நாள் தோறும் செய்யவேண்டியவைகள்

நாள் தோறும் செய்யவேண்டியவைகள்

” நாள் தோறும் “

.. நீ நாடோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாக முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. (நீதி 23 : 17 , 18).

நாள் தோறும் கர்த்தரை பற்றும் பயத்தோடு வாழ வேண்டும் அப்படியானால் உன் முடிவு நல்லபடியாகவும் உன் நம்பிக்கை வீண்போகாது. நாள் தோறும் அதாவது அனுதினமும் நமது கிறிஸ்துவ வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை குறித்து கவனிக்கலாம். வரும் புதிய வருடத்தில் நாடோறும் நாம் செய்ய வேண்டிய கடமைக்களைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். நாடோறும் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒழுங்காய் காணப்பட்டால் நம்மை காண்கிறார்கள் நமக்குள் இருக்கும் இயேசுவை காண்பார்கள். அப்போது கிறிஸ்துவ வாழ்க்கையில் நாம் தேறினவர்களாகக் காணப்படுவோம். தொடர்ந்து அனுதின நாடோறும் நமது கடமைகளை நிறைவேற்றுவோம். அனுதின கடமை என்ன என்பதைக் இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.

  1. நாள் தோறும் சர்வாங்க தகனபலி. நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டு குட்டிகளை பலியிட வேண்டும். காலையில் ஒரு ஆட்டுக் குட்டியையும் மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலி செலுத்த வேண்டும் இது நித்திய சர்வாங்க தகனபலி. இது கரத்தருக்கு சுகந்த வாசனைக்கான தகனபலி. (எண் : 28 : 3 , 4 , 6), (ரோமர் : 12 : 1, 15 : 15), (1 கொரி : 6 : 20). நாள் தோறும் அதிகாலையில் முதலில் செய்ய வேண்டியது நம்முடைய சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பதேயாகும். நம்மையே நாள் தோறும் தேவனுக்கு ஜீவபலகயாக நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது நமது கடமை.
  1. நாள் தோறும் ஜெபம் ஆண்டவரே எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உமது அடியானுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் . ஆண்டவரே உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துக்கிறேன். (சங் : 86 : 3 , 4 , 55 : 17), (தானி : 6 : 10), (லூக்கா : 24 : 52 , 53) நாள் தோறும் நாம் ஜெபிக்க வேண்டியது நம் கடமை. ஜெப ஜீவிய முள்ள கிறிஸ்துவானாக நாள் தோறும் நாம் காணப்படவேண்டும். நமது தேவன் ஜெபத்தை கேட்கிற தேவன். ஜெபத்திற்கு பதில் கொடுக்கிற தேவன்.
  1. நாள் தோறும் வேத வாசிப்பு. அந்தப் பட்டினத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் தெசலேனக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். (அப் : 16 : 11) நாள்தோறும் வேத வாசிப்புள்ள பெரோயா பட்டினத்தார் நல்ல குணசாலிகளாய் மறினார்கள். புதிய வருடத்திலிருந்து நாள் தோறும் வேதவாசிப்பு உங்கள் கடமையாகவும் கட்டாயமாகும் இருக்கட்டும் நாள் தோறும் வேத வாசிப்பு உங்களைப் நல்ல குணசாலியாக மாற்றும்.
  1. நாள் தோறும் இயேசுவின் நாமத்தைத் தியானிக்க வேண்டும். இதுவும் நம்மேல் விழுந்த கடமை. அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிக்கூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்த திருப்பார்கள் (சங் : 89 : 16), (பிலி : 2 : 10 , 11), (எபி 1 : 4 , அப் : 4 : 12), (மத் 28 : 18 – 20), (உன் 1 : 3), (ஏசா 26 : 8), (சங் : 9 : 10 , 91 : 14, 16) இயேசுவின் நாமத்தை நாள்தோறும் தியானிக்க வேண்டும். இயேசுவின் நாமத்தை தியானிக்கும் போதுபல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
  1. நாள் தோறும் போதித்தல் அவசியம் தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் , இடைவிடாமல் உபதேசம் பண்ணி இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். (அப் : 5 : 12), (யாக் : 5 : 20), (1 கொரி : 9 : 16), (2 தீமோ : 4 : 2), (சங் : 51 : 12 , 13), (மத் : 24 : 14) நாள்தோறும் நமது கிறிஸ்துவ வாழ்க்கையில் நாம் செய்யும் கடமைகளைக் குறித்து நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
  1. நாள் தோறும் புத்தி சொல்லவேண்டும் உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டு போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக் கொருவர் புத்தி சொல்லுங்கள்.(எபி : 3 : 13 , 10 : 25), (2 தீமோ : 4 : 2), (யாக் : 5 : 19 , 20), (ரோமர் : 15 : 14), (1 தெச : 5 : 14 , 15) ஆகையால் புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதில் தரித்திருக்ககடவன்.
  1. நாள் தோறும் விழித்திருத்தல் என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிக்கொடுத்திற மனுஷன் பாக்கியவான். (நீதி : 8 : 8 : 34) (உன் : 5 : 2) ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போமாக. நாள் தோறும் நமது கிருஸ்தவ வாழ்க்கையைக் குறித்து இதுகாறும் தியானித்துக் கொண்டிருந்தோம். வரும் புதிய வருடத்தில் நாள் தோறும் நாம் செய்யவேண்டிய கடமைகளைச் நிறைவேற்றுவோம் என்று தீர்மானம் எடுப்போம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur