தேவன் பயன்படுத்திய பாத்திரம்

தேவன் பயன்படுத்திய பாத்திரம்

நோவா – குடிபோதையில் இருந்தவன் தேவனுடைய கண்களில் இரக்கம் பெற்றவன்….

ஆபிரகாம் – மிகவும் வயதானவர். ஆனால் விசுவாசத்தின் தந்தை யாக மாறினார்.

தாவிது – பாவத்தில் இருந்தவன்.. ஆனால் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக மாறினான்.

மோசே – திக்குவாயனாக இருந்தவரை 420 வருடமாக அடிமையாக இருந்தவரை இரட்சிக்பட காரணமாக திகழ்ந்தார்.. .

யோனா – தேவனிடம் கோபபட்டு சென்றவரை நினைவே பட்டனம் இரட்சிக்கபட காரணமாக இருந்தவன்.

பேதுரு – மிகவும் கோபக்காரன்…. ஆனால் அனேக சிஷர்களுக்கு தலைவனாகவும் அப்போஸ்தலராகவும் விழங்கினான்.

பவுல் – கொலைகாரன் ஆனால் அநேகரை இரட்சிக்கபட அநேக தீவுகள் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ள காரணமானவர்

தோமா – அவிசுவாசியாக இருந்தவன் இந்தியாவில் எழுப்புதல் உருவாக காரனமாணவர்..

அன்பானவர்களே,
மனிதர்கள் நம்மில் இருக்கும் நிறையை பார்த்து திறமையை பார்த்து நம் மீது அன்பு செலுத்துவார்கள். ஆனால் நம் இயேசு ஒருவர் மட்டுமே நம்மிடம் குறைகள் இருந்தாலும் அதைப்பார்த்து நம்மீது அன்பு செலுத்துவார். மட்டுமல்ல நமது குறைகளை நிறைவாக மாற்றுவார், நமது பலவீனங்ககளை மாற்றி பலப்படுத்துவார். .

ஏசாயா 60 :1 ,2 ல் எழும்பிப் பிரகாசி, ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும், ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார், அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

ஆண்டவர் உங்களோடு இருக்கிறார் அவர் நிச்சயமாக உங்களை உயர்த்துவார்,ஆசீர்வதிப்பார்..