இரு வrich செய்திகள்! – வித்யா’வின் விண் பார்வை!

இரு வrich செய்திகள்! – வித்யா’வின் விண் பார்வை!

சிம்சோன் (SIM ZONE) புலம்பினான்
சிமியோன் புலவனானான்

முன்னவன் இளம் வாலிBun
பின்னவர் பழுத்தப் பழம்

தெலீலாள் போட்ட நாடகத்தின்
கடைசிக் காட்சியில்

கண்களைப் பிடுங்குவது போல
காட்சி அல்ல, அது நிஜம்!

கண்டேன் என் கண்குளிர
என்ற பாடல் பிறக்க
காரணமாயிருந்தவர் சிமியோன் தாத்தா

தாத்தா யோபுவைப் போல கண்களோடு
உடன்படிக்கை செய்திருந்தார்

சிங்கத்தைக் கொன்ற
சிம்சோனின் கண்கள்
தோண்டப்பட்டது

உலகத்தை வென்ற
சிமியோனின் கண்கள்
உலக இரட்சகரைக் கண்டது

ஆபிரகாம் விசுவாசித்தான் 
லோத்து விவாதித்தான் 

லோத்து குடும்ப மற்றும்
சோதோம் பட்டணத்தின்
விவகாரத் துறை அமைச்சரானார்

ஆபிரகாம் கோத்திர 
தலைவரானார்

ஈசாக்கு தியானித்தான்
ஏசேக்கை சகித்தான்

பிந்தித்தான்
ரெகொபோத்தைச் சந்தித்தான் 

மனிதருக்கு முன்
மண்டியிடாதவன் யோசேப்பு

தனி வாழ்வில் பசுமை கண்டான்,
தேசத்தில் செழுமை கண்டான்

சிக்கன் 65’ பிரபலமான அளவுக்கு
காலேப் 85′ பிரபலமாகவில்லை!

இங்கும் அங்கும் சிலரை எடுத்து
அலசிப்பார்த்ததில்
சிந்தனைக்குள் உருவெடுத்த சில வரிகள்!

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள் ,மதுரை -14