
நேர்மையாக ஆனால் கவனக்குறைவாக மற்றும் மிகவும் பிஸியாக இருக்கும் போதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த அவசர (அற்புதமான) பதிவு

நேர்மையாக ஆனால் கவனக்குறைவாக மற்றும் மிகவும் பிஸியாக இருக்கும் போதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு …
பல சபைத் தலைவர்கள் பக்கவாதம், மாரடைப்பு, பலவீனங்கள் மற்றும் மன அழுத்தத்தின் விளைவாக முன்கூட்டியே இறந்துவிடுவடுகிறார்கள். யாரும் இந்த வகையான போதனைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. நானும் சில வருடங்களுக்கு முன்பு இதே தவறைச் செய்தேன், ஆனால் கர்த்தர் கிருபையாய் என்னைக் குணப்படுத்தினார், அதனால்தான் இன்று இதை உங்களிடம் கொண்டு வர முடிந்திருக்கின்றது.
ஊழியத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சோர்வு:
(10 மாத லாக்டவுனுக்கு பிறகு தீவிரமாய் இருப்பது நல்லதுதான், ஆனால் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்வது நல்லது) …
சில நாட்களுக்கு முன்பு, ஒரு போதகர் தனது தேவாலயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார், மக்கள் பிரசங்கத்தை மிகவும் கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று அவர் அப்படியே உறைந்துபோய் கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது, இதை எழுதும் நேரத்திலும் இன்னும் அவர் கண்களைத் திறக்கவில்லை!
மற்றொரு பாஸ்டர் 100 நாட்களுக்கு உபவாசம் இருக்க தீர்மானித்து ஒரு மலைக்குச் சென்றார். அவர் உபவாசத்தைத் தொடங்கினார். தீவிர உபவாசத்தின் 31 வது நாளில், அவர் சரிந்து, நடுங்கத் தொடங்கினார், பேச முடியவில்லை, கை, கால்களின் பயன்பாட்டை இழந்தார். அவரது சர்க்கரை அளவு மிகவும் குறைந்து, அவர் இப்போது வரை அவரது உடல்நலத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றார்.
ஒரு போதகர் தீவிரமாக பிரசங்கித்துக் கொண்டிருந்தார், திடீரென்று பலிபீடத்திலிருந்து கீழே விழுந்து அங்கேயே இறந்தார். மற்றொரு பாஸ்டர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவருக்கு 50 வயது, ஆனால் சோதனை முடிவில் அவரது இதயம் 80 வயதுடையது போல பலவீனமாயிருந்தது என்பதைக் காட்டியது!
இவை அனைத்தும் ஆவிக்குரிய தாக்குதல்கள் அல்ல. ஊழியர்களின் மன அழுத்தம், அதிக வேலைப்பழு மற்றும் ஊழியம்-தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலை இல்லாமை ஆகியவற்றின் முடிவுகள்.
வேதத்திலிருந்து சில ஆதாரங்கள் – 1 இராஜா 19: 1-4; 2 இராஜா 13: 14-21
ஊழியக்காரராய் இருப்பது 24 மணி நேர வேலை. ஒரு போதகராக இருப்பது முழு உலகிலும் கடினமான வேலை. பெரும்பாலான ஊழியர்கள் ஊழியம் மற்றும் சபை சார்ந்த வேலைகளுக்கு அடிமையானவர்கள். இதன் விளைவாக மன அழுத்தம் மற்றும் விரக்தி ஏற்படுகிறது. மன அழுத்தம் என்பது சோர்வு, உடலில் வலி, விரக்தி, தூக்கமின்மை, மனப்போராட்டம், உணர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் உடல் பருமன் போன்ற விளைவுகளை கொடுக்கும். ஆனாலும் நீங்கள் ஊழியத்தை நிறுத்த முடியாது, தொடர்ந்து செய்து தான் ஆகவேண்டும். ஏனென்றால் செய்ய வேண்டிய ஊழியம் அதிகம்!
1. ஊழியர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் சில காரியங்கள் இங்கே: –
• சபை வளர்ச்சியின்மை
• பொருளாதார குறைபாடு
• சபைகளுக்கிடையே போட்டி
• நன்றாக இருப்பது போல நடிக்க வேண்டிய சூழ்நிலைகள்
• தொடர்ச்சியான கூட்டங்கள்
• பெரிய பெரிய திட்டங்கள் மற்றும் இலக்குகள்
• நடைமுறையில் சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகள்.
• தேவையில்லாத கவலைகள்.
• பிரச்சனைகளை உண்டாக்கும் விசுவாசிகள்
• பிரச்சனைக்குரிய சக ஊழியர்கள்
• செலுத்த வேண்டிய கடன் தொகைகள்
• சபையில் ஆட்களின் குறைவான வருகை
• வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள்
• தலைமையிலிருந்து வரும் அழுத்தங்கள்
• போதகர் பின்பற்ற வேண்டிய எழுதப்படாத சட்டங்கள்
மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த மன அழுத்தத்தைத் தூண்டும் காரணிகளின் விளைவாக பெரும்பாலான இக்கால போதகர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். இவை அனைத்தும் ஒரு போதகருக்கு ஒரே நேரத்தில் வருமானால் இந்த ஊழியர் நிச்சயமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி, மனச்சோர்வை அனுபவிப்பார்.
2. மன அழுத்தம் மற்றும் மனச்வோர்வு ஆகியவற்றின் பாதகமான விளைவுகள் – 1 இராஜா. 19: 1-4; 1 சாமு. 13: 8-14
• மனச்சோர்வினால் ஊழிய ஆர்வம் குறைந்து போகும், ஆவிக்குரிய உணர்வில்லாத சூழ்நிலை உருவாகும், வாஞ்சையை இழந்து வாழவே விருப்பமில்லாத சூழ்நிலை ஏற்படும்.
• மோசமான உடல்நலம் – பக்கவாதம், அதிக அல்லது குறைந்த சர்க்கரை அளவு.
• குடும்ப நெருக்கடி – பிரிவினை, விவாகரத்து மற்றும் வழிமாறும் பிள்ளைகள்.
• தீர்க்கப்படாத மோதல் – கோபம், எரிச்சல் மற்றும் தாறுமாறான வார்த்தைகள்.
• மோசமான செயல்திறன் – உணர்ச்சி குறைவு.
• நிதி இழப்பு – கடன்கள், இழப்புகள் மற்றும் மோசமான முடிவுகள்.
3. ஊழியம் மற்றும் தனி வாழ்க்கை – சமநிலையை கடைபிடித்தல் – மத்தேயு 11:28-30
ஊழியத்திற்கும் தனி வாழ்க்கைக்கும் இடையில் மிகவும் தேவையான சமநிலையை ஊழியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியம். உண்மையிலேயே தேவன் கொடுக்கும் நுகம் எளிதானது என்றால், ஊழியர்கள் ஏன் ஊழியத்தில் அதிக சுமைகளை அனுபவிக்கிறார்கள்? இது ஊழியம் மற்றும் தனி வாழ்க்கையில் சமநிலை இல்லாததன் விளைவாகும்!
ஒரு ஊழியருக்கு கீழ்க்கண்டவற்றிளெல்லாம் சரியான சமநிலை இருக்க வேண்டும்
• உணர்ச்சி சமநிலை.
• மன சமநிலை.
• குடும்ப சமநிலை.
• ஆவிக்குரிய சமநிலை.
• சமூக சமநிலை.
• நிதி இருப்பு.
• உடல் சமநிலை.
• உளவியல் சமநிலை.
இந்த பகுதிகளிளெல்லாம் நீங்கள் சமநிலையில் இல்லை என்றால், நீங்கள் மற்றவர்களுக்கு வெற்றிகரமாக ஊழியம் செய்ய முடியாது.
இந்த சமநிலையை அடைவதற்கான படிகள் இங்கே:
- உங்கள் முன்னுரிமைகளை சரியாக மறு வரிசைப்படுத்துங்கள்: முதலில் தேவன், இரண்டாவது குடும்பம், கடைசியாக ஊழியம்.
- ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவில் சாப்பிடுங்கள்: கடினமான உணவுகளை மாலை 6-7 மணிக்குப் பிறகு சாப்பிட வேண்டாம்.
- சுத்தமான நீரை அதிகம் குடிக்கவும்.
- மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து, உங்கள் வேலையை பிரித்து கொடுக்கவும்.
- உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரங்களை செலவிடுங்கள்.
- தேவனோடு சமாதானமாக இருங்கள், தெய்வீக அமைதியைப் பெறுங்கள் – ஏசாயா 26:34.
- நச்சு உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் சொற்களை தவிர்த்துவிடுங்கள்.
- உங்களை மனதை புதுப்பிக்க ஆரோக்கியமான இடைவெளிகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.
- தேவனைத் தேடவும், தேவ சமுகத்தில் காத்திருக்கவும் அதிக நேரம் ஒதுக்குங்கள்.
- உடற்பயிற்சி – நடை பயிற்சி, சைக்கிள் சவாரி அல்லது நீச்சல் பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும்.
- விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் – விடுமுறை எடுத்து குடும்பத்தோடு சுற்றுலா சென்று வாருங்கள், ஓய்வெடுங்கள்.
- இரவு 7-8 மணி நேரம் தூங்க கற்றுக்கொள்ளுங்கள். அல்லது பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கத்தைப் போடுங்கள்.
- நீங்கள் தேவனுக்காக கிரியை செய்யாமல், அவர் உங்கள் மூலம் கிரியை செய்ய அவரை அண்டிக் கொள்ளுங்கள்.
ராபர்ட் முர்ரே என்ற ஊழியர் தனது மரண படுக்கையில் இவ்வாறு சொன்னார்: “தேவன் எனக்கு ஒரு குதிரையையும் (சரீரத்தையும்) ஒரு ஊழியத்தையும் கொடுத்தார், இப்போது நான் குதிரையைக் கொன்றுவிட்டேன், எனவே அவர் தந்த ஊழியத்தை நான் இப்போது செய்ய முடியவில்லை” என்றார். அவர் 26 வயதில் தன் ஊழியத்தைத் தொடங்கினார், 29 வயதில் இறந்தார்!
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!
எழுதியவர்: பெயர் தெரியவில்லை