ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்

1. ரூத் புஸ்தகம் ஒரு சரித்திரம்.

1. எஸ்தர் புஸ்தகம் ஒரு சரித்திரம்.

2. ரூத் கணவனை இழந்த கைம்பெண்.

2. எஸ்தர் பெற்றோரை இழந்த ஆதரவற்ற மகள்

3. ரூத் தன் மாமியாரால் மகளாய் பாவிக்கப்பட்டாள்

3. எஸ்தர் மொர்தெகாயினால் மகளாய் ஏற்றக்கொள்ளப்பட்டாள்.

4. ரூத் தன் மாமியாருக்கு கீழ்ப்படிந்தாள்.

4. எஸ்தர் மொர்தெகாய்க்கு கீழ்ப்படிந்தாள்.

5. ரூத்துக்கு போவாஸ் கண்களில் தயை கிடைத்தது.

5. எஸ்தருக்கு அகாஸ்வேரு ராஜாவின் கண்களில் தயை கிடைத்தது.

6. ரூத் பெரும் செல்வந்தனான போவாஸ்க்கு மனைவியானாள்

6. எஸ்தர் பெரிய ராஜாவான அகாஸ்வேருக்கு மனைவியானாள்

7. எஸ்தர் யூதருக்கு மீட்பைக் கொண்டு வந்தாள்.

7. ரூத் உலகத்துக்கே மீட்பைக் கொண்டு வந்த கிறிஸ்து இயேசுவின் வரலாற்றில் இடம்பிடித்தாள்.