நீங்கள் இப்படி செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள் ; உங்கள் பாவம் உங்களை தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். எண் : 32 : 23

இந்தக் குறிப்பில்பாவம் என்றால் என்ன என்பதைக் குறித்து வேதம் சொல்லும் வசனங்கள் உண்டு அதை நாம் இங்கு சிந்திக்கலாம். நமக்கு எவைகளெல்லாம் பாவம் என்று நாம் அறியாதிருக்கிறோம். ஆகையால் வேதம் சொல்லும் பாவங்களை இந்த குறிப்பில் அறிந்து அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம். பாவத்தின் சம்பளம் மரணம். ஆதலால் பாவத்திலிருந்து விலகி நம்மைக் காத்துக் கொள்வோம்.

1. பாவம் என்பது மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே. நீதி : 21 : 4

2. பாவம் என்பது தீயநோக்கம் பாவமே. நீதி : 24 : 9

3. பாவம் என்பது விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே. ரோமர் : 14 : 23

4. பாவம் என்பது பாரபட்சம் செய்தல் பாவம். யாக் : 2 : 9

5. பாவம் என்பது நன்மை செய்யாமற் போனால் பாவம். யாக் : 4 : 17

6. பாவம் என்பது நியாயப்பிரமாணம் தை மீறுகிறதே பாவம். 1 யோவா 3 : 4

7. பாவம் என்பது அநீதியெல்லாம் பாவமே. 1 யோவா 5 : 17.

இந்தக் குறிப்பில் பாவம் என்றால் என்ன என்பதைக் குறித்து வேதவசனங்கள் மூலம் அறிந்துக்கொண்டோம். தொடர்ந்து வேதம் எச்சரிக்கும் சகல பாவத்திற்க்கும் நம்மை விலக்கிக்கொள்வோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur