கேள்வி : நீங்கள் வெளியிட இருக்கும் ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன?

பதில் : கிருபை, தயை, இரக்கம் இந்த மூன்று வார்த்தையும் பொருள் புரிந்து படிக்கலாம்.

எப்படின்னு கேட்கிறீங்கதானே!

இரக்கம் – எபிரெய வார்த்தை ராகம்

தயை எபிரெய வார்த்தை கெஸெட்

கிருபை எபிரெய வார்த்தை கேன்.

இந்த கெஸெட் என்ற வார்த்தை தமிழில் பல இடங்களில் கிருபை என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் கிருபை என்பதற்கான எபிரெய வார்த்தை கேன் என்பதாகும்.

உதா.

ஆதி. 20: 13 – “…….தயை (கெஸெட்) என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன்.

சங். 21:7 ஏனெனில் ராஜா கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் (கெஸெட்) அசைக்கப்படாதிருப்பார்.

சங். 23:6 – …..நன்மையும் கிருபையும் (கெஸெட்)

சங். 31:7 தேவனே உம்முடைய கிருபை (கெஸெட்) எவ்வளவு அருமையானது.

தானியேல் 1:9 – தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் (கெஸெட்), இரக்கமும் (ரகம்) கிடைக்கும்படி

அடைப்புக்குறிக்குள் போடப்பட்ட கெஸெட் என்ற வார்த்தை பஏ. எங்கெல்லாம் வருகிறது என்பதைக் கண்டுபிடித்து சேர்த்துள்ளோம். அதே போன்று ராகம், கானான் ஆகிய வார்த்தைகளையும் இணைத்துள்ளோம்.

இந்த ஓராண்டு வாசிப்பு வேதாகமத்தை 2021 அக்டோபர் 31-இக்குள் ரூ. 375/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: போதகர் செ. டேவிஸ்,

கைப்பேசி & வாட்ஸ்அப் & G-Pay : +91 9843608553