இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு எதை வைத்துப் போனார்?

நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம்.

A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார்.

நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை தூக்கி நின்ற சூழலில் ராஜ்ஜியத்தின் சுவிசேமாகிய நற்செய்தியை விட்டு சென்றார். அவற்றை பிரசங்கம் செய்ய கட்டளை இட்டு சென்றார். அதோடு விட்டு விடாமல் அந்த சுவிசேஷத்தின் பரிகாரியாக சிலுவையில் இரத்தம் சிந்தி, மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பி அதை சாட்சியாக, உபதேசமாக அவர் கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் அறுவிக்க அவற்றை சீடர்களிடம் விட்டு சென்றார். (What is the message that we leave to the next generation?)

B. சமாதானத்தை வைத்துப் போனார்.

பிரச்சனை, கலக்கம், பயம், நடுக்கம் போன்ற சூழல் இருந்த போதும் தமது சமாதானத்தை சீடர்களுக்கும் ஏன்? நமக்கும் விட்டு சென்றார். சிலரோ இருந்தும் கெடுத்து செத்தும் கெடுத்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் பிரச்சனையை அதாவது குழப்பத்தை விட்டு செல்லாமல் சமாதானத்தை விட்டு சென்ற இயேசு கிறிஸ்துவின் வழி எத்தனை மென்மையான ஒன்று.

C. மாதிரியை வைத்துப் போனார்.

எல்லாவற்றிலும் மாதிரியை வைத்துப் போனார். எவற்றில் எல்லாம் மாதிரி?

அன்பில் மாதிரி. அவர் அழிக்க வல்லவராக இருந்தும் தமது அன்பினால் தன்னையே தியாகம் செய்து மாதிரி வைத்துப் போனார். முடிவு பரியந்தம் அன்பு வைத்தாராம்.

ஒன்றாக இருப்பதில் மாதிரி தானும் பிதாவும் ஒன்றாக இருப்பது போல சீடர்களும் ஒன்றாக இருந்து கிரியை செய்ய திருத்துவ ஒருமைப்பாட்டை வைத்துப் போனார். அப்படியே பிதாவின் நமத்தை, மகிமையை வெளிப்படுத்துவதே தன் கடமை என்று உணர்ந்து மாதிரியை வைத்துப் போனார்.

பிதா கட்டளையிட்ட தேவ சித்தம் செய்வதில் மாதிரி பிதாவின் சித்தம் செய்வதே எனது போஜனம் என்று அவற்றை நிறைவேற்றி, தாம் கட்டளையிட்ட வார்த்தைகளின் படி செய்யவும் அவைகளில் நிலைத்து இருக்கவும் மாதிரி வைத்துப் போனார்.

சத்தியத்தில் மாதிரி எழுதப் பட்ட வேத வாக்கியங்கள் அனைத்தும் தன் வாழ்வில் நிறைவேற்றி வேத வாக்கியங்களில் மாதிரி வைத்துப் போனார். அந்த சத்தியமாகவே வாழ்ந்தார். அதுவே விடுதலை என்பதை விசுவாசிக்க விட்டு சென்றார்.

ஜெபத்தில் மாதிரி அதிகாலை, மதியம், சாயங்காலம், இராமுழுவதும் எல்லா சமயத்திலும் ஜெபித்து மாதிரியை வைத்துப் போனார்.

பரிசுத்த மனோபாவத்தில் மாதிரி ஒரு அடிமையை போல விட்டுக் கொடுத்து, தம்மை வெறுமையாக்கி சீடர்களின் கால்களை கழுவி மாதிரியை வைத்துப் போனார். வாக்குவாதம் சண்டை போன்ற சச்சருவுகளுக்கு அப்படியே முற்றுப்புள்ளி வைத்து போனார். தன்னில் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா? என்று சவால் விட்டு தமது பரிசுத்த மாதிரியை வைத்துப் போனார்.

பாடுபடுகிறதில் மாதிரி தாம் அத்தனை வல்லமை பெற்றவராக இருந்தும், அவமானம் நிந்தை பாடுகள் வேதனைகளை சகித்து, பொல்லாப்பை, பெலவீனங்களை சுமந்து மாதிரியை வைத்துப் போனார். பாடுகள் நடுவிலும் பாவம் செய்யாதவராக மாதிரியை வைத்துப் போனார்.

D. வாக்குதத்தத்தை வைத்துப் போனார்.

இயேசு கிறிஸ்து தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை வாக்குப் பண்ணி சென்றார். அதோடு பரலோக ராஜ்யத்தில் ஸ்தலத்தை வாக்குத்தத்தம் தந்து சென்றார். அதோடு நித்திய ஜீவனையும், பிரதிபலன், அவரோடு உள்ள ஆளுகை மற்றும் rewards களையும் வாக்குப் பண்ணி சென்றார்.

E. கட்டளையை வைத்துப் போனார்

உலகம் முழுவதும் போய் சுவிசேஷம் அறிவிக்கவும், ஞானஸ்நானம் கொடுக்கவும், சீடர்கள் ஆக்கவும் கட்டளை கொடுத்து, போவதற்கு உரிய அதிகாரம் தந்து அவரை விசுவாசித்தால் அவரை விட பெரிய காரியங்களை செய்ய முடியும் என்று ஊக்கத்தையும் விட்டு சென்றார்.

F. ஆசீர்வாதத்தை வைத்துப் போனார்

தாம் வானத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது தம்மை நோக்கியிருந்த சீடர்களை தமது கைகளை உயர்த்தி ஆசீர்வதித்து சென்றார். என்றும் அவர் நம்முடன் இருக்கும் அர்த்தத்தில் அவரது பிரசன்னத்தை அவரது சமூகத்தை, அவரது கிருபையை, அவரது அருளை வைத்துப் போனார்.

G. நம்பிக்கையை வைத்துப் போனார்

தம்மையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும், தமது சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டால் அதை விசுவாசித்தால் அவர்கள் பிள்ளைகள் என்றும், தாமே உலகின் இரட்சகர் என்றும் தாம் இந்த உலகில் திரும்ப வருவேன் என்றும் ஆயிரம் வருடம் இந்த உலகில் தாம் ஆட்ச்சி செய்வேன் என்றும். தமது வருகையின் நம்பிக்கையை விட்டு சென்றார். அப்போது நடக்கும் அடியாளங்கள் என்ன என்றும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஜெபிக்க வேண்டும் என்றும் நம்பிக்கை ஊட்டி சென்று உள்ளார்.

இப்படிபட்ட நற்காரியங்களை விட்டு சென்ற இயேசு கிறிஸ்துவே வழியும் சத்தியமும், ஜீவனும் ஆக இருக்கிறார். அவரே அப்படியே இந்த உலகில் ஒரு விசை மாம்சத்தில் வந்தார். இனி அவர் ராஜரீக சாயலில் வருவார் ஏனெனில் அவரே மகத்துவமானவர். ராஜாதி ராஜா! சர்வ வல்லவர். அவர் கிருபை என்றும் உள்ளது.

செலின்