
உபவாசம் பற்றிய உண்மை சத்தியங்கள்

உபவாசம்
பிசாசு உக்கிர பகையாய் பகைத்து வெறுக்கிற ஒரு காரியம் உபவாசம். உபவாசமிருந்தால் புசியாமலும், குடியாமலும் இருப்பதே மேன்மையான, முறையான, பலனுள்ள உபவாசமாகும் (எஸ்தர் 4-16).
உபவாச நாட்களில் வீண் வார்த்தைகள் பேசாமல் முடிந்த அளவு அதிகமான நேரத்தை ஜெபத்திலும், வேத வசன தியானத்திலும், கர்த்தரை பாடித் துதிப்பதிலும் கட்டாயம் செலவிட வேண்டும். உபவாசம் இருக்கும் நாட்களில் சரிரம் மிகவும் உஷ்ணமாயிருக்கும். எனவே உபவாச நாட்களில் தினமும் குளிப்பது அவசியம். உபவாசத்தை முடிக்கும் போது பழச்சாறு அல்லது தண்ணீர் நிறைய குடித்து ஒட்டி உலர்ந்து கிடக்கும் நம் வயிற்றை ஒழுங்கு நிலைக்கு கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆகாரம் உட்கொள்ள வேண்டும்.
கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற கிருபைக்கு தக்கதாக ஒரு வேளை, இரண்டு வேளை, 1 நாள், 2 நாள், 3 நாள் உபவாசம் இருக்கலாம். முகமதியர்கள் 40 நாட்கள் (ரம்ஜான் நோன்பு) பகலில் எதுவும் சாப்பிட மாட்டார்கள். சபரிமலை செல்லும் பக்தர்களும் விரதம் இருப்பதை காணலாம்.
உலகப்பிரகாரமான ஆசிர்வாதங்கள், நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக உபவாசிப்பதை காட்டிலும் “நான் இயேசுவை போலாக வேண்டும்” “என் மூலம் இயேசுவின் நாமம் மகிமை பட வேண்டும்” “ஆவியின் வரங்களை பெற வேண்டும்” என்று ஜெபிப்பது கர்த்தருடைய இருதயத்திற்கு மிகவும் உகந்தைவைகளாகும்.
ஜெபத்துடன் உபவாசத்தை தொடங்கி ஜெபத்துடன் அதை முடிக்க வேண்டும். உபவாச நாட்களில் ஆகாரங்களண்டை செல்லுவதையும், அதை மற்றவர்களுக்கு பரிமாறுவதையும் தவிர்த்து கொள்ளுதல் ஒரு ஞானமான செய்கையாகும்.
உபவாசம் நம்மை தாழ்த்துவதற்கு அடையாளம் (எஸ்றா 8-21). உபவாச நாட்களில் உலக வேலை செய்ய கூடாது (ஏசா 58-3). நாம் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது (மத் 6-16)
வயதானவர்கள், வியாதி உள்ளவர்கள் (super, pressure etc.) உபவாசம் எடுக்க கூடாது.
வேதத்தில் உபவாசம் எடுத்தவர்கள் →
1) இயேசு (40 நாள் இரவும் பகலும்) – மத் 4-2
2)தானியேல் (9-3)
3) எஸ்தர் (4-16),
4) நெகேமியா (1-4)
5) எஸ்றா (8-21)
6) தாவீது – 2 சாமு 12-16
7) சவுல் – 2 சாமு 1-12
8) யோசபாத் – 2 நாளா 20-3
9) கொர்நேலியு – அப் 10-30
பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள் – யோவேல் 1-14
84 வயதுள்ள அந்த விதவை இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள். லூக் 2:37