தேவனை ஏற்றுக் கொண்ட ஒருமனிதன் இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால் மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அந்த ஆண்டவருடைய பிள்ளை சொன்னது:- “அன்பான நண்பர்களே வருந்துகிறேன், இந்த கரங்கள் எனக்குரியவைகள் அல்ல” என்றாராம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

நமது சரீரம் தேவனுடைய ஆலயம் என்றும், ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால் தேவன் அவனை கெடுப்பார் என்றும், தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது என்று 1 கொரி 3:16,17 ல் வாசிக்கிறோம்.

தேவன் வாசம் பண்ண கூடிய சரித்தை பரிசுத்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும். புசித்தலிலும், குடித்தலிலும், உடுத்தலிலும், குடும்ப வாழ்விலும் கூட நம்முடைய இஷ்டபடி காரியங்களை செய்து விட முடியாது