▪️ஐயோ இந்த செய்தி உண்மையாகவே இருக்கக்கூடாது என வேண்டும் மக்களே அதிகம்.
ஏனென்றால் அவர்களுக்கு வரும் இழுக்காக அல்ல , கிறிஸ்தவ சமுதாயத்திற்கே ஏற்பட்டுள்ள அவமானமாக கருதுகிறார்கள்.

▪️எங்கள் அண்ணன் அப்படிச்செய்திருக்கவே மாட்டார் இது முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று உறுதியாக நம்புகின்ற, வாதிடுகிற மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

▪️அடிக்கடி செய்திகளில் அடிபட விரும்புகின்ற கிறிஸ்தவ பிரபலங்களால் நேரடியாக பலன் பெற்றவர்கள் என்ற ஒரு கூட்டமும் உண்டு.
இவர்களின் நிலை மிக பரிதாபமானது. ஏனென்றால் தங்கள் தலைவர்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள யுத்தம் வானமண்டலங்களில் ஏற்பட்ட கூட்டுச்சதி எனக் கருதி அதற்கென விசேஷித்த உபவாச ஜெபங்கள் இனி நடத்த வேண்டும்..

▪️பிரபலங்களால் பாதிக்கப்பட்ட ஒரு கூட்ட ஊழியர்களும் உண்டு, அவர்கள் இது போன்ற செய்தி வந்தால் உள்ளூர மகிழ்கிறார்கள்.
ஜெபத்திற்காக சொல்கிறேன் என்று சொல்லியே இரகசியமாக பரப்பிவிடுகிறார்கள்

▪️பாமர கிறிஸ்தவனின் பயம் இது குறித்து வெளிப்படையாக பேசலாமா? தேவ தூஷணமாகாதா? என்பதுதான்

▪️சிந்தனையாளர்களும் சிலர் இருக்கிறார்கள். ஏ! செய்தி வந்ததுதான் தேவ நாமத்திற்கு அவமானம். அது ஏன் வந்தது? எப்படி அதை தவிர்க்கலாம் என்று கூட விவாதிக்க கூடாதா என பொருமுகின்றனர்.

▪️பரிசுத்தவான்கள் என்னும் ஒரு கூட்டம் இருக்கிறது…ஜெபத்திலே போட்டுவைங்கய்யா எல்லாம் சரியாயிடும் என்ற விசுவாசத்துடன் இருக்கிறார்கள்.

▪️ஒரு சர்ச்சை வருகிறது..இரண்டு மாதங்கள் பேசும் பொருள் ஆகிறது. இதுவும் கடந்து போகும் என்ற தத்துவப்படி எதுவும் மறந்து விடுகிறது…

▪️மதமாற்றக்கும்பல், காணிக்கைகளை கொள்ளை அடிக்கும் கும்பல் என்ற வசவுகள் புதிதல்ல. ஆனால் இன்று வலுப்பட இந்த சம்பவங்கள் ஒரு காரணமாயிற்று.

▪️உண்மையான பாதிப்பு யாருக்கு?
50 பேரை வைத்து கொட்டடித்து சபை நடத்தும் , காணிக்கை வாங்கும் ஏழை ஊழியர்கள் தான். அந்தளவு
காணிக்கையை கொச்சைப்படுத்தி பரிகாசம் செய்யும் ஏராளமான மீம்ஸ்கள் வந்துவிட்டது.

▪️ஏழைக்கொரு நீதி வசதிபடைத்தவனுக்கு ஒரு நீதி என்றிருக்கும் மட்டும் இது போன்ற சர்ச்சைகள் ஓய்வதில்லை.

?? அடுத்த தலைப்புச்செய்தி வரும் போது மீண்டும் திண்ணையில் அமர்ந்து அலசுவோம்..‌.

வேதனையுடன் .‌..உங்களில் ஒருவன்.

Forward: Rev. Kalai Devadasan