காதல் கசக்குதையா…..

பின்ன இனிக்கவா செய்யும்
ஏண்டா எவனோ ஒருத்தன் பெற்ற பிள்ளையை மனதில் மனைவியாக்கி இரவெல்லாம் மாய கனவில் மிதந்து பகல் நேரத்தில் அந்தப் பெண் பிள்ளைகளை பின்பற்றி பார்வையில் மயக்கி வேலை வெட்டி இல்லாமல் மொபைலில் பேசி பேசி கடைசியாக வேல வெட்டி இல்லாத முண்டங்கள் நாலு பேர் துணையாக நின்று அந்த பிள்ளையை வரவைத்து ஓட வைப்பார்கள் பின்னர் நீதிமன்றத்திலோ காவல்நிலயத்திலோ ஒரு மஞ்சள் துண்டை மஞ்சள் கயிற்றில் தாலி கட்டி விட்டால்……. அப்பப்பா எதையோ சாதிச்சிட்டோம் ங்ற நினைப்பு. கல்யாணம் முடிஞ்சவங்களுக்கும் அதை முடிச்சு வைக்கிறவங்களுக்கும்…. சண்டாள குஞ்சுகளே…. தாய் தந்தை கோழிகளை விட்டு பறக்க நினைக்கிறீர்களே…. இது நியாயமா அந்த கடவுளுக்கு அடுக்குமா…. சீக்கிரமே கழுகுக்கும் காகத்திற்கும் நீங்கள் இரையாவீர்கள்…. சினிமா பைத்தியங்களே…. ஒரு இரவு காமபசியினால் தனது ஆசை வயிற்றை நிரப்பிக் கொண்டு ச்சீ என்று உதறி விட்டு வேறு ஒருத்தியை வேறு ஒருவனை பார்க்க மனமும் மாம்சமும் துடிக்குதே இதற்கு பெயர் தான் காதலா….. மானங்கெட்ட சமூகமே அடுத்தவர் காதலை ஏற்றுக் கொண்டு தனது சொந்த பிள்ளையின் காதலை ஏற்க மறுத்து ஆணவ கொலை செய்யும் ஈன பிறவிகளின் கொலை பசிக்கு ஆளாக வேண்டுமா…..

சார் நாங்க என்ன தான் செய்யனும்?

கவனியுங்கள் வாலிபர்களே….

1.கற்பை காத்துக்கொள்ளுங்கள்.
2.கெட்ட பெயர் வாங்காதிருங்கள்.
3.படிப்பு உழைப்பு நல்ல வேலை, இதில் கவனம் வையுங்கள்.
4.பெற்றோர் அல்லது போதகர் தேவ சித்தத்தின்படி ஏற்ற துணையை பார்க்கிற வரைக்கும் பொறுமையோடு இருங்கள்.
5.சரீர ஆரோக்கியத்தை பேணுங்கள்.
6.திருச்சபை ஜெபங்கள் ஆராதனைகள் மற்றும் ஊழியங்களில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.
7.ஆவிக்குரிய மற்றும் பரிசுத்தமானவர்களிடம் நட்பு வைக்க வேண்டும்.
8.அதிகாலை ஜெபமும் வேத வாசிப்பும் அவசியம் வேண்டும்.
9.அழகு படிப்பு அந்தஸ்து சாதியை பாராமல் தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்.
10.திருச்சபை போதகர் மற்றும் தாய் தகப்பன் சகோதர சகோதரிகள் உங்கள் கெட்ட நடக்கையின் நிமித்தமாக வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய சூழ்நிலை உருவாகாது கவனமாக இருங்கள்.