இடத்தில் ஆணிகள் அறையப்பட்டபோது, அந்த இரத்தநாளம் கிழிக்கப்பட்டு முறிந்தது, அப்போது இயேசு தமது முதுகுத் தசைகளைக்கொண்டு தம்மை நிலைநிறுத்தி சுவாசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அவருடைய இரு பாதங்களும் ஒன்று சேர்த்து ஆணியால் அறையப்பட்டன. இவ்வாறு அவர், தமது இருபாதங்களையும் ஒன்றாக்கி அறையப்பட்ட ஒற்றை ஆணியில் தம்மை நிலை நிறுத்தும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டார். மிகுந்த வேதனையினால் அவர் தமது கால்களைக்கொண்டு தம்மை நிலைநிறுத்த அவரால் முடியவில்லை. எனவே அவர் தமது முதுகை வளைத்தும், அதன்பின்பு கால்கள்மீது தமது பாரத்தை வைத்தும் சுவாசிக்கத் தொடர வேண்டியதாயிற்று.
அந்தப் போராட்டத்தை, வேதனையை, உபத்திரவத்தை, தைரியத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! இயேசு இந்த உண்மை நிலையை 3 மணிநேரத்திற்கும் மேலாகச் சகித்தார். ஆம், 3 மணி நேரத்திற்கு மேலாக! நீங்கள் இந்த வகையான துன்பத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
அவர் இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு, இயேசு இரத்தம் சிந்துதலை நிறுத்தினார். அவர் உடலின் காயங்களில் இருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தது. பொதுவான படங்களில் இருந்து அவருடைய கைகள் மற்றும் கால்கள் மற்றும் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்ட காயங்கள் ஆகியவற்றை நாம் காண்கிறோம்… ஆனால் அவருடைய காயங்கள் அவரது உடலில் உண்மையில் ஏற்படுத்தப்பட்டவை என்பதை நாம் உணருகிறோமா?
மணிக்கட்டுகள் மற்றும் ஒன்றின்மீது மற்றொன்று வைக்கப்பட்ட பாதங்கள் வழியாக, ஒரு சுத்தியல், பெரிய ஆணிகளைச் செலுத்திற்று, பின்பு ஒரு ரோமப்போர்ச்சேவகன் அவரது விலாவில் ஈட்டியால் குத்தினான். ஆனால் ஆணிகளும் ஈட்டியும் அவரது உடலைத் துளைப்பதற்கு முன்பாகவே அவர் சவுக்கால் அடிக்கப்பட்டிருந்தார். அந்த சவுக்கடி அவரது உடலின் சதையைக் கிழித்திருந்தது. அவரது முகம் சிதைக்கப்பட்டும், அவரது தாடி அவரது முகத்திலிருந்து பிய்க்கப்பட்டும் இருந்தது. முட்களால் ஆன கிரீடம் வைத்து இறுத்தப்பட்டதால் அவர் தலையில் கபால எலும்புகள் வரை ஆழமாக வெட்டப்பட்ட காயங்கள் உண்டாயின.
இந்த சித்திரவதையில் பெரும்பான்மையான மனிதர்கள் உயிர்பிழைப்பது கடினமாயிருந்தது. அவரிடத்தில் சிந்துவதற்கு இரத்தம் இனியும் இல்லை, எனவே அவரது காயங்களில் இருந்து தண்ணீர் வெளிவந்தது.
வளர்ந்த மனித உடலில் சுமார் 6.5 லிட்டர் இரத்தம் இருக்கும். இயேசு தமது 6.5 லிட்டர் இரத்தம் முழுவதையும் சிந்தினார். அவரது உடலில் மூன்று ஆணிகள் அடிக்கப்பட்டன; ஒரு முள்முடி அவரது தலையில் இறுத்தப்பட்டது. ரோமப்போர்ச்சேவகன் ஒருவன், இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தினான்.
இவைமாத்திரமின்றி, அவர் சுமார் இரண்டு கிலோமீட்டர்கள் தூரம் வரையில் தமது சிலுவையைச் சுமந்து சென்றார். அப்போது கூட்டம் அவரது முகத்தில் துப்பி, அவர் மீது கற்களை எறிந்தது.
சிலுவையின் குறுக்குச் சட்டத்தை மட்டுமே அவர் சுமந்து சென்றார். அது ஏறக்குறைய 70 கிலோ எடை கொண்டிருந்தது. கல்வாரி சென்றதும் அவர் கைகள் அந்தச் சட்டத்தில் வைத்து, ஆணிகளால் துளைக்கப்பட்டு சட்டத்துடன் பிணைக்கப்பட்ட பின்பு ஏற்கனவே அங்கு நட்டுவைக்கப்பட்டிருந்த மரச்சட்டம் ஒன்றில் இந்தக் குறுக்குச் சட்டம் பிணைக்கப்பட்டு, இவ்வாறு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இயேசு இந்த உபாதையை அனுபவித்து, உலக மக்கள் யாவரும் பரலோகம் செல்ல வழியைத் திறந்து வைத்தார்! அதனால் நீங்களும் நானும் மற்றும் அவரை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, உண்மையான கிறிஸ்தவ வாழ்வை வாழும் ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளைகளாக வழி அவரால் திறக்கப்பட்டது.
நமது பாவங்கள் யாவும் கழுவப்பட சிலுவை ஒரு வழியைத் திறந்து வைத்தது. அதைத் தயவுசெய்து புறக்கணிக்காதீர்கள்.
இயேசு நமக்காக மரித்தார். அவர் உங்களுக்காக மரித்தார். அவரது மரணம் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளையும் முட்டாள்தனமான புகைப்படங்களையும், பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் பரவச்செய்வது சுலபமாயிருக்கலாம். ஆனால் தேவனிடத்தில் சென்று நிற்கும்போது அதைப்பற்றிக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
தேவன் உங்களுக்கென்று ஒரு திட்டம் வகுத்திருக்கிறார். உங்களை மீட்க அவர் (இயேசு) அனுபவித்தது என்ன என்பதை உங்கள் நண்பர்கள் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது இதைப்பற்றிச் சிந்தியுங்கள்! தேவன் உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பாராக!
நீங்கள் செய்கிற மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தேவனிடம் ஜெபியுங்கள்!
நீங்கள் செய்யவேண்டியது…
1. இதை உங்களுக்கு அனுப்பியவருக்காக ஜெபியுங்கள்.
2. இதை உங்களால் முடிந்த அளவுக்கு நிறையப்பேர்களுக்கு அனுப்புங்கள்.
3. அப்போது மற்றவர்கள் உங்களுக்காக ஜெபிப்பார்கள். அநேகரை நீங்கள் ஜெபிக்கும் மக்களாக மாற்றும் வாய்ப்பு உங்களுக்கு இதன் மூலம் உண்டாகும்.
4. உங்கள் வாழ்விற்குத் தேவன் செய்துள்ளதை மதிக்கவும், அவருக்குப் பிரியமானதைச் செய்யவும் சற்றுச் சிந்தியுங்கள். நீங்கள் இதைச் செய்வது இயேசு கூறிய அறிவுறுத்துதலைப் பின்பற்றுவதாயிருக்கும்.
Holiest Best Good Friday Messages and Wishes 2021 for You: You go under His shadow, you are purified. You confess to Him. You are purified. He always takes care of you.
புனித வெள்ளி தினத்தில் வாசிக்க வேண்டிய சில பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தவறாமல் மறவாமல் ஒருமுறை வாசித்துப்பாருங்கள்