
அவர் சமீபமாய் வந்த போது நகரத்தைச்n பார்த்து அதற்காக கண்ணீர் விட்டு அழுது, லூக்கா : 19 : 41
வேதத்திலே இயேசு கண்ணீர் விட்டார் என்று பார்க்கிறோம். இயேசுவின் கண்கள் கலங்கியது. அவர் ஆவியிலும் கலங்கினார். மாம்சத்திலும் அவர் கண்கள் குலமாகியது. காரணமில்லாமல் அழுவதை தேவன் விரும்பமாட்டார். இயேசு சிலுவையில் பாடுபடும்போது பெண்கள் கூட்டம் மார்பில் அடித்துக் கொண்டு அழுதார்கள். இந்தக் குறிப்பில் இயேசுவின் கண்ணீர் விட்டார் என்பதைக் குறித்து கவனிக்க போவதில்லை . ஆனால் இயேசுவின் கண்ணீர் என்று வித்தியாசமாகக் கவனிக்கபோகிறோம்.
- இயேசு கண்ணீர் விட்டார்.
யோவா : 11 : 35
லூக்கா : 19 : 41 - இயேசு கண்ணீரை காண்கிறார்
2 இராஜா : 20 : 5 - இயேசு கண்ணீரை துடைக்கிறவர்
வெளி : 21 : 4 , 7 : 17
ஏசாயா : 25 : 8 - இயேசு கண்ணீர் விடாதே ( அழாதே )
லூக் : 7 : 13 , 8 : 52 - இயேசு கண்ணீரோடு ஜெபித்தவர்
எபி : 5 : 7
எரே : 31 : 16
சங் : 126 : 5
இயேசுவின் கண்ணீர் என்ற தலைப்பில் இயேசு கண்ணீரைக் காண்கிறார் என்றும், இயேசு கண்ணீரை துடைக்கிறவர் என்றும் இயேசு கண்ணீர் விடாதே என்று சொன்னவர் என்றும் , இயேசு கண்ணீரோடு ஜெபம் பண்ணீனார் என்றும் கடைசியாக இயேசுவே கண்ணீர் விட்டார் என்றும் வேதவசனத்தின்படி நாம் சிந்தித்தோம். கண்ணீரின் ஜெபம் வல்லமையுடையது.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur