இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..

இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..

நமது ஜெபங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கர்த்தரின் பார்வைக்குப் அசுத்தமாக இருக்க கூடாது! யோபு 16:17

சுத்திகரிப்பு இல்லாத ஜெபங்கள் எவை என்பதை ஆராயந்து பார்க்க கர்த்தர் உதவி செய்வாராக! கிட்டத்தட்ட பத்து விதமான ஜெபங்கள் கூடாது. அந்த ஜெபங்கள் கர்த்தருக்கு அசுத்தம்.

  1. வேதத்தின் படி நடக்காமல், வசனத்திற்கு செவி கொடுக்காமல், ஜெபிக்கிற ஜெபம்.
  2. அக்கிரம சிந்தை, பாவ சிந்தை மற்றும் அசுத்த எண்ணம் கொண்ட ஜெபம். ஜெபத்தில் தேவனுடைய முகத்தை மறைக்கும் பாவம் கொண்டு, பாவ அறிக்கை செய்து மனம் திரும்பாத ஜெபம். சங் 66:18
  3. சுயநீதியை பாராட்டி, நமது நீதியான காரியங்களை மேன்மை பாராட்டும் ஜெபம். பிறரை அற்பமாக எண்ணி, நம்மை மேன்மையாக கருதி ஜெபிக்கும் ஜெபம். லூக் 18:9-12
  4. வீன்வார்த்தையால் அலப்பும் ஜெபம். வார்த்தை விளையாட்டு விளையாடி ஜெபிக்கும் ஜெபம். மத 6:7
  5. சந்தேகம் மற்றும் அவுசுவாச ஜெபம். கர்த்தரை நம்பாமல் எனோதானோ என்று ஜெபிக்கும் ஜெபம். யாக் 1:6, மத 21:22
  6. அறைக்குள் ஜெபிக்காமல் தம்பட்டம் அடித்து தெருக்களிலும், வீதிகளில், ground களில் ஜெபிக்கும் மாய்மால ஜெபம். அறைக்குள் ஜெபித்தால் அம்பலத்தையும் அசைக்கலாம். மத 6:5, 23:14
  7. சோர்வான ஜெபம், மணமடிந்து போன ஜெபம், சலிப்பான ஜெபம். லூக் 18:1
  8. பழிவாங்கும் ஜெபம். கைகளில் இரத்தம் உள்ள ஜெபம். ஏசா 1:14-15 சண்டை யுத்தங்கள் உள்ள ஜெபம். யாக் 4:1-2
  9. இம்மைக்குரிய, பரிதபிக்க பட்ட ஜெபம் மத 6:31- உலகத்தின் காரியங்களுக்காக ஜெபிக்கும் வீணான ஜெபம்.
  10. தேவ சித்ததிர்க்கு விட்டு கொடுக்காமல் ஜெபிக்கும் சுய ஜெபம் அல்லது பிடிவாத ஜெபம். மத 26:39

நமது ஜெபம் சுகந்த வாசனையாக கர்த்தர் சமூகத்தில் பிரியமாக மாறட்டும். மேலான காரியங்களுக்கு வேண்டி ஜெபிக்கும், பரலோக ஜெபங்களாக மாறட்டும். பரிசுத்தவான்கள் ஜெபிக்கும் உயர்ந்த ஜெபங்களாக மாறட்டும்! பரிசுத்த ஜெப தூபங்கள் எழும்பட்டும். இப்படிபட்ட தனிப்பட்ட, பரிசுத்த சபை அறைகளின் ஜெபங்கள் அம்பலத்தை அரண்மனையை அசைக்கட்டும்.

செலின்