நாங்கள் சாவதில்லை

நாங்கள் சாவதில்லை

நாங்கள் சாவதில்லை ஆபகூக் 1:12

ஒரு சபைக்காக அந்த சபையின் போதகரோடு இணைந்து ஜெபித்தப் போது கர்த்தர் கொடுத்த அற்புதமான வார்த்தை. உங்களை நிச்சயம் இந்த வார்த்தை பெலப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

கர்த்தர் ஆபகூக் கொண்டு சொன்ன வார்த்தை. தேசத்தில் ஒரு பிரமிக்கத்தக்க கெடிதும் பயங்கரமான ஒரு சம்பவம் நடக்கும். அது நியாயதீர்ப்பின் சம்பவம். ஆனால் கர்த்தர் பரிசுத்தமுள்ளவர் ஆகையால் நாங்கள் சாவதில்லை என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இந்த ஆபகூக். நமக்கும் இந்த attitudes தேவையாக இருக்கிறது. எனவே,

நாம் இந்த சூழலில் சாவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

A. நம்மை குறித்து தேவ திட்டம், தேவ தரிசனம் ஒன்று உண்டு என்பதை அறிய வேண்டும். (2:2)

இயேசு கிறிஸ்து பிதா தமக்கு குறித்த எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்த பின்னர் தான் தமது ஆவியை பிதாவின் கையில் ஒப்புக் கொடுத்தார். அப்படியென்றால் நம்மை குறித்து அவர் சொன்னது நிறைவேறுகிறது வரை நம்மை கைவிடுவதில்லை. Simply we don’t die until His vision fulfills in our lives. எனவே கர்த்தர் தந்த தரிசனத்தை எழுதி வையுங்கள். பிறர் வாசிக்க தீர்க்கமாக குறித்து வையுங்கள். அது முடிவில் நிச்சயம் நடக்கும். அது நடக்கிறது வரை நாம் சாவதில்லை.

B. தரிசனம் தாமதித்தால் கூட அதற்கு காத்து இருக்க வேண்டும். (2:3)

தரிசனம் நிறைவேற பொறுமை வேண்டும். அதற்கு உரிய பெலன் வேண்டும். அதற்கு உரிய கிருபை மற்றும் resources வேண்டும். அதற்கு உரிய ஆயத்தம் வேண்டும். இவற்றை எல்லாம் அடையும் பகுதி தான் கர்த்தருக்கு காத்து இருத்தல். எனவே இப்போது பொறுமையோடு நிதானத்தோடு காத்து இருக்க வேண்டியே நேரம். காத்து இருந்து பெலன் பெறுவோம். தரிசனம் நிறைவேற பொறுமை வேண்டும். அது நிச்சயம் நடக்கும் தாமதிப்பது இல்லை. நமது தாமதம் ஒருபோதும் தேவ தாமதம் அல்ல. காத்து இருந்து ஆயத்தம் ஆவோம்.

C. விசுவாசத்தில் பிழைக்க கற்றுக் கொள்வோம். (2:4)

மேற்குறிப்பிட்ட காரியத்தை நம்ப கர்த்தர் மேல் விசுவாசம் வேண்டும். இந்த விசுவாசம் இல்லாமல் கர்த்தரை பிரியப்படுத்த முடியாது. இந்த நம்பிக்கை விசுவாசம் இல்லையெனில் பயம் வரும், கவலை வரும், சந்தேகம் வரும், தேவையில்லாத உணர்வுகளும் வரும். கர்த்தர் எல்லாம் பார்த்து கொள்வார் என்று அவரை நம்புவதே விசுவாசம். இந்த விசுவாசம் அவரை குறித்து கேள்விப்படுவதினாலும், அவரது வசனத்தை கேட்பதினாலும் வரும். விசுவாசம் ஜீவனையும், சந்தேகம் அழிவையும் சாவையும் கொண்டு வரும். எல்லாம் நல்லது நடக்கும் என்று நம்புவது அல்ல விசுவாசம். மாறாக என்ன நடந்தாலும் அவர் நன்மைக்கே செய்வார் என்று கர்த்தர் பேரில் வைக்கும் பற்றுதலே விசுவாசம்.

D. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக அவரில் களிகூர கற்றுக் கொள்ள வேண்டும் 3:17-18

தரிசனம் நிறைவேற துவங்கும் போது சில எதிர்மறையான சம்பவங்கள் நடக்கலாம். உடனே சோர்ந்து போக கூடாது. முறுமுறுக்க கூடாது. தவறான வழிகளில் செல்ல கூடாது. மாறாக கையளவு மேகம் தெரிந்தாலும் அவரில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவரே நமது ஜீவனும் வழியாகவும் இருக்கிறார். அவராலன்றி எதுவும் அசையாது. அவரை நோக்கி பார்த்து அவரில் களிகூற வேண்டும். அப்போது தான் நிறைவான சமாதானம் நம்மை நிரப்பும்.

இதை நம்புவோம். அவரை விசுவாசிப்போம். ஏனெனில் நாம் இந்த கெடிதும் பயங்கரமான கோர பிடியில் சாவதில்லை.

கர்த்தர் கிருபை கூட இருப்பதாக!

செலின்