காற்றே நீ யாருக்காக …     வித்யா’வின் விண் பார்வை

காற்றே நீ யாருக்காக … வித்யா’வின் விண் பார்வை

கடலுக்காக அல்ல.
கடற்கரையிலே இருக்கின்ற
மக்களுக்காகக்
காற்று  அடிக்கின்றது.

மரம் தனக்காக அல்ல
மனுகுலத்திற்காக
கனிகொடுக்கின்றது

வானமும் பூமியும்
உனக்காக

சோவென பெய்யும் மழை
உனக்காக

மாரியும் உறைந்த மழையும்
வானத்திலிருந்து இறங்கி,
அவ்விடத்துக்குத் திரும்பாமல்
பூமியை நனைத்து,
அதில் முளை கிளம்பி
விளையும்படிச்செய்து,
விதைக்கிறவனுக்கு விதையையும்,
புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும்
கொடுக்கிறது உனக்காக

  
என் வாயிலிருந்து
புறப்படும் வசனமும் உனக்காக

அது வெறுமையாய்
என்னிடத்திற்குத் திரும்பாமல்,
அது நான் விரும்புகிறதைச்செய்து,
உனக்காக நான் அதை அனுப்பின
காரியமாகும்படி வாய்க்கும்.

(ஏசாயா 55:10,11)

பூத்துக் குலுங்கும் மலர்கள்
உனக்காக

மலைகளில் மேய்கிற
ஆடு மாடுகள் உனக்காக

சமுத்திரத்தில் உள்ள மச்சங்கள்
உனக்காக

இயேசு யாருக்காக வந்தார்?
யாருக்காக மரித்தார்?
யாருக்காக உயிர்த்தார்?

உனக்காக!

நீ யாருக்காக?  

படைத்தான்
படைப்பெல்லாம் மனுவுக்காக
மனுவை படைத்தான்
தன்னை வணங்குவதற்காக


இந்த ஜனத்தை எனக்கென்று
ஏற்படுத்தினேன்;
இவர்கள் என் துதியை
சொல்லிவருவார்கள்.

(ஏசாயா 43:21)

நீ தேவனுக்காக
ஏற்படுத்தப்பட்டவன்

இந்த ஊரடங்கு வாழ்க்கையும்
ஊமை வாழ்க்கையும் பிடிக்கவில்லை
என்று புலம்பிக்கொண்டு
விழுந்துகிடக்காதே

யோசுவாவே நீ
யோர்தானை விட்டு
எழுந்து, கடந்து போ

(யோசுவா 1:2,3)

கர்த்தரின் துதியைச்
சொல்லிவருவதற்காக
உன்னை ஏற்படுத்தியிருக்கிறார்

எழுந்து வா

தெபொராளாகிய நீ
எழும்புமளவும்,
இஸ்ரவேலிலே நீ  
தாயாக எழும்புமளவும்,
கிராமங்கள் பாழாய்போகும்

இஸ்ரவேலின் கிராமங்கள்
பாழாய்போகும்
(நியாயாதிபதிகள் 5:7)

அது சரி!

இஸ்ரவேலின்
கிராமங்களை விடு

உன் குடும்பம்
உன் வீடு
உன் பட்டணம்
உன் சபை
பாழாய் போய்விடாதபடி


தெபொராளாகிய நீ எழும்பு!

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
மதுரை -14