இக்கால ஊழியராயிருந்தால் …..!

இக்கால ஊழியராயிருந்தால் …..!

மாற்கு 9- ம் அதிகாரம்
மகிமையான அதிகாரம்

 
இயேசு மறுரூபமடைதல் பற்றி
இதில் எழுதப்பட்டுள்ளது

மறுரூபம் என்பது
மலையுச்சிக்குப் போனபின்

நடந்த ஓர் மகிமையான
நிகழ்வு
(மாற்கு 9:2)

பேதுருவையும்,
யாக்கோபையும்,
யோவானையும்
அழைத்தவுடன்
தரையிலேயே மறுரூபமாகிக்
காண்பிக்கவில்லை.


உடனடி
மறுரூபம் ஏதுமில்லை

உயர்ந்த மலையின்மேல்
அவர்களைத் தனியே
கூட்டிக்கொண்டுபோய்,
அவர்களுக்கு முன்பாக
மறுரூபமானார்.


கானானுக்குள் நுழைய
முடியாவிட்டாலும்
(உபாகமம் 34:5)
மகிமையில்
கானானுக்குள் மோசே
காணப்பட்டார்.


உயர்ந்த மலையின்மேல்
ஏறிச் சென்றபின்
ஒரு குறிப்பிட்ட இடத்தில்
குறிக்கப்பட்ட வேளையில்
நடந்த ஒரு அற்புத மறுரூப நிகழ்வு

இதை தனது
மூன்றரை வருட ஊழியத்தில்
ஒரே ஒரு முறை
செய்து காட்டினார்


இக்காலத் தலைவராய் இருந்தால்?
அல்லது ஊழியராயிருந்தால்?

யோசித்துப் பார்த்தேன்
 
உயர்ந்த மலைக்கு 
மாதத்திற்கு ஒருமுறை
கூட்டிக்கொண்டுபோய்
மறுரூபமாகிக் காண்பிப்பார்!


பின்னர்
நாளடைவில்
இதற்கு ஒரு கட்டணம் அல்லது
காணிக்கை நிர்ணயம்
செய்யப்பட்டு,
கிளை அலுவலகங்கள்
பட்டணங்கள் தோறும்
ஏற்படுத்தப்பட்டு,


தரிசனச் சீட்டுகள்
அச்சடிக்கப்பட்டு  
வஸ்திரத் தொங்கல்கள்
எண்ணெய் மற்றும் கைகுட்டைகள்
விற்கப்படும்
நிலவரத்திற்குப்
போய்விடும்.

இயேசு முற்றிலும் மாறுபட்டவர்
ஆனால், அவர் நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவர்
( எபிரெயர் 13:8)

முதல்வனாயிருக்க விரும்புகிறவன்
என்ன செய்ய வேண்டும் என்பதை
இயேசுவே சொல்லியிருக்கிறார்.


“எவனாகிலும் முதல்வனாயிருக்க
விரும்பினால் அவன் எல்லாருக்கும்
கடையானவனும், எல்லாருக்கும்
ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் “
(மாற்கு 9:35 ).

ஊழியத்தின் பாதையில்
உயர உயர ஏறிச் செல்லும்போதுதான்
ஆண்டவருடைய மகிமையான
அனுபவங்களை பார்க்கமுடியும்


தமிழ்நாட்டின்
தென் மாவட்டங்களில் ஒன்றான
தூத்துக்குடி மாவட்டத்தின்
சாயர்புரம்
என்ற கிராமத்தில் பிறந்து

A.G. Bible College’ல் பயின்று
தமிழ்நாட்டின் தலைநகரமாம்
சென்னையில் சின்னமலையில்
A.G. சபையை ஸ்தாபித்து


55 ஆண்டுகளை ஊழியத்தில் கடந்து
இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள
சர்வ தேச A.G. சபைகளின்  
தலைமை ஸ்தாபனத்தில்
செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள
Rev. D. Mohan பாஸ்டர் அவர்களை வாழ்த்துவதில்  

Tamil Christian Network – மற்றும்
ஆறுதல் வானொலி ஊழியங்கள்
பெருமகிழ்ச்சியடைகிறது

200 தேசங்களில் உள்ள
A.G. சபைகளின் தலைவர்  
6 கோடி விசுவாசிகளின் தலைவர்


இந்த மகிமையான உயர்வைக் காண
55 ஆண்டுகள் ஊழியத்தின் பாதையில்
பயணித்து வந்துள்ள,
நமது தமிழ் மண்ணில் பிறந்த தலைவர்
பாஸ்டர் மோகன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்


உலகத்தைக் கலக்குகிறவர்கள்
இங்கேயும் (அமெரிக்காவிற்கும்)
வந்திருக்கிறார்கள்”

(அப்போஸ்தலர் 17:6)

நல்லாசான் Rev. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,
Director – Literature Department
Tamil Christian Network (www.tcnmedia.in)