இன்று நான் ஒரு யூதனை உன்னிடத்திற்கு அனுப்ப போகிறேன்

இன்று நான் ஒரு யூதனை உன்னிடத்திற்கு அனுப்ப போகிறேன்

ஹாலந்து தேசத்தில் ஒரு ஜெப வீரன் ” ஆண்டவரே, ஒரு யூதனையாகிலும் நான் இரட்சிப்பண்டை வழி நடத்தும் படி எனக்கு கிருபை செய்யும்!!!!என ஜெபித்துக் கொண்டே இருந்தார்.

பல வருடங்கள் ஆனது. ஒரு யூதனையும் அவர் சந்திக்கவேயில்லை ஆனாலும் சோர்ந்து போகாமல் “யூத குல இரட்சிப்புக்காக மன்றாடிக் கொண்டே இருந்தார்!!! கர்த்தர் “மெல்லிய குரலில், இன்று நான் ஒரு யூதனை உன்னிடத்திற்கு அனுப்ப போகிறேன் ” என்றதும் அவர்  அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

காலை முதல் மாலை வரை கதவை திறந்து வைத்து தேவன் அனுப்ப போகிற. அந்த யூதனுக்காக காத்திருந்தார. மாலை 3 மணி ஆனது!! ஒரு கார் வந்து பழுதடைந்து நின்றது அவர் தெருவில் ஓட்டிக் கொண்டு வந்த அந்த வாலிபனை பார்த்ததும் யூதன் என தெரிந்து கொண்டார் தேனிலவு கொண்டாட ஹாலந்து தேசத்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள் காரை நோக்கி இவர் சென்று, மிகுந்த அன்போடு அவர்களை தன் வீட்டிற்கு வரும் படி அழைத்து, தேநீர், சிற்றுண்டி கொடுத்து அவர்களை  உபசரித்தார் ஒரு மெக்கானிக்கை வரவழைக்க சொல்லி,காரை சரி செய்யும் படியான காரியங்களை செய்கிறார். யூத தம்பதிகளுக்கோ ஓரே  ஆச்சரியம்! !முன்பின் தெரியாத நம்மிடம்  இவ்வளவு அன்பு பாராட்டுகிறாரே என வியந்தனர்.

அதன்பின்பு, அவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல ஆரம்பித்தார்!!! தன் சாட்சியை சொல்லி ” இயேசுவே மெய்யான தெய்வம்” அவரை ஏற்றுக் கொள்வீர்களா? என கேட்டதற்கு அந்த யூத வாலிப ன்  மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அன்பிற்காக நாங்கள் நன்றி செலுத்தினாலும்,உங்களுடைய தெய்வமாகிய இயேசுவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என மறுக்க, இவரும் சத்தியத்தை ஆழமாக சொல்ல,அந்த யூத வாலிபனும்,அவரின் மனைவியும் நிராகரித்தனர். இயேசு எங்களைப் போல ஒரு யூதன் தச்சுத் தொழில் செய்தவர் அவர் தெய்வமாகிவிட மாட்டார். என்று சொல்லி விட்டு, நாங்கள் கிளம்புகிறோம் என காரை Start பண்ணினார் அந்த ஜெப வீரன் புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்து “நேரம் கிடைக்கும் போது இதை வாசியுங்க என கொடுக்க ,அந்த யூத வாலிபனோ அதை அசட்டையாக ,தன்னுடைய கார் டிக்கியில் போட்டுவிட்டு கிளம்புகிறார். பல மாதங்கள் கடக்கிறது!!!ஒரு நாள் அந்த யூத வாலிபன்     ஓய்வாக,தனிமையாக.  இருக்கும் போது கார் டிக்கியை சுத்தம் செய்யும் போது,புதிய ஏற்பாட்டை கண்டு ,அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார் .

கர்த்தருடையை வெளிச்சம் அவருக்குள் வந்தது. கண்ணீரோடு இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டார் மனைவியினுடைய கண்களைத் திறந்தார்!!அவர்கள் தேவனுடைய வல்லமையான ஊழியக்காரர்களாக மாறினார்கள் அந்த யூத வாலிபன் யாரென்றால் ருமேனியா தேசத்திலே 14 வருடங்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு கிறிஸ்துவுக்காக பல கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்த ” போதகர் ரிச்சர்ட் உம்பிராண்டு ” அவர்களே இவருடைய சரீரத்தில் 18. பெரிய தழும்புகளும்,பல இடத்தில் சதைகள் அறுக்கப்பட்ட குழிகளும் உண்டு. கிறிஸ்துவை மறுதலிக்காத படி இவர் பட்ட பாடுகள் எண்ணிடலங்காதவை.

ஆம். நாம்  கர்த்தருக்காக செய்யும் ஊழியங்களிலே  பலனை க் காண முடியவில்லையே என  சோர்ந்து போக வேண்டியதில்லை. என்னடா இது இந்த மனுசன் இரட்சிக்கப்படவில்லையே!! இந்த பெண் மனந்திரும்பாமல் காணப்படுகிறாளே என சோர்ந்து போக வேண்டியதில்லை நாம் வாஞ்சை யோடு,கரிசனையோடு தேவனுக்காக. செய்யும்   ஆத்தும ஆதாயங்களிலே பலனைக் காண தேவன் அருள்புரிவார் விளையச் செய்கிற தேவனாலே பலனைப்   பெறுவோம் ஒரு நாள் நினைவிற்கு; உன் ஆகாரத்தைத் தண்ணீர் கள் மேல் போடு;அநேக நாட்களுக்கு பின்பு அதின் பலனைக் காண்பாய்!! பிரசங்கி 11:1