சபை என்பது
குட்டி ராணுவம் போல

இருக்க வேண்டும்.

அதோடு
யுத்த களம் போலவும்
இருக்க வேண்டும்.
 
அங்கே முழங்கால்கள்
முடக்கப்பட
வேண்டும்

கைகள் உயர்த்தப்பட
வேண்டும்.

கண்கள் பர்வதத்தை
நோக்கி
பார்க்கவேண்டும்

அப்படியே பேதுரு
சிறைச்சாலையிலே
காக்கப்பட்டிருக்கையில்
சபையார் அவனுக்காக
தேவனை நோக்கி
ஊக்கத்தோடே
ஜெபம்பண்ணினார்கள்

(அப். 12 :5)

யுத்தகள ஜெபம்
WARFARE PRAYER

ஏறெடுக்கப்பட்டுக்
கொண்டிருக்கும்போது 
கர்த்தர் தூதனை அனுப்பி
பேதுருவை
விடுதலையாக்கினார்

தேவ ஜனங்கள்
பாடிக்கொண்டே
சேனைகளைப் போல
வெற்றியை நோக்கிப்
புறப்பட்டுச்
செல்லவேண்டும்
(2 நாளாகமம் 20:22)

தொல்லை என்ற  
எல்லையில் புறப்பட்டு
பெராக்கா என்ற  
இடம் வரை சென்று
துதிகளை ஏறெடுக்க  
வேண்டும்

(2 நாளாகமம் 20: 25, 26)
 
இருபதாம் சங்கீதம்,
ஜெபத்தில்  துவங்கி
ஜெயத்தில் முடிகிறது.

இருபத்தியோராம்
சங்கீதம்,   
பெற்ற வெற்றியை
தக்கவைத்துகொள்வதைக்
காண்பிக்கிறது.

நாம் கர்த்தரை
நம்புவோமானால்
கர்த்தர் நம்மை
ஒரு இடத்தில்
இருந்து எடுத்து
இன்னொரு
இடத்தில் கொண்டுபோய்  
வைப்பார்   


அதாவது
தொல்லை என்ற
எல்லையில் இருந்து எடுத்து
துதி என்ற சோலையில்
கொண்டுபோய் வைப்பார்.

அப்படி கொண்டுபோய்  
வைப்பதற்கு அநேக
காரியங்களை நாம்  
செய்ய வேண்டிருக்கிறது.

அதிலே முதலாவது  
ஜெபம் செய்யவேண்டும்   

தொல்லை முதல் துதிவரை
கர்த்தர் நம்மை
நடத்திச்செல்ல  
வேண்டுமானால்
நம்முடைய  
பங்கு அவசியம் தேவை
அதுதான் ஜெபம்.

ஜெபம் என்பது மிகவும்  
முக்கியமானது
அதாவது

நாம் உயிர்வாழ
காற்று அவசியம்

அதுபோல

ஆவிக்குரிய
வாழ்வில் எதிர்நீச்சல் போட
ஜெபம் என்பது  மிகவும்
அவசியமாயிருக்கிறது.

போர்வீரர்களுக்கு
ஆயுதங்கள் எப்படி
அவசியமோ  


அப்படியே
ஜெயம்பெற
வேண்டுமானால்
தேவனுடைய
போர்சேவகர்களாகிய
நமக்கு ஜெபம்
அவசியம் தேவை

ஜெபம் நமக்குக்
கிடைத்த  ஒரு
பெரிய ஆயுதம்.

ஏனென்றால்
ஜெபம்தான் தேவ
வல்லமையை

கட்டவிழ்கிறது

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது
போர்க்களம் போன்றது  
 
உலகத்தில் எங்கேயும்  
இப்படிப்பட்ட
போர்க்களத்தைக்
காணமுடியாது.

இயேசுகிறிஸ்துவின்
போர் சேவகர்களாகிய
நமக்கு (2 தீமோ. 2:3)
தேவனுடைய
சத்துருக்களோடு
போராட்டம் உண்டு.


நீங்கள் பொல்லாங்கனை
ஜெயித்ததினாலும்,
உங்களுக்கு
எழுதியிருக்கிறேன்.
(1 யோவான் 2:14)

ஏனெனில், மாம்சத்தோடும்
இரத்தத்தோடுமல்ல,
துரைத்தனங்களோடும்,
அதிகாரங்களோடும்,
இப்பிரபஞ்சத்தின் அந்தகார
லோகாதிபதிகளோடும்,
வானமண்டலங்களிலுள்ள
பொல்லாத ஆவிகளின்
சேனைகளோடும் நமக்குப்
போராட்டம் உண்டு.


எனவே
நாம் தேவனுடைய  
சித்தத்தின்படி  
எப்பாப்பிரா போல
ஜெபத்தில்
போராடவேண்டும்

(கொலோ.4:12)

ஜெபமும்
வேத வசனங்களும்
இணைந்து
செல்லவேண்டும்

வெறும்
ஜெபத்தை வைத்து
ஜெயிக்க முடியாது

வெறும்
வசனத்தை வைத்து
வெற்றிபெற முடியாது

இரண்டும் தேவை

ஒரே ஒரு சிறகை வைத்து
பறவையால் பறக்க முடியாது


ஜெபமும் வேத வசனங்களும்
நம்முடைய இரண்டு
கண்கள் போல.

ஒரு பறவையின்
இரண்டு சிறகுகள் போல  

தேவனுடைய
வார்த்தையானது

ஜீவனும் வல்லமையும்
உள்ளதாயும்,
இருபுறமும் கருக்குள்ள
எந்தப் பட்டயத்திலும்
கருக்கானதாயும்,
ஆத்துமாவையும்
ஆவியையும்,
கணுக்களையும் ஊனையும்
பிரிக்கத்தக்கதாக
உருவக் குத்துகிறதாயும்,
இருதயத்தின் நினைவுகளையும்
யோசனைகளையும்
வகையறுக்கிறதாயும்
இருக்கிறது
(எபிரெயர் 4 :12)  

பொல்லாங்கன் எய்யும்
அக்கினியாஸ்திரங்களையெல்லாம்
அவித்துப்போடத்தக்கதாய்,
எல்லாவற்றிற்கும் மேலாக
விசுவாசமென்னும்
கேடகத்தைப்
பிடித்துக்கொண்டவர்களாயும்
நில்லுங்கள்
(எபேசியர் 6:17,18)

இரட்சணியமென்னும்
தலைச்சீராவையும்,
தேவவசனமாகிய ஆவியின்
பட்டயத்தையும்
எடுத்துக்கொள்ளுங்கள்.


எந்தச் சமயத்திலும்
சகலவிதமான
வேண்டுதலோடும்
விண்ணப்பத்தோடும்
ஆவியினாலே ஜெபம்பண்ணி,

அதன்பொருட்டு மிகுந்த
மனஉறுதியோடும்
சகல பரிசுத்தவான்களுக்காகவும்
பண்ணும் வேண்டுதலோடும்
விழித்துக்கொண்டிருங்கள்.


நாங்கள் உமது இரட்சிப்பினால்
மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய
நாமத்திலே கொடியேற்றுவோம்

(சங்கீதம் 20:5)

தொல்லை To துதி
கர்த்தர் உங்களை நடத்துவார்

Pastor J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director – Literature Dept. tcnmedia.in
Radio Speaker – Aaruthal FM
Recipient of NALLAASAAN
International Award,
Malaysia 2021