
மெலிந்தோருக்கும் நலிந்தோருக்கும்! வித்யா’வின் விண் பார்வை!

வேதத்தை நம்பும் அன்பரே,
திடனற்றவர்களைத் தேற்றுங்கள்,
பலவீனரைத் தாங்குங்கள்,
எல்லாரிடத்திலும்
நீடிய சாந்தமாயிருங்கள்
(1 தெசலோனிக்கேயர் 5:14)
சோர்ந்து போகாமல்
நற்கிரியைகளைச் செய்து
மகிமையையும்
கனத்தையும் அழியாமையையும்
தேடுகிறவர்களுக்கு
நித்திய ஜீவனை அளிப்பார்
(ரோமர் 2:7) என்ற
வேத வாக்கியத்திற்கு
செயல்வடிவம் கொடுங்கள்.
SIS. DORCAS (தொற்காள்) அவர்களை
மறந்துவிடாதீர்கள்
(அப்போஸ்தலர் 9:36)
தன் ஜீவனத்திற்கு உண்டான
அனைத்தையும் எடுத்து
அதாவது,
அந்த இரண்டே இரண்டு காசைக்
கொண்டுவந்து
காணிக்கைப்பெட்டியில்
போட்டுவிட்ட அந்த
காணிக்கை மேரியை,
அதாவது, அந்த
ஏழை விதவையை
நினைத்துக்கொள்ளுங்கள்
( லூக்கா 21: 1-4)
பரிபூரணத்தினின்று
தேவனுக்கென்று போட்டவர்கள்
நற்சாட்சி பெறவில்லை!
தன் வறுமையிலிருந்து
தன் ஜீவனத்துக்கு
உண்டாயிருந்ததெல்லாம்
போட்டுவிட்டவள்
நற்சாட்சி பெற்றுவிட்டாள்
உடனடியாக
உன்னதர் இயேசு அவளது
available balance Nil என்பதை
வெளிச்சம்போட்டுக்
காட்டிவிட்டார்
இதை வாசிக்கிற உங்களது
current balance எவ்வளவு என்பதும்
அவருக்கு தெரியும்!
எப்படி என்று கேட்கிறீர்களா?
அந்த யாக்கோபின்
கிணற்றண்டையில்
தண்ணீர் மொண்டுகொள்ள வந்த
பெண்ணின் current situation ஐ
அப்படியே சொல்லிவிட்டார்
இயேசு அவளை நோக்கி:
நீ போய், உன் புருஷனை
இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
அதற்கு அந்த ஸ்திரீ
எனக்குப்புருஷன் இல்லை என்றாள்.
இயேசு அவளை நோக்கி:
எனக்குப் புருஷன்
இல்லையென்று
நீ சொன்னது சரிதான்.
எப்படியெனில், ஐந்து புருஷர்
உனக்கிருந்தார்கள்,
இப்பொழுது உனக்கிருக்கிறவன்
உனக்குப் புருஷனல்ல,
இதை உள்ளபடி
சொன்னாய் என்றார்.
MRI scan கூட
கொஞ்சம் தாமதமாய்
ரிப்போர்ட் கொடுக்கும்
இயேசு இமைப்பொழுதில்
சொல்லிவிட்டார்
அப்பொழுது அந்த ஸ்திரீ
அவரை நோக்கி:
ஆண்டவரே,
நீர் தீர்க்கதரிசி
என்று காண்கிறேன் என்றாள்
(யோவான் 4 :16 -19)
உயிர்த்தெழுந்த
தீர்க்கதரிசிக்கு தெரியாதா?
துர்கிரியைகள் நமக்கு வேண்டாம்.
நற்கிரியைகள் செய்து
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நற்பெயர் பெற்றுத்தருவோம்.
நற்கிரியைகளைச் செய்கிறதற்கு
நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்
சிருஷ்டிக்கப்பட்டு,
தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;
அவைகளில் நாம் நடக்கும்படி
அவர் முன்னதாக அவைகளை
ஆயத்தம்பண்ணியிருக்கிறார்
(எபேசியர் 2 :10)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்