ஆகா என்னா அருமை! மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை

ஆகா என்னா அருமை! மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை

” உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன் “. (ஏசாயா 44:22)

ஒரு துடிப்புள்ள சிறுவன் பல வண்ணங்களில் பட்டங்கள் செய்து, பறக்கவிட்டு மகிழ்வது அவனது வழக்கம். ஒருமுறை அவன் தன் முழு பெலனையும் செலவிட்டு நேர்த்தியாய் ஒரு அழகான பட்டத்தை உருவாக்கினான். பின்னர் அதை வானத்தில் பறக்கவிட்டான். ஆகா என்னா அருமை! மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறக்கிறதே என்று மகிழ்ச்சியில் திழைத்திருந்தான். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவனுடைய கையிலிருந்த பட்டத்தின் கயிறு பெருங்காற்றினால் அறுந்து போய்விட்டது. பட்டம் மிக வேகமாய் பறக்க ஆரம்பித்தது. பதட்டத்தோடு விரைவாய் பட்டத்தை பிடித்துக்கொள்ளும்படி ஓடினான். ஆனாலும் பட்டம் வெகு தொலைவிற்கு போய்விட்டதால் அவனால் அதை பிடித்துக்கொள்ள முடியவில்லை. பல நாட்கள் திட்டமிட்டு வடிவமைத்த பட்டம் அவன் கையை விட்டு நழுவியது என்று துடித்தான்.

மறுநாள் அருகிலிருந்த காட்டினுள் சென்று பட்டத்தை தேடினான். அங்கே பெரிய முள்மரத்தில் பட்டம் மாட்டி தொங்கி கொண்டிருப்பதை பார்த்தான். அவனது உள்ளம் உடைந்தது. ஐயோ, நான் உருவாக்கிய பட்டத்திற்கோ இப்படிப்பட்ட பரிதாப நிலை என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது பட்டமானது, ஐயோ முள் என்னை குத்துகிறது யாராவது என்னை காப்பாற்றமாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு இருப்பதைப்போலவும் பட்டம் தன்னை நோக்கி கதறுவதைப்போலவும் எண்ணிப் பார்த்து கண்கள் கலங்கினான். இந்த பட்டத்தை விட்டு போக மனமில்லை. மரம் ஏற துணிந்தான். மரம் முள் மரமாக இருந்ததால் இவன் கை, கால், முதுகு என குத்தியது. இரத்தம் சொட்ட அதை பொருட்படுத்தாமல் நான் உருவாக்கிய பட்டத்தை எப்படியாகிலும் எடுத்துவிட வேண்டுமென்று தீவிர முயற்சிக்கு பின் அதை எடுத்தான். அவன் உடலெல்லாம் இரத்தம் வடிந்து கொண்டிருக்க, வேதனை ஒருபுறம் இருக்க, அவன் முகத்திலோ ஒப்பற்ற மகிழ்ச்சி. காரணம் தான் உருவாக்கிய பட்டத்தை இரத்தம் சிந்தி மீட்டெடுத்துவிட்டேன் என்ற ஆத்மதிருப்தி.

என் அருமை தேவஜனமே, இதைப்போலத்தான் நாம் செய்த சிறு சிறு பாவங்கள் தேவனை விட்டு நம்மை பிரித்தது. ஆனாலும் நமக்காக இயேசு தம் இரத்தத்தை சிந்தி ஜீவனைக் கொடுத்து நம்மை பாவங்களிலும் சாபங்களிலும் இருந்து மீட்டெடுத்தார். மனிதன் தான் உருவாக்கின சாதாரண உருவாக்கத்திற்கே இத்தனை பிரயாசப்படுவான் என்றால், தேவன் தாமே தம் குமாரனை விலைகிரயமாக கொடுத்து மீட்டெடுத்த மனிதனுக்காக எவ்வளவாய் கிரியை செய்வார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்படியாகவே தேவன் உங்களையும் மீட்டெடுக்க வேண்டுமானால் இன்றே உங்கள் பாவங்களை தேவனிடமாய் அறிக்கைசெய்து அதை விட்டுவிட்டு அவரின் பட்சமாக தேவனிடத்தில் வாருங்கள். அவரும் இன்றே உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை பாவ சாபங்களுக்கு விலகளித்து மீட்டெடுக்க ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் ஆயத்தமா?. ஆமென்!

இறைபணியில் என்றும்,

மக்னாயீம் ஊழியங்கள்,
திருநெல்வேலி.
7010548240,9245400200.